Published:Updated:

டாட்டூ பெண்ணே! 

டாட்டூ பெண்ணே! 

டாட்டூ பெண்ணே! 

டாட்டூ பெண்ணே! 

Published:Updated:

சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் 'இர்ஸுமி' (IREZUMI) டாட்டூ ஸ்டுடியோவில் எப்போதும் டீன் பெண்கள் கூட்டம். அது என்ன கேர்ள்ஸுக்கும், டாட்டூவுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி?!

''ரொம்ப த்ரில்லா, பரவசமா இருக்கு..!'' என்று கேர்ள்ஸ் பலரும் டாட்டூ டிசைன் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, உற்சாகமாகப் பேசினார் வித்யா.

''டாட்டூ போட்டுக்கணும்ங்கிறது, என்னோட பல வருஷ கனவு. டாட்டூ குத்தியிருந்த என் ஃப்ரெண்ட்டைப் பார்த்து வந்த ஆசை இது. ஆனா, ஸ்கூல் படிக்கும்போது சொன்னா... வீட்டுல திட்டுவாங்கனு, காலேஜ் வர்ற வரைக்கும் காத்திருந்தேன். இப்போ பி.காம் சேர்ந்ததும் வீட்டில் என் ஆசையைச் சொன்னேன். ஒரே திட்டு! இருந்தாலும் சாப்பிடாம, பேசாம, படிக்காமனு பலவிதங்கள்ல ஸ்ட்ரைக் செய்து, அனுமதி வாங்கிட்டேன். காசைக் கொடுத்து, 'பத்திரமா குத்திட்டு வாம்மா'னு அனுப்பி வெச்சுட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாட்டூ குத்தும்போது எறும்பு கடிக்கிற மாதிரி வலிக்கும்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்லி அனுப்பியிருக்காங்க. சிலசமயம் ரத்தமெல்லாம்கூட வருமாம். ஆசைப்பட்டது கிடைக்கணும்னா சும்மாவா? அதனால எதுக்கும் தயாராதான் வந்திருக்கேன். நாங்க எல்லாம் டைனோஸர் கடிச்சாலே தாங்குவோம்... எறும்பு கடியெல்லாம் ஜுஜுபி!'' என்ற வித்யா ஜாலியாக ரெடியாக, டாட்டூ குத்தும் வைபவம் ஆரம்பித்தது.

டாட்டூ பெண்ணே! 

எறும்பு கடித்த ரியாக்ஷன்கூட வித்யாவிடம் இல்லை... முகத்தில் ஒரு பரவச சிரிப்பு மட்டுமே. அவர் விரும்பியபடி பிறை நிலாவும், அதன் கீழ் அம்புக்குறியும் டாட்டூ போடப்பட, 20 நிமிடங்கள் கழித்து 'யாஹூஹூஹூ!’ என்று துள்ளி எழுந்தார்.

''ரத்தமெல்லாம் வர லைப்பா... நான் லக்கி!'' என்று குஷியானவருக்கு, டாட்டூ போட்டவுடன் அந்த இங்கின் மீது காற்றில் கலந்துள்ள தூசு எதுவும் படாமல் இருக்க, கண்ணாடி பேப்பரால் இறுக்கமாக சுற்றிக் கட்டுப் போட்டார்கள். கூடவே சில விட்டமின் மாத்திரைகளும் தந்தார்கள்.

''மூணு நாளைக்கு தண்ணி படக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. அதெல்லாம் நாம பார்த்துக்கலாம்!'' என்றபடி இரண்டாயிரம் ரூபாய் பணத்தை அங்கே தந்துவிட்டு, நமக்கு 'பை’ சொல்லியபடி சிட்டாகப் பறந்தார் வித்யா.

சென்னையின் முதல் டாட்டூ ஸ்டுடியோ 'இர்ஸுமி’. இதன் நிறுவனர் நவீன், ''சுவாரஸ்யமான விஷயம் என்னனா, எங்க கஸ்டமர்கள்ல 70 பர்சன்ட் பேர் பெண்கள்தான்! அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் படிச்சாலும், டாட்டூ ஸ்டுடியோ ஆரம்பிக்கணும்ங்கிறது கனவா இருந்துச்சு. தாய்லாந்து போய் இதைக் கத்துக்கிட்டு, எட்டு வருஷத்துக்கு முன்ன இங்க 'இர்ஸுமி’ ஆரம்பிச்சப்போ, த்ரிஷா, குஷ்பு, சோனியா அகர்வால்னு ஸ்டார்ஸும், மேல்தட்டு மக்களும் மட்டுமே கஸ்டமர்கள். இப்போ எல்லா தரப்பு மக்களும் தயக்கமில்லாம வர்றாங்க. குறிப்பா, டீன் கேர்ள்ஸுக்கு இதில் பெரிய கிரேஸ்.

டாட்டூ பெண்ணே! 

பெரும்பாலும் பட்டாம்பூச்சிதான் பெண்களோட சாய்ஸா இருக்கும். சிலர் தங்களோட பெயரையும், சிலர் ‘daddy’s cute girl’, ‘world’s wonderful girl’னு சுவாரஸ்யமான வாக்கியங்களாவும் டாட்டூ போட்டுப்பாங்க. முன்னயெல்லாம் கை, கழுத்துப்புற முதுகுனு டாட்டூ போட்டுக்கிட்டாங்க. இப்போ உள்ள பொண்ணுங்கதான் ரொம்ப மாடர்ன் ஆச்சே... முன் கழுத்து, இடுப்பு, கால்னு ஆசைப்படுற இடத்துல எல்லாம் போட்டுக்கிறாங்க. நிறமான பெண்கள் கலர் டாட்டூஸை விரும்பிப் போட்டுக்கிறாங்க'' என்று தகவல்கள் தந்தவரிடம்,

''டாட்டூ போட்டுக்கொள்வதனால் சரும பாதிப்பு ஏற்படாதா?'' என்கிற மிகமுக்கியமான கேள்வியைக் கேட்டோம்.

''தரம் இல்லாத இடங்கள், ஏற்கெனவே பயன்படுத்தின ஊசிகளையே மீண்டும் பயன்படுத்துறது, பழைய இங்க் உபயோகப்படுத்தறதுனு இதெல்லாம் சரும பாதிப்புகளைத் தரலாம். 'ஹெப்பாடிடீஸ் பி'னு சொல்லப்படுற மஞ்சள்காமாலை வர வாய்ப்பிருக்கு. எங்க ஸ்டூடியோவில் தரம், சுகாதாரம் இதுக்கு முக்கியத்துவம் தர்றோம். நாங்க கொடுக்கும் விட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டு, மூணு வாரத்துக்கு நீச்சல், நேரடி சூரிய ஒளி இதை எல்லாம் தவிர்த்தா... பிரச்னையே இல்ல!'' என்ற நவீன்,

''2,000 ரூபாயில் ஆரம்பித்து டிசைனைப் பொறுத்து லட்ச ரூபாய் வரை டாட்டூ போட்டுக்கலாம்... வாங்க!'' என்று அழைத்தார் புன்னகையுடன்!

- அ.பார்வதி

படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism