''அம்மா... கிளாஸ்ல என் ரெட்டை ஜடையை கிண்டல் பண்றான் பிரணவ்'' என்று ஆறு வயதுக் குழந்தையில் ஆரம்பித்து, ''காலேஜ் பஸ்ல அவன் என்னை டீஸ் பண்ணிட்டே இருக்காண்டி'' என்று கல்லூரி மாணவிகள் வரை, ஆண்களின் கிண்டலை அநேகமாக எல்லா பெண்களும் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது.

முறைப் பையன், மாமன் மகன், அத்தை மகன் என்று பெண்களைக் குறிவைத்து குடும்பங்களில் ஆரம்பிக்கும் இந்தக் கிண்டல் திருவிழாக்கள், திரைப்படங்கள் வரை தொடர்ந்து, சமூக வலைதளங்கள் வரை நிறைந்திருக்கிறது.

ஆண்கள் கூட்டமாக இருக்கும் ஓரிடத்தை, ஒரு பெண் கடக்க வேண்டும் என்றால், கிண்டலின்றி அது நிகழவே நிகழாது என்கிற நிலையே நீடிக்கிறது. 40 வயது பெண்கூட, 'அந்த டீக்கடையில ஆம்பளைங்க கூட்டமா இருக்கும், விவஸ்தை இல்லாம கிண்டலடிப் பாங்க...’ என்று தயங்கும் அளவுக்கு, எல்லா வயதுப் பெண்களும் ஆண்களின் கிண்டல் வளையத்துக்குள் சிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பெண் தன் குழந்தைப் பருவம் முதல், தொடர்ந்து ஆண்களின் கிண்டலுக்கு ஆளாகிக்கொண்டேதான் இருக்கிறாள். அப்படியென்றால், பெண்கள் கிண்டலடிப்பதில்லையா? உண்டு... பெரும்பாலும் தனக்குப் பரிச்சயமான ஆண்களை, அதிலும் அவர்களின் கேலிக்குப் பதில் கேலியாகவே அது நிகழக்கூடும்.

இதைப் பற்றிப் பேசும் திரைப்பட பாடலாசிரியர் தாமரை, ''ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... யாரும் நம்மை கிண்டல் செய்துவிடக் கூடாது என்றே யோசிப்பார்கள். சின்னவயதில் நானும் பல கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியிருக் கிறேன். என் பெயரை வைத்தே, 'தாமரைக்கொடி தரையில் வந்ததெப் படி’ என்று கிண்டல் செய்து பாடுவார்கள். எனக்குக் கோபமாக வந்தாலும், கண்டும் காணாதபடி வந்துடுவேன். பொதுவாக கிண்டலுக்கு பெண்களின் எதிர்வினை இதுவாகத்தான் இருக்கும்.

ஒரு திரைப்பட பாடலாசிரியராகச் சொல்ல வேண்டும் என்றால், திரைப் பாடல்களுக்கு சமூகப் பொறுப்பு நிச்சயமாக வேண்டும். ஆபாசமான வார்த்தைகள் கலக்காத பாடல்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. அந்தக் காலத்திலிருந்தே பெண்களை ஆண்களும், ஆண்களை பெண்களும் கேலி செய்வது போன்ற திரைப்பாடல்கள் நிறைய வந்துள்ளன. உதாரணத்துக்கு 'நடையா இது நடையா... ஒரு நாடகம் அன்றோ நடக்குது’, 'கட்டை வண்டி கட்டை வண்டி...’ போன்ற பாடல்கள் வந்தன. மக்களால் ரசிக்கப்பட்ட இந்த இரண்டு பாடல்களிலுமே கிண்டல் இருக்கும் அளவுக்கு ஆபாசம் இருக்காது.

அடுத்தவரை எதற்காக கிண்டல் செய்ய வேண்டும்? கூடாது என்பதே சரி. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமா... இல்லை. நம்மை அறிந்தவர்களிடத்தில் அவர்களின் மனதைப் புண்படுத்தாத வகையில் செய்யும் கிண்டல்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதற்கான அளவு கோல்வேண்டும். வரம்பு மீறினால், அது கிண்டல் இல்லை... குற்றம்! ஆண், பெண் கிண்டல்களைவிடக் கொடுமையானது... மாற்றுத்திறனாளிகளைக் கிண்டல் செய்வது. பிறரோட மனதைப் புண்படுத்தும் கிண்டல்கள் மனதின் அழுக்கு!'' என்று கோபம்கொண்டார் தாமரை.

''பசங்க கிண்டல் பண்ணும்போது, அதை நாம் கண்டுக்காம விடுறதுதான் இதுக்கான சுலபமான தீர்வு'' என்று ஆரம்பித்த கல்லூரி மாணவி சுஷ்மிதா, ''பெண்களைக் கிண்டல் பண்றதில்தான் ஆண்கள் தங்களோட முழுத் திறமையையும் (!) வெளிப்படுத்துவாங்க. ஒரு பொண்ணு நடந்து போகும்போது ஒருத்தன், 'இந்தப் பொண்ணையா அழகா இருப்பானு சொன்னே?’னு கேட்பான். உடனே அடுத்தவன், 'ச்சே ச்சே... அந்தப் பொண்ணு இவ இல்லடா... அவ அழகா இருப்பாடா!’னு சொல்லுவான். 'ப்பா... யாருடா இது, பார்க்கப் பேய் மாதிரியே இருக்கா’, 'த்ரிஷா இல்லாட்டி திவ்யா’ - இது போன்ற வசனங்கள், பெண்களை கிண்டல் பண்றதுக்கே பொறுப்போட எழுதப்பட்ட சினிமா பாடல்கள்னு... கிண்டலுக்கு அளவே இல்ல.

இதையெல்லாம் கண்டு பொங்கி எழுந்து, அவங்களுக்கு தண்டனை வாங்கித் தர்றதுக்கு சட்டங்கள் இருக்கு. ஆனா, அதையெல்லாம் எந்த அளவுக்கு கையில எடுக்க முடியும்னு தெரியல. அப்படியே எடுத்தாலும், இது புதுசா ஒரு தலைவலியைக் கொண்டு வந்துடுமோனுதான் வீட்டுல உள்ளவங்க பயப்படுவாங்க. அதனால, கிண்டல்களைக் கண்டுக்காம ஒதுங்கிப் போறதுதான் நமக்குப் பாதுகாப்புனு பலரும் போயிட்டிருக்காங்க!'' என்றார் நிதர்சனம் புரிந்தவராக.

அதேசமயம், ''பெண்கள் பலவீனமானவர்கள் என்கிற ஆண்களின் எண்ணம்தான், கிண்டல் பண்ண முக்கியக் காரணம்...'' என்கி றார் மனநல மருத்துவர் அபிலாஷா.

''ஆண்கள் கிண்டல் செய்யும் போது, பெண் அதற்கு தைரியமா எதிர்ப்பு காட்டினா, அது ஆண் ஈகோவைக் கிளற, அந்தப் பெண்ணுக்கு ஆபத்தா மாற வாய்ப்பிருக்கு. ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது அவளை யாராவது கிண்டல் பண்ணினா... அங்க இருந்து கிளம்பு றதுதான் நல்லது. இதை தைரியம், பெண் உரிமையோட சம்பந்தப் படுத்துறதைவிட, 'துஷ்டரைக் கண்டால் தூர விலகணும்'னு எளிமையா கடந்துடலாம்'' என்கிறார்.

''நான் யாரையும் கிண்டல் பண்றது கிடையாது. ஆனா, நான் பார்க்கிற விஷயங்களைச் சொல்றேன்...'' என்று ஆரம்பித்த கல்லூரி மாணவர் ராகுல்,

''சுருள்முடி உள்ள பெண்களை 'ஸ்பிரிங் மண்டை’, உயரமான பெண்களை 'குதிரை’னு... கிண்டல் பண்ண பசங்க ஸ்டாக் வெச்சிருக்க பட்டப் பெயர்கள் நிறைய. ஒரு பொண்ணுக்கு பாய் ஃப்ரெண்ட் இருந்தா, அந்தப் பொண்ணு போறப்போ அவன் பெயரைச் சத்தமா சொல்லி கிண்டல் பண்ணுவாங்க.

'அலைகள் ஓய்வதில்லை’ காலம் தொடங்கி.... 'அலைபாயுதே’ காலம் வரைக்கும் கிண்டலில் ஆரம்பிச்சு, காத லில் முடியும் திரை ஜோடிகள் நிறைய இருக்கிறதால, நிஜத்திலும் சிலர் அதே டெக்னிக்கை ஃபாலோ பண்ண நினைப் பாங்க. ஒரு பொண்ணைத் தொடர்ந்து கிண்டல் பண்ணினா, அவ அந்தப் பையனை கவனிப்பா, சண்டைக்கு வருவா. அப்படியே அந்தப் பொண்ணு கூட பழக ஆரம்பிச்சி புரபோஸ் பண்ற மெகா பிளான்களும் இதில் அடக்கம். கிண்டல் தப்புனு சொல்ல முடியாது. ஆனா, அது நமக்குத் தெரிஞ்சவங்ககிட்ட, வரம்பு மீறாம இருந்தா ஓ.கே! முன்னப் பின்ன தெரியாத பொண்ணுகிட்டு பண்ணினா, அதுக்குப் பேரு வம்பு. அப்புறம் ஈவ் டீஸிங் கேஸ்ல சங்குதான்!'' என்றார் ராகுல்.

''எங்கிருந்து வந்தது இந்தக் கிண்டல்?'' என்பதைப் பற்றி பேசிய மனநல மருத்துவர் அசோகன், ''இந்த உலகில் முதல் ஆண், முதல் பெண் பிறந்தபோது இருவரும் எல்லா வகையிலும் சமமானவர்களாகவே இருந்தார்கள். பெண் கர்ப்பமடைந்தபோது அவளுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதனால் அந்த நேரத்தில் பெண் வீட்டுக்குள் அடைபட்டாள். ஆண், உணவு தேடி வெளியில் அலைந்தான். அங்கிருந்துதான் பெண், ஆணுக்கு கீழ் அடிமைப்படுத்தப்பட்ட மனப்பாங்கு தொடங் கியது. தங்கள் அதிகாரத்தை பறைசாற்றும்விதமாக, பெண் குலத்தை கேலி, கிண்டலுக்கு ஆளாக்கி, பரிகாசம் செய்யத் தொடங்கினார்கள் ஆண்கள். இன்று ஆண்களைவிட பெண்கள் சிறப்பாக பணியாற்றினாலும், அங்கீகாரம், சம்பளம் உட்பட எதுவுமே ஆண்களுக்குச் சமமாகக் கிடைப்பதில்லை.

பொதுவாக ஒரு ஆண், தான் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தைவிட, குழுவுடன் இருக்கும் போதுதான் ஒரு பெண்ணைக் கிண்டல் செய்கி றான். பெண்ணைக் கிண்டல் செய்வதால் அந்த ஆண் தன் குழுவில் ஒரு படி உயர்ந்தவனாக தன்னைக் காட்டிக்கொள்ள நினைக்கும் முனைப்பே அதற்குக் காரணம். மொத்தத்தில், ஆண் சமூகம், பெண்ணைவிட தான் உயர்ந்ததாக காட்டிக்கொள்ள விளைவதே இந்தக் கிண்ட லுக்குக் காரணம். இதை மாற்றுவதற்கான முயற்சியை குடும்பங்களில் இருந்து தொடங்குவோம். வீட்டில் பெண் பிள்ளைகளை, ஆண் பிள்ளைகள் செய்யும் பரிகாசங்களைக் கண்டித்து, அவர்களுக்கு பெண்மையை சரிசமமாக நடத்தும் மனப்பக்குவத்தைக் கற்றுக்கொடுப்போம். அது நாளைய சமூகத்திலும் எதிரொலிக்கும்!'' என்று அக்கறை பொங்கச் சொன்னார் அசோகன்.

அடுத்த தலைமுறையிலாவது மாற்றம் பிறக்கட்டும்!