Published:Updated:

“டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்தியதே எம்.ஜி.ஆர்.தான்!

ஃபேஷன் அன்றும் இன்றும்... வே.கிருஷ்ணவேணி, படம்: ஆ.முத்துக்குமார்

“டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்தியதே எம்.ஜி.ஆர்.தான்!

ஃபேஷன் அன்றும் இன்றும்... வே.கிருஷ்ணவேணி, படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:

வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும், பழையதாகிக்கொண்டே வருகிறது. இதில் ஃபேஷன் துறை, மிக வித்தியாசமானது. புதிது புதிதாக அப்டேட்ஸ் சேர்ந்துகொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, கூடவே நம் முந்தைய தலைமுறையின் ஸ்டைலே, கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களுடன் புது ஃபேஷனாக அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது மறுபக்கத்தில்!

ஃபேஷன் உலகை நம்மவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பது சினிமாதான். இந்த சினிமா ஃபேஷன் உலகத்தின் நேற்று மற்றும் இன்று பற்றி பேசுகிறார்கள்... இத்துறையில் பிரபலமான இருவர்.

“டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்தியதே எம்.ஜி.ஆர்.தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''1960-களை ஃபேஷனுக்கான பொற்காலம்னு சொல்லலாம்'' என்கிறார், 'பிளாக் அண்ட் வொயிட்' திரைப்பட காலத்திய ஃபேஷன் டிசைனர் முத்து. இவர், 1953-ம் வருடம் முதல் எம்.ஜி.ஆருக்கு காஸ்ட்யூம் டிசைனராகப் பணிபுரிந்தவர்.

''உச்சத்தலையில உயரமா 'பீஹைவ்’ (Beehive) வெச்ச ஹேர்ஸ்டைல் இருக்கும். இப்போவெல்லாம் புடவையோட முந்தியை தாராளமா விட்டுக் கட்டுறாங்க. ஆனால், இதுல பாதிதான் இருக்கும் அந்தக் காலத்துல. பின்புறம் அழகா தெரியணும்ங்கிறதும் இதுக்கு ஒரு காரணம். குள்ளமான ஹீரோயின்கள், நீளமான முந்திவிட்டா இன்னும் குட்டையா தெரிவாங்கங்கறது இன்னொரு காரணம். பிளவுஸோட பின்கழுத்துப் பகுதி அளவாதான் இறங்கியிருக்கும்.

தமிழ் சினிமாவில் ஃபேஷனை அதிகமா உள்ளே கொண்டு வந்தவர்... எம்.ஜி.ஆர். அவருக்கு குண்டு காயம் பட்டப்போ கழுத்தில் ஏற்பட்ட தழும்பை மறைக்க, பெரிய காலர் வைத்த சட்டைகளை அவரே டிசைன் பண்ணச் சொன் னார். பிறகு, அதுவே ஃபேஷனாகிப் பரவிடுச்சு. அதேபோல, 'கச்சம் பேன்ட் டிசைனை தெலுங்குகாரங்கதான் அழகா செய்வாங்க. நீயும் அந்தமாதிரி உருவாக்கு’னு சொல்வார். 'ஆனந்த ஜோதி’ படத்தில் எம்.ஜி.ஆர் லூஸா டி-ஷர்ட் போட்டு வருவாரு. அதுதான் நம்மாட்களோட டி - ஷர்ட்களுக்கு முன்னோடி!'' என்று சொல்லி சிரித்தார் முத்து!

“டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்தியதே எம்.ஜி.ஆர்.தான்!

புடவையைக் கொண்டாடும் தலைமுறை!

''ஃபேஷன் என்பது உயர்தட்டு மக்களுக்கானது என்றிருந்த காலம் மாறிடுச்சு. காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், அக்ஸசரிஸ்னு தாராளமா செலவு பண்ற தலைமுறை இது'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார், பத்து ஆண்டுகளாக சினிமா ஃபேஷன் துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் வாசுகி பாஸ்கர்.

''மத்த எல்லா கலாசாரத்துக்கும் அச்சாணியா இருந்ததும், இருக்கறதுதும் நம்ம கலாசாரம்தான். உலகத்துல எங்க போனாலும் புடவை உடுத்தும்போது நமக்குக் கிடைக்கும் மதிப்பே தனிதான்! அதுதான் எனக்கு மிகவும் பிடித்த உடையும்கூட. நம்மோட பாரம்பரிய காஸ்ட்யூம்களான தாவணி, சேலை மற்றும் சுடிதார் மூணும் ஃபேஷன் சுழற்சியில் சின்னச் சின்ன மாறுதல்கள் அடையுமே தவிர, அடிப்படை மாறாது. குறிப்பா, புடவையை ஃபேஷனாக கொண்டாடுற தலைமுறை இது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மெட்டீரியல், கலர், டிசைன்னு எல்லாத்துலயும் அசத்துற புடவைகள், கேர்ள்ஸை ஈர்க்கக் காரணமா இருக்கு. அதேபோல, இப்போ எல்லாம் திருமணம், ரிசப்ஷனுக்கு மணப்பெண் உடையே ஹாஃப் சாரிதான். அதில் நிறைய வொர்க், சின்னச் சின்ன

“டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்தியதே எம்.ஜி.ஆர்.தான்!

மாற்றங்கள்னு நார்த் இண்டியன் பேட்டர்னுக்கு கொண்டுவந்து உடுத்துறாங்க. டீப் நெக், காலர் நெக், ஷார்ட் ஸ்லீவ், த்ரீ ஃபோர்த் ஸ்லீவ்னு பிளவுஸ் தைக்கறதுலதான் முன்னயெல்லாம் வெரைட்டி காட்டினாங்க. இப்போ பிளவுஸ் வேலைப்பாடுகள் செய்றது ரொம்ப பிரபலமாகியிருக்கு.

ஆண், பெண் பேதமில்லாம ஜீன்ஸ் இன்னிக்கு தேசிய உடை ஆகியிருக்கு. பெண்களைப் பொறுத்தவரைக்கும் ஜீன்ஸ் அவங்களோட பெஸ்ட் சாய்ஸா மாறினதுக்கு காரணங்கள் இருக்கு. ஒரு ஜீன்ஸ் எடுத்துட்டு நான்கு டாப்ஸ் எடுத்தா, பாட்டத்துக்கான செலவு மிச்சம், அதேநேரத்துல ஃபேஷன் ப்ளஸ் கம்ஃபர்டபிளாவும் இருக்குமே..!

பொதுவா மக்கள்கிட்ட ஃபேஷன் அப்டேட்களைக் கொண்டு சேர்க்கிற மீடியம், சினிமாதான். 'மங்காத்தா’ படத்துல இங்கிலீஷ் நிறங்களா பயன்படுத்தியிருப்பேன். நம்ம நாட்டைப் பொறுத்தவரைக்கும் ரெட், யெல்லோ, பிளாக், க்ரீன்னு எல்லாமே பிரைட் கலராத்தான் போட்டுட்டு இருக்கோம். 'லைட் கலர்களை ஏன் கொண்டு வரக்கூடாது?’னு யோசிச்சுதான், ஆங்கில சினிமாக்களில் பயன்படுத்தும் பர்ப்பிள், பேபி பிங்க், லைட் ப்ளூ நிறங்களைப் பயன்படுத்தினேன். 'மங்காத்தா’ படத்துல த்ரிஷாவுக்கு நான் டிசைன் செய்த டிரெஸ் போல வேணும்னு  பெண்கள் பலரும் கடைகளில் தேடினது தெரிய வந்தப்போ, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. சில நாட்கள் கழிச்சி, நான் பண்ணின அதே டிசைனை 'குளோபஸ்’ல பார்த்தப்போ, புதுமையான விஷயங்களுக்கு மக்கள் தரும் அங்கீகாரத்தை உணர முடிஞ்சுது'' என்று குஷியாகிறார் வாசுகி பாஸ்கர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism