Published:Updated:

''இயற்கை அழகை மிஞ்ச வேண்டும் என் ஓவியங்கள்!''

கே.அபிநயா, படங்கள்: ப.சரவணகுமார்

''இயற்கை அழகை மிஞ்ச வேண்டும் என் ஓவியங்கள்!''

கே.அபிநயா, படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:

'மெட்ராஸ் டே-375' கொண்டாட்டத்தை முன்னிட்டு, முழுக்க முழுக்க பெண்களின் படைப்புகள் மட்டுமே இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி, ஆகஸ்ட் 22 - 29 வரை ஆழ்வார்பேட்டை, ஆர்ட் ஹவுஸில் களைகட்டியிருக்கிறது.

அசோஸியேஷன் ஆஃப் பிரிட்டிஷ் ஸ்காலர்ஸ் (Association of British Scholars Chennai) மற்றும் சென்னை ஆர்ட் ஹவுஸ் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தேஜோ மேனன், தன்னுடைய படைப்புகளையும் இங்கே இடம்பெறச் செய்திருக்கிறார். சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் எம்.பில் பைன் ஆர்ட்ஸ் படித்திருக்கும் இவர், தற்போது சென்னை, ஜஸ்டிஸ் பஷீர் அகமத் செய்யத் பெண்கள் கல்லூரியில் டிசைன் அண்ட் ஆர்ட்ஸ் உதவிப்பேராசிரியர். இவர் ஒரு கிளாஸிக்கல் டான்சரும்கூட.

''22 ஆண்டுகளாக பெயின்ட்டிங் செய்கிறேன். என் அப்பா கே.எம்.கே.மேனன், மலையாள சினிமா தயாரிப்பாளர். அண்ணன் ரவிக்குமார், மலையாளத்தில் ஹீரோ... தமிழில் கேரக்டர் ரோல் என்று செய்திருக்கிறார். இதெல்லாம்தான் என்னையும் ஒரு படைப்பாளியாக உருவெடுக்க வைத்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இயற்கை அழகை மிஞ்ச வேண்டும் என் ஓவியங்கள்!''

எந்த வேலையும் இல்லாத நாட்கள், வீட்டு வேலைகள் முடிந்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரங்கள்... இதிலெல்லாம்தான் பெயின்ட்டிங் செய்வேன். எனக்கு பளீர் நிறங்கள்தான் பிடிக்கும். என் பெயின்ட்டிங்கும் அப்படி பளீர் நிறங்களில்தான் இருக்கும்.

என் ஓவியங்கள் எல்லாம் சுற்றுச்சூழல், ஆண், பெண் சார்ந்ததாகவே இருக்கும். இப்போது இருக்கும் மாணவர்களிடம் எல்லாம் நல்ல க்ரியேட்டிவிட்டி இருக்கிறது. அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்'' என்று பெருமையாகப் பேசும் தேஜோ, 'காண்டம்ப்ரரி ஓவியத்துக்காக ஃபிரான்ஸில் இன்டர்நேஷனல் விருது வாங்கியுள்ளார்.

''இயற்கை அழகை மிஞ்ச வேண்டும் என் ஓவியங்கள்!''

''நான் இந்தப் பூமியில் இருக்கும்வரை, என் கிரியேட்டிவிட்டி வற்றிப் போகும் வரை என் கைகள், வண்ணம் தீட்டிக்கொண்டே இருக்கும்'’ என்று உணர்ச்சி பொங்கச் சொல்கிறார் தேஜோ.

பங்கேற்பாளர்களில் மற்றொருவர், சென்னை, அரசு கவின்கலை கல்லூரியில் படித்திருக்கும் அனாமிகா. ''என் சின்ன வயசுல, எங்கப்பா வீடு கட்டறதுக்காக ஒரு சார்ட்ல டயாகிராம் போட்டார். பிறகு, அது ஒரு அழகிய வீடா மாறிச்சு. மொத்தத்தையும் கூட உட்கார்ந்து பார்த்துட்டே இருந்த எனக்கு, அது ரொம்ப பிடிச்சிருந்தது. கற்பனைக்கு உருவம் கொடுக்கிறது... என்னை ரொம்ப ஈர்த்துச்சு. அந்த ஈர்ப்புதான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா உருவாக்கியிருக்கு. பிரபல ஆர்ட்டிஸ்ட் தனபால் சார்கிட்டதான் நான் படிச்சேன்.

எனக்கு, இயற்கைதான் போட்டியாளர். அது என் ரோல்மாடலும்கூட! இயற்கையோட நான் போட்டி போட்டுக்கிட்டே இருக்கேன். இயற்கையின் அழகை மிஞ்சினதாக என்னோட பெயின்ட்டிங் இருக்கணும்ங்கிறதுதான் ஒரே குறிக்கோள்'' என்று சொல்லும் அனாமிகா, 2014-ம் ஆண்டு நேஷனல் அவார்டு வாங்கியுள்ளார்.

தூரிகை பிடிக்கும் காரிகைகள் வாழ்க!

பிரிட்டனில் படிக்க வாய்ப்பு!

'அசோஸியேஷன் ஆஃப் பிரிட்டிஷ் ஸ்காலர்ஸ் சென்னை' அமைப்பு மூலமாக வருடம் ஒரு முறை சிறந்த ஓவியரைத் தேர்ந்தெடுத்து, பிரிட்டன் நாட்டில் அவர்கள் விரும்பும் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வைக்கிறார்கள். விமானக் கட்டணத்துடன் 1,500 பவுண்ட் தொகையையும் இந்த அமைப்பு வழங்கும். ஒவ்வொரு வருட இறுதியிலும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். வயது 30 முதல் 35 வயது இருக்க வேண்டும். தாங்கள் படிக்க விரும்பும் நிறுவனத்தின் அனுமதி கடிதத்தையும் அவர்களே பெற்றுத் தர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism