Published:Updated:

சீனியர் - ஜூனியர் - நெகிழவைக்கும் கல்லூரிக் காட்சிகள்

சீனியர் - ஜூனியர் - நெகிழவைக்கும் கல்லூரிக் காட்சிகள்

பிரீமியம் ஸ்டோரி

ல்லூரி வாழ்க்கை என்றாலே... சீனியர் - ஜூனியர் 'கோல்டு வார்’, சிலசமயங்களில் ஓடிக்கொண்டே இருக்கும். ''ஆனா, நாங்க அதையெல்லாம் ஓடஓட விரட்டிருவோம்!'' என்று சந்தோஷமாகச் சிரிக்கிறார்கள், திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி மாணவிகள். 'சீனியரும் ஜூனியரும் இவ்வளவு நட்பா, இணக்கமா, அன்பா இருக்க முடியுமா..?!’ என்று வியக்கவைக்கும் இந்த ஜோடிகளை சந்தித்த அனுபவம், அனைத்து சீனியர் - ஜூனியர்களை இதே சங்கிலியில் இணையவைக்கும் வெல்கமிங் வார்த்தைகள்!

ரேச்சல் - திவ்யாசுதா

''நான் செகண்ட் இயர் படிச்சப்போ, ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடென்ட்ஸுக்கு ஃப்ரெஷர்ஸ் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தோம். அப்போ ஒரு பொண்ணு துறுதுறுனு சுத்திட்டே இருந்தா. அவளை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவ கிளாஸுக்குப் போய் சும்மா சீனியர் கெத்துல அவகிட்ட பேசிட்டு வந்தேன். அப்புறம் ஒரு இன்டர் காலேஜ் காம்படிஷன்ல பாட்டு, டான்ஸுனு ஒரு கலக்கு கலக்கினப்போ, உடனே போய் வாழ்த்தினேன். அதுவரைக்கும் அவ எப்படிப்பட்ட வாயாடினு தெரியாம இருந்த எனக்கு, அன்னிக்குப் புரிய வெச்சுட்டா. 'தேங்க்ஸ்கா...’னு ஆரம்பிச்சவ, பேசுறா பேசுறா... பேசிட்டே இருக்கா. அப்புறமென்ன... அதுவரை சீனியர், ஜுனியரா இருந்த நாங்க அப்போயிருந்து திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். என்னோட சொத்தை எல்லாம்... அதாங்க நோட்ஸ் எல்லாம் அவளுக்குக் கொடுத்துட்டேன். வீட்டுல எங்கம்மா, அக்காவுக்கும் அவ டார்லிங் ஆயிட்டா. அதான் திவ்யா!''னு தோளோட அணைச்சுக்கிட்டாங்க ரேச்சல்.  

சீனியர் - ஜூனியர் - நெகிழவைக்கும் கல்லூரிக் காட்சிகள்

வைஷ்ணவி - சுதர்ஷினி

''நானும் வைஷ்ணவியும் ஒரே ஸ்கூல். ஆனா, ஸ்கூல்ல அவ்வளவா பேசிக்கிட்டதில்ல. காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடென்ட்ஸ் கூட்டத்துல அவளைப் பார்த்தப்போதான் ஸ்கூல் பாசம் பொங்கி, 'ஏய்... என்னை உனக்கு ஞாபகம் இருக்கா..? உன் ஸ்கூல் சீனியர்!’னு போய் பேசினேன். அவ பயந்துட்டே, 'ஆமாக்கா...’னு சொன்னா. அப்புறம் நானே அவளைத் தேடிப் போய் பேசிப் பேசி, சகஜமாக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா நாங்க க்ளோஸ் ஆகிட்டோம். சில நேரங்கள்ல அவ சீனியராகி, 'இதை இப்படி செய்யுங்க... அதை அப்படிச் செய்யாதீங்க'னு கைடு பண்ணும்போது, 'சரிங்கக்கா!’னு கேட்டுக்குவேன். அந்தளவுக்கு அவ மெச்சூர்டு. குறிப்பா, இன்டர் காலேஜ் காம்படிஷன்கள்ல எல்லாம் ஐடியாஸ் கொடுத்து, என்கரேஜ் பண்ணுறது அவதான். தேங்க்யூ ஜூனியர்!''னு வைஷ்ணவிக்கு ஹேண்ட்ஷேக் பண்ணினாங்க சுதர்ஷினி.

ஸ்ரீவித்யா - நந்தினி

''முதன்முதலா ஸ்ரீவித்யாவைப் பார்த்தப்போ, ரொம்பத் திமிரான பொண்ணுனுதான் நினைச்சேன்...'' என்று 'அக்னி நட்சத்திரம்’ எஃபெக்ட் கொடுத்து ஆரம்பிச்ச சீனியர் நந்தினி, ''ஃப்ரெஷர்ஸ் டே அன்னிக்கு என்னைய அவ 'அக்கா’னு கூப்பிட்டதில் நான் அப்படியே மெல்ட் ஆகிட்டேன். ஏன்னா... அதுவரைக்கும் என்னை யாருமே அக்கானு கூப்பிட்டதில்ல. பேர் சொல்லியோ, பெட் நேம் சொல்லியோதான் கூப்பிடுவாங்க. அதனால, தங்கச்சி மேல எனக்கு தனிப் பாசம் வந்துடுச்சு. நாங்க ரெண்டு பேரும் ஒரே டிபார்ட்மென்ட்ங்கிறதால, இன்ட்ரா காலேஜ் போட்டிகள்ல கலந்துக்கும்போதெல்லாம் எங்க டிபார்ட்மென்ட் ஜெயிக்கணும்னு சேர்ந்து வேலை பார்த்தப்போ, அந்தப் பாசம் ஜாஸ்தியாகிடுச்சு. எனக்கு இவகிட்ட ரொம்பப் பிடிச்சது, ஹெல்பிங் டெண்டென்சி!''னு ஜூனியரைப் புகழ்ந்தாங்க நந்தினி.

சீனியர் - ஜூனியர் - நெகிழவைக்கும் கல்லூரிக் காட்சிகள்

அனுராதா - பிரதக்ஷனா

''எனக்கு சி.ஏ படிக்க ஆசை. அதைப் பத்தின விவரங்களை விசாரிச்சுட்டு இருந்தப்போ, என் ஃப்ரெண்ட்ஸ்தான் ஜூனியரான பிரதக்ஷனாவைக் காட்டி, 'இவகூட சி.ஏ பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கா...’னு சொன்னாங்க. ஜூனியரா இருந்தாலும் அவளோட சின்ஸியாரிட்டியில வியந்து, அவகிட்ட பேசினேன். சொல்லப்போனா, அவகிட்டதான் அதைப் பத்தி நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் ரெண்டுபேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். ஒருமுறை இன்டர் காலேஜ் காம்படிஷனுக்காக

சீனியர் - ஜூனியர் - நெகிழவைக்கும் கல்லூரிக் காட்சிகள்

தஞ்சாவூர் போனப்போ, திருச்சியில பாட ஆரம்பிச்சவ, தஞ்சாவூர் வரைக்கும் பாட்டை நிறுத்தல. அப்போதான் அவளோட மியூசிக் திறமை, ஆர்வமெல்லாம் எனக்குத் தெரிஞ்சுது. அவ நினைச்சதை எல்லாம் அச்சீவ் பண்ணணும்!''னு பொறுப்பான சீனியரா தன் ஜூனியரை வாழ்த்தினாங்க அனுராதா.

சுமிதா - சுபஸ்ரீ

''ரொம்ப அடக்கமான பொண்ணு, ஆனா, பொண்ணுக்கு அளவில்லாத திறமை''னு தன் ஜூனியர் சுபஸ்ரீயை புகழ்ந்தபடியே ஆரம்பிச்சாங்க, சுமிதா. ''எனக்கு மட்டுமில்ல... சீனியர்ஸ் எல்லோருக்குமே பிடிச்ச ஜூனியர் இவ. சீனியர் என்ற ஃபார்மல் இடைவெளியை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு, உரிமையோட வந்து நிப்பா. 'அக்கா, அதை சூப்பரா பண்ணீங்க’னு பாராட்டுறவ, 'இதை ஏன் இப்படி சொதப்பினீங்க?’னு திட்டவும் செய்வா. எங்களுக்கும் அவகிட்ட கோபம் வராது. வீட்டுல அராத்து பண்ற தங்கச்சி இருக்கிற மாதிரி, இவ காலேஜ் தங்கச்சினுதான் நினைக்கத் தோணும்!'' என்றார் சுபஸ்ரீயைப் பார்த்துச் சிரித்தபடி.

''சரி, ஜூனியர்ஸ் சொல்லுங்க, உங்க சீனியர்ஸைப் பற்றி'' என்றால், ''ஷ்ஷ§... தலையிருக்க வால் ஆடக்கூடாது!'' என்று அவர்கள் அநியாயத்துக்கு அடக்கம் காட்ட,

''நம்பாதீங்க... இதுங்க எல்லாம் செம அறுந்த வாலுங்க!'' என்று சீனியர்ஸ் அவர்களை செல்லமாகத் துரத்த, கலகல கேம்பஸ் காட்சிதான்!

- ந.ஆஷிகா 

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு