Published:Updated:

சூப்பராக உயர வைத்த சூப்!

கே.அபிநயா, படங்கள்: தே.தீட்ஷித்

சூப்பராக உயர வைத்த சூப்!

கே.அபிநயா, படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:

சிறுதானிய உணவுகள், பொடி வகைகள், ரெடிமேட் உணவுகள், ஊறுகாய் வகைகள், சூப்... இப்படி திருச்சி, அலமேலு வசமுள்ள வருமான வழிகள் பல. எட்டாவது வரை மட்டுமே படித்திருக்கும் கிராமத்து பெண்ணான தான், இன்று தொழில்முனைவோர் என்று உயர்ந்திருக்கும் பாதையை அவரே சொல்கிறார்....

''சேலம் மாவட்ட கிராமத்து விவசாயக் குடும்பத்துல பொறந்தவ நான். ஏழு பிள்ளைகள் இருக்கிற எங்க வீட்டுல, நான்தான் கடைக்குட்டி. வயசுக்கு வந்ததுமே படிப்பை நிறுத்திட்டாங்க. சீக்கிரமே கல்யாணத்த முடிச்சுட்டாங்க. ரயில்வேயில எலெக்ட்ரீஷியன் ஊழியரான கணவரோட திருச்சி வந்தேன். ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு அமைதியான வாழ்க்கை.

பொறந்த வீட்டுல இருந்த கட்டுப்பாடுகளால ஆசைப்பட்ட எதையும் கத்துக்க முடியல. ஆனா, ஒரு தாயா, வருமானத்துக்கு வழிசெய்யும் விதமா எதையாவது செய்யணும்ங்கிற கட்டாயம், என்னை தைரியமா வாசல் தாண்ட வெச்சுது. சுயஉதவிக் குழுவில் சேர்ந்தேன். அப்போதான், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT) மூலம் பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி தர்றாங்கனு விளம்பரம் பார்த்து எங்க குழுவோட போய் பயிற்சி எடுத்துக்கிட்டோம். அந்த சங்கத்தின் நிறுவனர் மணிமேகலை மேடம் நிறைய உதவிகள் செய்தாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூப்பராக உயர வைத்த சூப்!

பிறகு, சென்னையில அரசு பொருட்காட்சியில் சிறுதானிய உணவுகள், ஊறுகாய் வகைகள் விற்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, மார்க்கெட்டிங் தெரியாததால, செய்த உணவுப் பொருட்கள் எல்லாம், குறிப்பா ஊறுகாய் வகைகள், நாலாவது நாளே கெட்டுப்போச்சு. இதுதான் தொழிலில் நான் கத்துக்கிட்ட முதல் பாடம். பிறகு, மார்க்கெட்டிங் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டதோட, நீண்ட நாள் கெட்டுப்போகாத வகையில உணவுப் பொருட்களைத் தயாரிக்கவும் கத்துக்கிட்டேன். ஊறுகாய்ல 16 வகை, பொடி அயிட்டங்கள்ல 60 வகைக்கும் மேல், சிறுதானியத்துல ஸ்நாக்ஸ் வகைகள்னு நிறைய கத்துக்கிட்டேன். குறிப்பா, சர்க்கரை நோயாளிகளுக்கு பசியைக் கட்டுப்படுத்தும் விதமா சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி, கேழ்வரகு, வெள்ளை சோளம், கம்பு, சிவப்பு கவுனினு இதிலெல்லாம் ரெடிமேட் அவல் செய்தேன். சென்னையில் நடந்த அடுத்த வருஷ அரசு பொருட்காட்சியில மார்க்கெட்டிங் பண்ணினப்ப அமோக வரவேற்பு!

தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைக்கும் பொருட்காட்சிகள், வங்கி, போஸ்ட் ஆபீஸ்ல எல்லாம் என் பொருட்களை விற்பனை செய்தேன். அடுத்ததா பாக்குமட்டைத் தட்டு செய்ய ஆரம்பிச்சு வெளிநாடுகளுக்கு அனுப்பினேன். பொடி, ஊறுகாய் வகைகளை சிங்கப்பூருக்கு அனுப்பினேன். ஆனா, சில காரணங்களால இதையெல்லாம் தொடர முடியல. ஒரு விஷயம் முடியாதுனா... ஆசைக்கோ, வீம்புக்கோ இழுத்துட்டே இருக்காம, உடனே நிறுத்திடணும்ங்கிறதுதான் தொழில்ல முதல் பாடம்...’'

- கிராமத்துப் பெண்ணுக்கு சிறகு முளைத்த கதை, பாராட்ட வைத்தது.

''இப்ப திருச்சியில உணவுப் பொருட்களை லோக்கல் மார்க்கெட்டிங் மட்டும் பண்றேன். சூப் விற்பனையை கூடுதலா கையில் எடுத்திருக்கேன். கே.கே.நகர் உழவர் சந்தையில ஒரு நாளைக்கு 7 வகை சூப் வித்தா, ரெண்டு மணி நேரத்துக்குள்ள விற்பனை முடிஞ்சுடும். 4 மணி நேர உழைப்பில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் கையில நிக்கும். நிறைய ஆர்டர்களும் கிடைக்குது. இப்போ கணவரின் வருமானத்துக்கு பலமா என் வருமானமும் குடும்பத்தைத் தாங்குது'' என்று பெருமிதப்பட்ட அலமேலு,

''சிறுதானிய உணவுகள் பத்தின விழிப்பு உணர்வு பரவிட்டிருக்கிற இந்த நேரத்துல, சிறுதானிய உணவு தயாரிப்பை ஒரு தொழிலா எடுத்துச் செய்தா, லாபம் நிச்சயம். படிப்பெல்லாம் தேவையில்ல, கைப்பக்குவம் போதும். ஆனா, மார்க்கெட் டிங் முக்கியமான விஷயம். இதுக்கு நல்ல பேச்சுத் திறனும், தைரியமும் முக்கியம். மார்க்கெட்டிங்கை நமது நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட இருந்து முதல்ல ஆரம்பிக்கணும்!''

- நம்பிக்கையூட்டுகிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism