கேன்டீன், லைப்ரரி, ஸ்டோன் பென்ச்... இப்படி காலேஜ் கேம்பஸ்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபேவரைட் ஸ்பாட் இருக்கும்.

இதுல தங்களுக்குப் பிடிச்ச ஸ்பாட் பத்தி சொல்றாங்க, திண்டுக்கல் பார்வதீஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் மாணவிகள்.

லைப்ரரி லைஃப் ஸ்டைல்!

''லைப்ரரிக்குப் போனா, படிக்கிற பொண்ணு இமேஜ், இலவச இணைப்பா கிடைக்கும்!''

- எஸ்.திவ்யா சொல்ல, 'ஆமாம் ஆமாம்’ போட்டு தானும் சேர்ந்துக்கிட்டாங்க அபிநயா.

''லைப்ரரி ஹவர்ல, சப்ஜெக்ட் புக்ஸ் படிக்கணும்னு சொல்லித்தான் டிபார்ட்மென்ட்ல இருந்து அனுப்பி வைப்பாங்க. ஆனா, சப்ஜெக்ட் புக்ஸ் மட்டுமில்லாம... பெண்கள் பத்திரிகைகள்ல வர்ற பியூட்டி டிப்ஸையும் படிப்போம்ங்கிற உண்மை அவங்களுக்கும் தெரியும். அதிகமா லன்ச் சாப்பிட்டு அசதியா இருந்தா... இங்க வந்து ஒரு மினி தூக்கம் போடுற சுகம்... அடஅடஅடா! குசுகுசுனு பேசிச் சிரிச்சு லைப்ரேரியன்கிட்ட திட்டு வாங்காம வெளியில போனா, திருப்தியே இருக்காது எங்களுக்கு!''னு சிரிக்கிறாங்க அபிநயாவும், திவ்யாவும்!

ஸ்டோன் பென்ச் என்னும் சொர்க்க வாசல்!

''காலேஜ் பஸ்ஸுல இருந்து இறங்கினவொடனயே ஸ்டோன் பென்ச்ல போய் உட்கார்ந்தாதான், அந்த நாள் இனிய நாளா ஆரம்பிக்கும். அதிலும், எத்தனையோ ஸ்டோன் பென்ச் இருந்தாலும், நமக்குனு நாம பட்டா போட்டு வெச்சுருக்கிற பென்ச்தான் அந்த சுகானுபவத்தை தரும். அதுல ஏற்கெனவே ஜூனியர் உட்கார்ந்திருந்தா, 'எங்க ஏரியா உள்ள வராதே’னு எழுப்பி விட்டுடலாம். ஆனா, சீனியர்ஸ் இருந்தா, 'க்கா... குட் மார்னிங்க்கா!’னு சொல்லிட்டு நகர்ந்துட வேண்டியதுதான். காலையில பெல் அடிக்கிறதுக்கு முன்ன, லன்ச் ஹவர், ஃப்ரீ ஹவர், காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம்னு எப்பவும் இங்கயேதான் கதியா கிடப்போம். எங்களோட அரட்டை, சிரிப்பு, அட்ராசிட்டிக்கு எல்லாம் இந்த ஸ்டோன் பென்ச்... சூப்பர் சாட்சி! ஹாஸ்டல் கேர்ள்ஸை வீக் எண்ட்ல பேரன்ட்ஸ் பார்க்க வரும்போது, அவங்களை எங்களோட அந்த பட்டா போட்ட ஸ்டோன் பென்ச்ல உட்கார வெச்சுதான் பேசுவோம். அந்தளவுக்கு, காலேஜ் லைஃப்ல அதுவும் ஒரு கேரக்டர்!''னு ரொம்பவே ஃபீல் ஆனாங்க, ஆரோக்கிய திவ்யாவும் ரூத் மேரியும்.

கேன்டீன் கேங்க்ஸ்டர்ஸ்!

சௌந்தர்யா, ஷர்மிளா தேவி, ஜெ.திவ்யா, கீதா நாலு பேரும், கேன்டீன் தாதாக்கள்!

''ஃப்ரெண்ட்ஸ் யாருக்காச்சும் பிறந்தநாள்னா, 'யாரங்கே... அவளை இழுத்து வாருங்கள் இங்கே!’னு உத்தரவு போட்டு கூட்டிட்டு வந்து, டிரீட் வாங்கறதுதான் எங்களோட டெய்லி டியூட்டி. இதுமட்டுமா, அரியர் வெச்சா தலைக்கு 50 ரூபாயும், ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தா தலைக்கு 100 ரூபாயும் சங்கத்துல கட்டிடணும். அக்கவுன்ட் மேல அக்கவுன்ட் வெச்சு அப்ஸ்காண்ட் ஆகறது, உள்ள வந்தா கணக்கை செட்டில் பண்ணணுமேனு வெளியில உட்கார்ந்தே வேற யாரையாவது அனுப்பி பஜ்ஜி, போண்டா வாங்கிச் சாப்பிடறதுனு, இந்த கேன்டீன் எங்களுக்கு இப்போவே வாழ்க்கையைக் கத்துக்கொடுத்திருச்சு!'' என்கிறார்கள்.

இந்திரலோகத் தேர்!

''இது காலேஜ் பஸ் இல்ல... எங்க இந்திரலோகத் தேர். நாளைக்கு ஃபிளைட்ல போனாக்கூட இவ்வளவு சந்தோஷப்படுவோமானு தெரியாது. ஆனா, காலேஜ் பஸ்ல தினம்தினம் ஏதோ டூர் போற மாதிரிதான் என்ஜாய் பண்ணிட்டு வருவோம்!''னு காலேஜ் பஸ் காதல் சொன்னாங்க, கார்த்திகாயினியும், இன்னொரு எஸ்.திவ்யாவும்.

''ஸீட் இருந்தாலும் நின்னுகிட்டே வர்றது, பஸ்ஸுக்குள்ள கூலிங் கிளாஸ் போட்டு கெத்து காட்டுறது, பாட்டுக்கு டான்ஸைப் போடுறதோட, அப்பப்போ ஒரு 'ஓ’ போடுறதுனு, 'பஸ் டே’ அன்னிக்கு பஸ்ஸைக் குளிப்பாட்டி, சாயங்காலம் அழுக்காக்கி விளையாடுறதெல்லாம் எவர்கிரீன் மெமரீஸ். எக்ஸாம் நேரங்கள்ல, 'இன்னிக்கு பஸ் பஞ்ச்சராகணும்!’னு வேண்டிட்டே வருவோம். 'மெதுவா ஓட்டுங்க... வேகமா ஓட்டுங்க'னு தேவைக்கு ஏத்தமாதிரி டிரைவருக்கு டிப்ஸ் கொடுக்கிறது, காலேஜுல இருந்து கிளம்புற பஸ்ஸுல கடைசியா ஓடிப் போயி ஏறுறதுனு ஒரே ஜாலிதான்!''

- சொல்லும்போதே உற்சாகம் கேர்ள்ஸுக்கு!

என்ஜாய்!

- உ.சிவராமன்

படங்கள்: வீ.சிவக்குமார்