Published:Updated:

எது நல்ல செலக்‌ஷன்...?

ஒரு ஃபேஷன் திருவிழாகட்டுரை, படங்கள்: தே.தீட்ஷித்

எது நல்ல செலக்‌ஷன்...?

றாவது இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக்... அசத்தலோ அசத்தல்! கிங்ஃபிஷர் பிரீமியம் நிறுவனம், ஸ்ட்ராம் ஃபேஷன் நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய இந்த ஃபேஷன் ஷோ, சென்னை, ஹயாட் ஹோட்டலில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒன்பது ஃபேஷன் டிசைனர்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து மாடல்கள் 'கேட் வாக்’கிய ஹாட் நிமிடங்கள், அப்ளாஸ்!

முதல் நாள்...

மும்பையைச் சேர்ந்த பாலிவுட் டிசைனர் ராக்கி வடிவமைத்த 'ராக்கி ஸ்டார் ரிசார்ட் வேர்' (Rocky Star Resort Wear) கலெக்ஷன்களை அணிந்து, 'ஷோ ஸ்டாப்பராக’ வலம் வந்து அசத்தினார் நடிகை லஷ்மி ராய்.

சென்னையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் ஜான், தன் கைவண்ணத்தில் உருவான 'மெஜஸ்டிக் பிரைடு' (Majestic Bride) கலெக்ஷன்களை, நடிகை தனிஷ்கா மூலம் அறிமுகப்படுத்தினார்.

ஆண் மற்றும் பெண்களுக்கான ஆடைகளை, 'டெக்சர்ஸ், கட்ஸ், வைப்ரன்ட் கலர்ஸ்' கலெக்ஷன்களாக வடிவமைத்திருந்தார் சென்னையைச் சேர்ந்த மற்றொரு ஃபேஷன் டிசைனர் சைதன்யா ராவ். இவருடைய 'ஷோ ஸ்டாப்பர்’ நடிகை ஆண்ட்ரியா. கறுப்பு நிற 'பார்ட்டி வேர்’ அணிந்து  ஆண்ட்ரியா வந்தபோது, பலத்த கைதட்டல்கள்.

எது நல்ல செலக்‌ஷன்...?

இரண்டாவது நாள்...

சென்னையைச் சேர்ந்த டிசைனர் ஜூலி வெர்ஜிஸ், 'த ஸ்கார்லெட் பிம்பர்னல்' (The Scarlet Pimpernel) என்ற தலைப்பில், ரெட் கார்பெட், ரெட்ரோ நியோ மாடல் உடைகளை, நடிகை நந்திதா ஸ்வேதா மூலம் அறிமுகப்படுத்தினார். ஆங்கிலத்தில் வெளிவந்த 'ஸ்கார்லெட் பிம்பர்னல்' என்கிற கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் சிவப்பு நிறத்தில் உடைகள் அணிந்திருப்பார்கள். இதையே தன்னுடைய தீம் ஆக செலக்ட் செய்திருந்தார் இவர்.

கொச்சியைச் சேர்ந்த டிசைனர் ஹரி ஆனந்த், 'அல்கமி'களை (Alchemy) அறிமுகப்படுத்தினார். கோல்ட் கலர், ப்ளூ, வொயிட், பிளாக் என பளபளக்கும் கலர்களை வைத்து உருவாக்கப்பட்ட இவருடைய பிரைடல் கலெக்ஷன்களை அணிந்து நடைபோட்டார்கள் சில மாடல்கள்.

நியூயார்க்கில் வசிக்கும் டிசைனர் சஞ்சனா ஜான், 'இந்தியன் அண்ட் வெஸ்டர்ன் ஸ்டைல்’ உடைகளை குஷ்பு, பார்த்திபன், பிந்துமாதவி, ஐஸ்வர்யா அர்ஜுன் என செலிப்ரிட்டிகள் மூலமாக அறிமுகப்படுத்தினார். இவர் வடிவமைத்திருந்த குழந்தைகளுக்கான கலெக்ஷன்கள்... வாவ்!

எது நல்ல செலக்‌ஷன்...?

மூன்றாவது நாள்...

சென்னையைச் சேர்ந்த டிசைனர் நஸியா சையத் செய்யது, லெகிங்ஸ், புடவைகள், அனார்க்கலி, சோளி உள்ளிட்ட ஆடை ரகங்களை சினிமா பின்னணி பாடகி சின்மயி, காவ்யா ஷெட்டி, ரூபா மஞ்சுரி ஆகியோர் மூலம் அறிமுகப்படுத்தினார்.

ஹைதராபாத் டிசைனர் சிவாலி சிங், பூக்களை மையமாகக் கொண்டு உடைகளை வடிவமைத்து இருந்தார். இவரின் கலெக்ஷன்களை நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் அணிந்து வந்தபோது, பூவாடை உடுத்திய பூ போல இருந்தார்.

நிறைவாக, பெங்களூரைச் சேர்ந்த மனோவிராஜ் கோஸ்லா, 'ஒன் நைட் ஸ்டாண்ட்’ (One Night Stand)  என்கிற தீமில் கிளாமரஸான பார்ட்டி வேர் டிரெஸ்களை வடிவமைத்து, நடிகர் மற்றும் மாடல் கணேஷ் வெங்கட்ராமன் மூலம் அறிமுகப்படுத்தினார்.

எது நல்ல செலக்‌ஷன்...?

ஃபேஷன் ஷோவில் அதிகமானவர்களால் கவனிக்கப்பட்ட ஆடைகளுக்குச் சொந்தக்காரர்... டிசைனர் சஞ்சனா ஜான். அவரிடம் பேசியபோது, ''ஸ்கூல் படிக்கும்போது பாட்டி, அம்மா அணிந்த டிசைன் உடைகளை நானும் உடுத்த அவ்வளவு ஆசைகொள்வேன். எனவே, டிசைனிங்கில் என்னையும் அறியாமலேயே எனக்குள் ஆர்வம் வளர்ந்திருந்தது. ஆரம்பத்தில் ஃபேஷன் டிசைனர்களுக்கு மார்க்கெட்டிங் மட்டுமே செய்து வந்தேன். என் அண்ணன் ஆனந்த், 'நீயே டிசைன் செய்யலாமே’ என்று எனக்குள் இருந்த கிரியேட்டரை தூண்டிவிட, ஃபேஷன் டிசைனராக வெளிப்படத் தொடங்கினேன். பயணம் தொடர்கிறது'' என்று சிரித்தவர்,

''என்னைப் பொறுத்தவரை, வட இந்தியாவை விட, தென்னிந்தியாவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவே நினைக்கிறேன். சொல்லப் போனால், பெண்களுக்கான ஸ்பேஸை நிலைநாட்டவே நான் இந்த ஷோவில் கலந்துகொண்டேன். நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க பெண்களுக்கான ஆடைகளை மட்டுமே வடிவமைத்தேன்.

டிசைனிங்கில் எளிமையான லுக்தான் என் சாய்ஸ். பட்டுப்பூச்சிகளைக் கொன்று உருவாக்கும் விலையுயர்ந்த ஆடைகளைவிட, பருத்தி ஆடைகளே சிறந்ததென்பேன். ஓர் உடை, அழகாக இருக்கிறது என்பது, அதை நாம் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது. அது நம் உயரம், உடல் அமைப்பு, ஸ்டைலுக்குப் பொருந்துகிறதா என்று பார்த்து எடுப்பதே நல்ல செலக்ஷன்!''

- சட்டென இமைகள் மூடித் திறந்து, சின்னதாகச் சிரிக்கிறார் சஞ்சனா.

போட்டோஸ் பாருங்கள்... ரசியுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு