'டிரெண்டியா டிரெஸ் பண்ணணும், கேம்பஸ்ல எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கணும்!’

- இந்த ஒரே ஒரு முக்கியக் கொள்கையோட காலேஜ் போயிட்டிருக்கிற சென்னை கேர்ள்ஸ் சிலர்கிட்ட ஒரு சின்ன சாட்!

'நான் ரொம்ப ஒல்லி. எங்கம்மா எனக்குப் பார்த்து பார்த்து கிலோ கணக்கில் சாப்பாடு கொடுத்தாலும், கிராம் அளவில்கூட வெயிட் ஏற மாட்டேங்குது!''னு அலுத்துக்கொள்ளும் ஜனனி, டபுள்யூ.சி.சி (விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ்) மாணவி.

''இதை எதுக்கு இங்க சொல்றேன்னா... என் உடம்புக்கு ஃபிட் ஆகுற டிரெஸ்ஸா தேடுறதுதான் எனக்கிருக்கிற சவாலே! சுடிதார் போட்டா நைட்டி மாதிரி இருக்கும் எனக்கு. அதனால, ஜீன்ஸ், டாப்னு இறங்கினேன். அதுக்கு மேட்ச்சா, ஹேர்கட் பண்ணிக்கிட்டேன். ஹை ஹீல்ஸா வாங்கிப் போட்டேன். இதெல்லாம் சேர்ந்து என்னை காலேஜுல ஃபேஷனபிள் கேர்ள் ஆக்கிடுச்சு. ஆனா, இதுக்கெல்லாம் மாசம் 2,500 ரூபாய் வீட்டில் வாங்குறதுக்குள்ள... போராட்டம், உருட்டல், மிரட்டல்ஸ்தான்!''னு சிரிக்கிறாங்க ஜனனி.

கரெக்ட்டு, கரெக்ட்டு... மிரட்டு, மிரட்டு!

''எங்க எம்.ஓ,பி வைஷ்ணவ் காலேஜ்ல மாடர்ன் டிரெஸ் அனுமதிக்கப்பட மாட்டாது. அதனால, நான் சல்வார்ல இறங்கிட்டேன்!''னு ஆரம்பிச்ச வர்ஷா,

''ஆனாலும் அதிலும் வெரைட்டி காட்டுறதுலதானே நம்மளோட தனித்திறமை அடங்கியிருக்கு. பொதுவா ஒரு புது மாடல் மெட்டீரியலோ, டிசைனோ, பேட்டர்னோ வந்தா, எல்லோரும் அதையே வாங்கி, ஏதோ யூனிஃபார்ம் மாதிரி போட்டுட்டு வந்து போர் அடிக்க வைப்பாங்க. அதனாலேயே நான் எது மாதிரியும் இல்லாம, புதுமாதிரியான டிரெஸ்ஸா தேடித் தேடி எடுப்பேன். அப்படி ஒரு தேடல்ல கிடைச்சதுதான் ஓவர் கோட் டைப் லெஹங்கா. பொய் சொல்லல... அதை நான் காலேஜுக்குப் போட்டுட்டுப் போனப்போ 50 பேராச்சும், 'வாவ்... எங்க வாங்கினே?!’னு விசாரிச்சிருப்பாங்க. அங்க நிக்கிறா இந்த வர்ஷா!''னு கெத்து காட்டினவங்க,

''இதுக்காக மாசத்துக்கு 3,000 ரூபாய் செலவழிக்கிறதைவிட, அலைச்சலை நினைச்சாதான் அப்பப்போ அலுப்பா இருக்கும்!''னு பெருமூச்சு விடறாங்க.

மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் (எம்.சி.சி) பொண்ணு ரமண்தீப், ''நான் நார்த் இந்தியன். எங்க ஊர்ல டிரெஸ் மட்டுமில்லாம ஹேர்ஸ்டைல், மேக்கப், அக்ஸசரீஸ்னு எல்லாத்துக்குமே முக்கியத்துவம் கொடுப்போம். காலேஜ்ல சேர்ந்தப்போ, இங்க நிறைய கேர்ள்ஸ் அழகழகா டிரெஸ் பண்ணிக்கிட்டாலும், ஹேர் டூ, மேக்கப்னு மற்ற விஷயங்கள்ல கவனம் செலுத்தாததால அவங்களோட அழகு முழுமையா வெளிப்படாததை கவனிச்சிட்டிருந்தேன். அதேநேரத்துல, 'இந்தப் பொண்ணு 'டாப் டூ டோ’ அழகா பண்ணிக்குதே!’னு எல்லாரும் என்னையும் கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. குறிப்பா, என்னோட டிரெஸ்ஸை பலரும் எங்கிட்டயே வந்து அட்மையர் செய்து பேச, நானும் பெரிய டிசைனர் மாதிரி எல்லாருக்கும் டிப்ஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சு, அப்படியே காலேஜ்ல கொஞ்சம் பாப்புலர் ஆயிட்டேன்னா பார்த்துக்கோங்க''னு சிரிக்கறாங்க.

''இதையெல்லாம் சொன்னதுமே... நான் டிரெஸ்ஸுக்கு நிறைய செலவழிப்பேன்னு நினைச்சிடாதீங்க. சென்னையில தி.நகர் மாதிரி எங்க ஊர்லயும் சீப்பான விலையில் சூப்பரான டிரெஸ் அள்ளலாம். அதுவும் லேட்டஸ்ட் டிரெண்ட்டில். 1,000 ரூபாய்க்கு பர்ச்சேஸ் பண்ணினா, ஒரு மாசத்துக்கு டிரெஸ் ரெடி. இதோ இப்போ கூட ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன்... உங்களுக்கு ஏதாவது டிரெஸ் வாங்கிட்டு வரணுமா?''னு சேவை மனதோட கேட்கிறாங்க ரமண்தீப்.

- அ.பார்வதி

படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்