Published:Updated:

லெகிங்ஸ்... ஜெகிங்ஸ்... டிரெக்கிங்ஸ்...

ஜோ, படங்கள்: பகத்குமார்

லெகிங்ஸ்... ஜெகிங்ஸ்... டிரெக்கிங்ஸ்...

ஜோ, படங்கள்: பகத்குமார்

Published:Updated:

டீன் ஏஜ் என்றில்லாமல், எல்லா வயதுப் பெண்களுமே 'கம்ஃபர்டபிள் ஃபிட்’ என்றபடி லெகிங்ஸ் மோகத்தில் மூழ்க... இந்தியாவின் 'ஹிட் உடை' என்றாகியிருக்கிறது லெகிங்ஸ்! இத்தகைய லெகிங்ஸ் ஃபேஷன் பற்றி பேசும் சென்னையைச் சேர்ந்த இளம் ஆடை வடிவமைப்பாளர் லட்சுமி சூர்யா, ''லெகிங்ஸ்... பெண்களுக்கு மிக மிக வசதியான உடை. வியர்வையை உறிஞ்சுவதால், கால் இடுக்குகளில் அரிப்பு அவஸ்தை இல்லை; வேகமாக நடக்கலாம்; வண்டியில் பறக்கலாம்; குறைவான விலையில் வாங்கலாம்... இப்படி பலவிதங்களிலும் சௌகரியமான உடை. இதில் மூன்று வகை இருக்கிறது. லெகிங்ஸ், ஜெகிங்ஸ் மற்றும் டிரெக்கிங்ஸ்.

லெகிங்ஸ்... ஜெகிங்ஸ்... டிரெக்கிங்ஸ்...

எந்த டிரெஸ் போட்டாலும், அன்ஈஸி என்று ஃபீல் செய்யாமல், இது நமக்கு நன்கு பொருந்தியிருக்கிறது என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டும். யாராவது ஏதாவது நினைப்பார்களோ என்கிற தயக்கம் மனதில் ஓடிக்கொண்டிருந்தால்... எந்த இடத்திலும் ஃப்ரீயாக இருக்க முடியாது. ஃபேஷனுக்கு வயதே கிடையாது. நம்பிக்கையாக டிரெஸ் செய்தால், 80 வயதிலும் டிரெண்டி ஆடைகள் அணியலாம்'' என்றபடி ஒவ்வொரு ஆடை பற்றியும் விவரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லெகிங்ஸ்: 95% காட்டன், 5% ஸ்பேன்டெக்ஸ் இரண்டும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டது. காட்டன், அதன் இயல்பான இதத்தைத் தரும். ஸ்பேன்டெக்ஸ், 'ஸ்ட்ரெட்ச்’ தன்மை கொடுக்கும். அதன் அளவைவிட பத்து மடங்கு வரைகூட இழுக்கலாம்.

ஜெகிங்ஸ்: இதுவும் காட்டன், ஸ்பேன்டெக்ஸ் கலவையே. ஜீன்ஸ் மற்றும் லெகிங்ஸ் இரண்டையும் போட்டுக் கலக்கியது போலத்தான் இதன் தோற்றம். பார்ப்பதற்கு ஸ்கின்னி ஃபிட் ஜீன்ஸ் போட்டது போல் இருக்கும். ஆனால், லெகிங்ஸ் போட்ட உணர்வு இருக்கும். இதை அணியும்போது, லெங்த்தியான டி-ஷர்ட் போடலாம்.

டிரெக்கிங்ஸ்: ஃபார்மல் காட்டன் டிரவுசர் மெட்டீரியலில் லெகிங்ஸை சேர்த்தால், டிரெக்கிங்ஸ். இதை ஆபீஸ் போகும் பெண்கள்கூட அணியலாம். மேட்சிங்காக ஃபார்மல் ஷர்ட், குர்தி போட்டுக்கொள்ளலாம். பார்ப்பதற்கு மெஜஸ்டிக் லுக் கொடுக்கும்.

லெகிங்ஸ்... ஜெகிங்ஸ்... டிரெக்கிங்ஸ்...

ஒவ்வொரு உடல்வாகுக்கும் பொருந்தும் லெகிங்ஸ் மற்றும் டாப் ரகங்கள்...

டீன் ஏஜ் பெண்கள்: பிரின்டட், கலர்ஃபுல், ஃபங்கி லெகிங்ஸ்... தளர்வான கேஷ§வல் டாப். ரிச் லுக் கிடைக்கும்.

பருமனான தேகம்: இடுப்பு, தொடை பகுதிகள் பெரிதாகத் தெரியும். எனவே, நீளமான டாப் அல்லது ஸ்லிட் இல்லாத டாப், அனார்கலி டாப் அணியலாம்.

மெலிதான தேகம்: லெகிங்ஸ் போட்டால் இன்னும் மெலிதான தோற்றமே கிடைக்கும். சற்று தளர்வான லாங் டாப் போடலாம். ஹிப்பி பிரின்ட், ஜீப்ரா பிரின்ட், டிரெடிஷனல் பிரின்ட், அமெரிக்கன் பிரின்ட், பிரின்டட் லெகிங்ஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றை அணியும்போது, பிளெய்ன் டாப் நல்ல சாய்ஸ்.

குறைவான உயரம்: எல்லா வகை லெகிங்ஸும் பொருந்தும். ஷார்ட் டாப் போடுவது, உயரத்தைக் கூட்டிக் காட்டும்.

உயரமானவர்கள்: வெஸ்டர்ன் டாப்ஸ், கொஞ்சம் தளர்வான டாப்ஸ் அணியலாம்.

சிலருக்கு கால்கள் நீளமாகவும், மேல் உடம்பு உயரம் குறைவாகவும் இருக்கும். இத்தகையோர் லெகிங்ஸ் போடும்போது, நீளமான, வெர்டிகிள் டிசைன் உள்ள டாப்ஸ் போடலாம். சிலருக்கு கால்கள் உயரம் குறைவாகவும், மேல் உடம்பு நீளமாகவும் இருக்கும். இவர்கள் ஷார்ட் டாப் போடும்போது, கால்களை நீளமாகக் காட்டும்!

லெகிங்ஸ்... ஜெகிங்ஸ்... டிரெக்கிங்ஸ்...

பாரலோஸ்

புதிதாக பாரலோஸ் என்றொரு ஆடை வந்திருக்கிறது. இரண்டு பக்கமும் சரிசமமாக, சற்று அகலமாக, அதேசமயம் நேராக இருக்கும். இதில் இன்னொரு வகை, இடுப்பிலிருந்து நேராக கால் பகுதியில் எலாஸ்டிக் வைத்தும் கிடைக்கிறது. உயரம் மற்றும் உடலின் வாகைப் பொறுத்து, இதைத் தேர்ந்தெடுக்கலாம். டீன் ஏஜ் பெண்கள், ஃபங்கியாக, கலர்கலராக, பெரிய பெரிய பூக்கள் கொண்ட டிசைன்களுடன் போட்டால் அழகா இருக்கும். ஷார்ட் குர்தியை டாப்பாக அணியலாம். நடுத்தர வயதினர், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஷார்ட் குர்தியைவிட, லாங்க் குர்தி வயதுக்குரிய அழகைத் தரும்.

40 வயது தாண்டிய பெண்கள்கூட லெகிங்ஸ் போடுகிறார்கள். இவர்கள் பிளெய்ன் லெகிங்ஸ் அணியாமல் அனிமல் பிரின்ட், கெமோஃப்ளெட்ஜ் பிரின்ட், பொல்கா டாட்ஸ், போல்ட் பிரின்ட் என்பது மாதிரியான டிசைன் உள்ள லெகிங்ஸ் போடலாம். லாங் டாப்ஸ், அனார்கலி டாப்ஸ் இவர்களுக்கு நல்ல சாய்ஸ்.

நடுத்தர வயதினருக்கு ஜெகிங்ஸ் பொருத்தமாக இருக்காது.