Published:Updated:

எளிமையே...இனிமை!

புதிய பாதை!ஓவியம்: ஸ்யாம்

எளிமையே...இனிமை!

புதிய பாதை!ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

 குடும்ப விழாக்களை, மிகவும் ஆசை ஆசையாக, ஆடம்பரமாகக் கொண்டாடினாலும், பெரும்பாலும் பிரச்னை, சண்டை, மனஸ்தாபம், அவமானம் நேர்வது... வருத்தம் அளிக்கக்கூடியதே! 'உறவுகளைக் கூப்பிடாமலும் விழா நடத்த முடியாது, கூப்பிட்டாலும் தொல்லை... என்ன செய்வது?’ என்று குழம்பியிருந்த எனக்கு, அவள் விகடனின் 'எளிமையே... இனிமை’ பகுதி சட்டென பாதை போட்டுக் கொடுத்திருக்கிறது. 'திருமணம் போன்ற மிகமுக்கியமான விசேஷங்கள் தவிர்த்து, பிறந்தநாள் போன்ற பிற நிகழ்வுகளை வெகுசிம்பிளாக கொண்டாடுவதுதான்... மனதுக்கும் பாக்கெட்டுக்கும் சந்தோஷ சங்கதி' என்கிற முடிவுக்கு வந்துவிட்டோம்.

எளிமையே...இனிமை!

ஆம்... என் பேத்தியின் காதணி விழாவையும், முதல் பிறந்தநாள் விழாவையும் எளிமையாகக் கொண்டாட திட்டமிட்டுவிட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் பிறந்த நாளை, சீரடி சாயிபாபா கோயிலுக்குச் சென்று, பாபாவின் ஆசி பெற்றுக்கொண்டு, அன்னதானத்துக்கு முடிந்த தொகை கொடுத்துக் கொண்டாடுவதாக ஆலோசித்துள்ளோம். காதணி விழாவுக்கும், குலதெய்வக் கோயிலுக்கு பஸ் வைத்து சுற்றம் சூழப்போவதை தவிர்த்து, நாங்கள் மட்டும் சென்று தரிசனம் முடித்து, மொட்டை போட்டு, சுற்றியுள்ள கிராமத்து ஏழைபாழைகளை அழைத்து சாப்பாடு போடும் ஏற்பாட்டில் இருக்கிறோம்.

பிறந்தநாளை ஓட்டலில் கொண்டாட பல ஆயிரங்கள், காதணி விழாவுக்கு உறவுகளை பஸ் பிடித்து அழைத்துச் செல்ல, சாப்பாடு என பற்பல ஆயிரங்கள் என்றெல்லாம் செய்தாலும் மனதுக்கு திருப்தி இருக்காது. 'இது சரியில்லை, அது சரியில்லை' என்பார்கள் வந்தவர்கள். ஆனால், எளியவர்களின் பசி அமர்த்துவதை நினைக்கும்போதே மனதுக்கு நிறைவாக இருக்கிறது. அவர்களுக்கு குறை சொல்லத் தெரியாது. நமக்கு நன்றியையும், குழந்தைகளுக்கு ஆசீர்வாதத்தையும் மட்டுமே விட்டுச் செல்வர்.

செலவுபோக மீதித் தொகையை குழந்தையின் சேமிப்பில் போட்டு வைத்தால், பின்னாளில் உதவும்தானே?!

- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism