Published:Updated:

'நியூ டிசைன்... நியூ டிரெண்ட்!'

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன், ஆ. முத்துக்குமார்

'நியூ டிசைன்... நியூ டிரெண்ட்!'

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன், ஆ. முத்துக்குமார்

Published:Updated:
'நியூ டிசைன்... நியூ டிரெண்ட்!'

பொதுவாக சினிமா, சீரியல்களைப் பார்த்து பிளவுஸ் டிரெண்ட் ஃபாலோ செய்வது நம் பெண்களின் வழக்கம். அந்த வரிசையில், சன் டி.வி-யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்’ சீரியலில் 'சத்யா’வாக வரும் வாணி போஜன் அணிந்து வரும் பிளவுஸ்கள்தான், இப்போது ஹிட்! அவற்றை டிசைன் செய்து கொடுக்கும், சென்னை, உஸ்மான் ரோட்டில் உள்ள 'என்.எஃப். ஸ்டுடியோ’ உரிமையாளரும், ஃபேஷன் டிசைனருமான முத்துக்குமரன், தான் உருவாக்கிய சில ஃபிரெஷ் டிசைன்களுடன் இங்கே பேசுகிறார்.

''தெய்வமகள் சீரியல்தான் என்னோட முதல் சீரியல் வாய்ப்பு. முதல்ல 'சத்யா’ கேரக்டரை முழுமையா உள்வாங்கிகிட்டேன். என்ன படிக்கிறாங்க, எங்க வேலை செய்யப் போறாங்க, திருமணத்துக்கு அப்புறம் வாழவிருக்கிற வீட்டோட சூழல் என்ன... இப்படி ஒவ்வொண்ணையும் யோசிச்சு, பார்த்துப் பார்த்து டிசைன் செய்து கொடுத்தேன். இன்னிக்கு அதைப் பார்த்துட்டு நிறைய பேர் ஆர்டர் கொடுக்க வர்றாங்க!'' என்று பூரித்தவர், தொடர்ந்தார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நியூ டிசைன்... நியூ டிரெண்ட்!'

''பிளவுஸ் விஷயத்தில் பெண்களைத் திருப்திப்படுத்துறது சுலபமில்ல. சிலர் ஸ்டார்கள் போடும் டிசைன்களை விரும்பிக் கேட்பாங்க. ஆனா, அது எல்லாரோட உடல் வாகுக்கும் பொருந்திடாது. அதனால அதே டிசைனில் அவங்களோட உடல் வாகு, மனசுக்குப் பிடிச்ச மாதிரி சில மாற்றங்களை செய்து கொடுக்கணும். இன்னிக்கு கான்ட்ராஸ்ட் பிளவுஸ்தான் பலரின் விருப்பமா இருக்கு. அதனால, சேலையில் உள்ள வண்ணங்களை மட்டுமே பிளவுஸுக்குப் பயன்படுத்தாம, 'பளிச்’ நிறங்களில் டிசைன் செய்து தர்றோம். புடவை டிசைனிங்கும் செய்து தர்றோம். இதில் மூளையைக் கசக்கி வேலை வாங்குறது, பிரைடல் பிளவுஸ்தான். மேடையில் நிக்கும்போது, அந்தக் கூட்டத்திலேயே மணப்பெண் ஹைலைட்டா தெரியணும். அதுக்குத் தகுந்த ஹெவி டிசைன் பண்ணணும்.

'நியூ டிசைன்... நியூ டிரெண்ட்!'
'நியூ டிசைன்... நியூ டிரெண்ட்!'

பிரைடல் பிளவுஸ்களோட வேலைப்பாடுகளைப் பொறுத்து, 4,000 - 40,000 ரூபாய் வரைக்கும் விலை நிர்ணயிக்கிறோம். டிசைனர் பிளவுஸ்களைப் பொறுத்தவரைக்கும் 1,500 - 4,000 ரூபாய் வரை வாங்குறோம்'' என்ற முத்துக்குமரன்,

''பட்டு பிளவுஸ்களுக்கு மர பீரோதான் பெஸ்ட் சாய்ஸ். பிளவுஸ்களை மடிச்சு ஷெல்ஃப்பில் திணிக்காம, ஒரு பியூர் வொயிட் காட்டன் கிளாத்துல கவர் பண்ணி வெச்சு ஹேங்கர்ல தொங்கவிடணும். பீரோ முழுக்க துணிகளை அடைக்காம, கொஞ்சம் காற்றுக்கான ஸ்பேஸ் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். டிரை வாஷ் மட்டுமே செய்யணும்'' என்று டிப்ஸும் தந்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism