Published:Updated:

ஹைய்யா... பையா!

ஹைய்யா... பையா!

ஹைய்யா... பையா!

ஹைய்யா... பையா!

Published:Updated:

நீளமான முடி உள்ள பொண்ணுங்களைவிட, பாய் கட் பண்ணின பொண்ணுங்களைத் திரும்பிப் பார்க்கிற கண்கள் அதிகம். சென்னையில அப்படி நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்த ஷார்ட் ஹேர் கியூட்டீஸ்கிட்ட, ''ஏன் இந்த ஹேர் ஸ்டைல்..?''னு கேட்டோம். கிடைத்த வெரைட்டியான பதில்கள் இங்கே!

அம்ரிதா

''பாய் கட் பண்ணினாலே பொண்ணுக்கான நளினம் இல்லாம போயிடும் என்பதில்லை. எங்களுக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் இருக்கு. அப்புறம் ஏன் இந்த பாய் கட்னு கேட்கிறீங்களா? கேள்விக்குப் பதிலா ஒரு ஹிஸ்டரியே வெச்சிருக்கேங்க. பொண்ணு இல்லாத ஏக்கத்துக்கு, பையனுக்கு ஃபிராக் எல்லாம் போட்டு போட்டோ எடுத்து வெச்சிப்பாங்க சில வீடுகள்ல. அந்த மாதிரி எங்க வீட்டுல பையன் மாதிரியே கொண்டாடுவாங்க, 'டேய்’னுதான் கூப்பிடுவாங்க. கூடவே, எனக்கு சல்வாரைவிட ஜீன்ஸ், குர்தா நல்லா செட் ஆனதா தோணுச்சு. அதான் அதுக்கு மேட்ச்சா முடியையும் ஷார்ட் பண்ணிக்கிட்டேன். ஆனா, இந்த பாய் கட் ஹேர் ஸ்டைலால நான் அவள் விகடன்ல வருவேன்னு நினைச்சுகூடப் பார்த்ததில்ல. தேங்க்யூ!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹைய்யா... பையா!

சமந்தா

''சின்ன வயசுல இருந்தே இந்த சைக்கிள், ஸ்கூட்டியை எல்லாம் நான் தொடுறது இல்லை. வண்டினு ஒண்ணு ஓட்டினா... அது பல்சர், புல்லட்னுதான் இருக்கணும்னு ஒரு லட்சியத்தோட வாழறேன். 'நீயெல்லாம் பையனா பொறந்திருக்கணும்’னு சொல்லாதவங்களே இல்லை. இப்படி நம்ம ரஃப் அண்ட் டஃப் குணத்தால, நீளமான ஜடையெல்லாம் எனக்கு செட் ஆகல. அதான் இந்த பாய் கட். தூரத்துல இருந்து பார்க்கிற சிலர், 'ஏ தம்பி’னு சொல்லிட்டே கிட்ட வந்து பல்பு வாங்குறதைப் பார்க்கிறது, இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. தலை வாரி, ஜடை பின்னினு நேரத்தை வீணாக்குற வேலையில்லை என்பதோட, பூ வாங்குற செலவும் இல்ல. என்ன நான் சொல்றது?!''

ஷீபா

''முன்ன ஒரு காலத்துல, அதாவது நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு, செகண்ட் ஸ்டாண்டர்டு படிக்கும்போதெல்லாம் நீளமான முடி இருக்கும். போகப் போக காலையில ஸ்கூல் கிளம்புற அவசரத்துல அதை மெயின்டெயின் பண்ண 'முடி’யல. ஹேர் ட்ரிம் பண்ணிடலாம்னு வீட்டுல சொன்னாங்க. அந்த நேரம் பார்த்து நிறைய ஹாலிவுட் ஸ்டார்ஸ் பாய் கட் பண்ற டிரெண்ட் ஆரம்பமாகியிருந்தது. எம்மா வாட்சன், ரிஹான்னானு இவங்களை எல்லாம் ஃபாலோ பண்ணி, நானும் பாய் கட் பண்ணிக்கிட்டேன். ஸ்ஸப்பா... எவ்ளோ ரிலாக்ஸ்டா இருக்கு தெரியுமா? மத்த பொண்ணுங்களுக்கும் ரெகமண்ட் பண்றேன்ப்பா. முடி வளர்த்து, தலை குளிச்சு, காய வெச்சு, பேன் சீவி, ஈர் இழுத்து, ஜடை பின்னி... கண்ணைக் கட்டல?!''

ஹைய்யா... பையா!

தேஜா

''எனக்கு சொல்றதுக்கு எந்தக் கதையும் கிடையாது. சமீபமா திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டேன். முடி வளர்ந்து வந்தப்போ, என்னோட மொட்டை மேட்டர் தெரியாத சிலர், 'ஏய்... இந்த பாய் கட் உனக்கு நல்லாயிருக்குப்பா!’னு சொன்னாங்க. 'அப்டியா!’னு கண்ணாடி பார்த்தப்போ, அப்படித்தான் தெரிஞ்சது. அதில் இருந்து பாய் கட் மெயின்டெயின் பண்ண ஆரம்பிச்சுட்டேன். தேங்க்ஸ் டு கோவிந்தா!''

அட கோவிந்தா!

- அ.பார்வதி

படங்கள்: டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism