Published:Updated:

சிரிப்பின் காதலி!

பொன்.விமலா

சிரிப்பின் காதலி!

பொன்.விமலா

Published:Updated:

''கார்ல போறவங்களோட சிரிப்பைவிட, கைவண்டி இழுக்குறவரோட சிரிப்புக்குள்ள பல நிஜக் கதைகள் இருக்கும். ஆயிரமாயிரம் வலிகள் இருந்தாலும், பிளாட்பாரத்துல படுத்துக்கிட்டு குலுங்கிக் குலுங்கி சிரிக்க அவங்களால மட்டும் தான் முடியும்!''

- அழகாக வார்த்தைகள் கோத்து பேசும் 25 வயது ப்ரீத்தி, தன் கேமரா கண்களால் விதம்விதமான சிரிப்பு களை விழுங்குவதையே ஹாபியாக வைத்திருப்பவர்!

ப்ரீத்தி, சேலத்தில், என்.எல்.பி (NLP) எனப்படும் நியூரோ லிங்குஸ்டிக் புரோகிராமிங் பயிற்சியாளர். பன்னாட்டு நிறுவ னங்கள் மட்டுமல்லாமல், நூற் பாலைகள் மாதிரியான சாதாரண இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வரை சந்தித்து, அவர்களுடைய மனஅழுத்தத்தை குறைப்பதற்காக பயிற்சிகள் கொடுப்பவர். வருமானம் தரும் தொழிலாக இது இருந்தாலும், கனவெல்லாம்... புகைப்படங்கள்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிரிப்பின் காதலி!
சிரிப்பின் காதலி!

''சின்ன வயசுல இருந்தே போட்டோகிராஃபி மேல பயங்கர இன்ட்ரஸ்ட். அதனால கண்ணுல படுறதையெல்லாம் 'கிளிக்’கிட்டே இருப்பேன். எனக்குக் கிடைச்ச பெரிய சர்ப்ரைஸ்... என் லைஃப் பார்ட்னரும் போட்டோகிராஃபரா அமைஞ்சதுதான். அப்புறம் சொல்லணுமா என்ன? அவர்தான் என்னோட குரு'' என்று சிரிக்கும் ப்ரீத்தி,

சிரிப்பின் காதலி!

''எவ்வளவோ காட்சிகளை நான் படம் பிடிச்சாலும், மக்களோட சிரிப்பை படம் பிடிக்குறதுல என்னோட சிரிப்பு அதிகமாகுதுனு ஒரு தருணத்துல உணர ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூலி வாங்குற தொழிலாளிகிட்ட 'ஸ்மைல் ப்ளீஸ்’னு சொல்லும்போது அவரோட சிரிப்பு, எனக்கு எதாவது ஒரு மெசேஜை சொல்லும். நாள் முழுக்க உழைச்சு கஷ்டப்பட்டு வாங்கின உழைப்பின் வலி மறந்து, வீட்டுக்குப் போறோம்ங்கிற சந்தோஷம் அந்தச் சிரிப்புல இருக்கும். இந்த மாதிரி நாம தினசரி பாக்குற சாமான்யர்கள் பலரையும் படம் பிடிச்சேன். கிட்டத்தட்ட இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானவங்களோட சிரிப்பை என் கேமரா கண்களால கலெக்ட் பண்ணியிருக்கேன்.

தினமும் வேலை பாத்தாதான் சோறுனு பொழப்பு நடத்துற ஒரு பாட்டியோட முகத்துல சிரிப்பை வரவைக்க நான் பட்ட பாடு... அப்பப்பா! அந்தப் பாட்டிக்கு பக்கத்துல இருந்தவங்க எல்லாரையும் சிரிக்க வெச்சு படம் புடிச்சுட்டேன். பாட்டி மட்டும் சம்மதிக்கல. அங்கயே ஓரமா இருந்து கண்காணிச்சுட்டே இருந்தேன். திடீர்னு வாய்விட்டு சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க அந்த பாட்டி. அதை ’க்ளிக்’ பண்ணி அவங்ககிட்ட காட்டினேன். 'நான் சிரிச்சு 35 வருஷ மாகுது’னு சிரிச்சிக்கிட்டே பாட்டி சொன்னப்ப எனக்கு ஆனந்தக் கண்ணீர்!

ஒரு மாடலை படம் பிடிக்கிறப்ப, அவங்களுக்குப் பணம் கொடுத்துதான் கூப்பிட்டு வந்திருப்போம். அவங்க கேமராவுக்காக சிரிக்கிற சிரிப்பு, தொழில் சிரிப்பு. நம்மைச் சுத்தி வாழுற சகமனுஷங்களோட சிரிப்பு... யதார்த்த சிரிப்பு! இந்த நிஜ சிரிப்பை யாரும் பத்திரப்படுத்துறது இல்ல. பத்திரப்படுத்துற வேலையை நான் செய்துட்டிருக்கேன். எங்கே... நீங்களும் வாய்விட்டு சிரிங்களேன்'' என்றபடி கேமராவை 'ஸூம்’ செய்கிறார் ப்ரீத்தி அழகாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism