Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

பொன்.விமலா, ஷாலினி நியூட்டன்

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

பொன்.விமலா, ஷாலினி நியூட்டன்

Published:Updated:

அசத்தல் அனிமேஷன் இயக்குநர்!

வசனகர்த்தா, இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர் ஜெனிஃபர் லீ. அமெரிக்க நாட்டை சேர்ந்த லீ, 1971-ம் ஆண்டு பிறந்தவர். 'எ தௌசண்ட் வோர்ட்ஸ்' எனும் படம் மூலம் தயாரிப்பாளர் மற்றும் இணை இயக்குநராக பணியைத் துவக்கிய லீ, வால்ட் டிஸ்னியின் 'ரெக் இட் ரால்ஃப்' படம் மூலம் திரைக்கதை எழுத்தாளராக மாறினார். இந்தப் படம் ஆஸ்கர் விருதை சர்வசாதாரணமாக வென்றது. பெரும் இயக்குநர்களுக்கும் எட்டாக் கனியாக இருக்கும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் அனிமேஷன் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்த இவர், 'ஃப்ரோஸன்’ எனும் உலகப்புகழ் அனிமேஷன் படத்தைக் கொடுத்தார். இந்தப் படமும் ஆஸ்கர் மட்டுமல்லாமல் பல விருதுகளையும் வென்று, 2013-ம் ஆண்டின் மிகச்சிறந்த அனிமேஷன் படமாக புகழ்பெற்றது. 42 வயதாகும் லீ, தற்போது 'ரிங்கிள் இன் டைம்' எனும் பிரபலமான குழந்தைகள் நாவலை திரைக்கதையாக எழுதி வருகிறார்.

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நஸ்ரியாவுக்கு கல்யாணம்!

'நேரம்' படம் மூலம் துள்ளல் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர், சிரிக்கும் கண்களுக்குச் சொந்தக்காரியான நஸ்ரியா. மின்னல் வேகத்தில் 'நய்யாண்டி’, 'ராஜாராணி’, 'வாயை மூடிப்பேசவும்’, 'திருமணம் என்னும் நிக்காஹ்’ என்று வரிசையாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நஸ்ரியா, தற்போது கல்யாணம் கட்டிக்கொண்டுவிட்டார். மலையாளத்தில் 'எல் ஃபார் லவ்' என்ற படத்தில் தன்னுடன் நடித்த பகத் பாசிலுடன் நஸ்ரியா காதலில் விழ, இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்ட, ஆகஸ்ட் 21 அன்று, திருவனந்தபுரத்தில், அல்சாஜ் ஆடிட்டோரியத்தில், இஸ்லாமிய முறைப்படி கோலாகலமாய் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

'பூவே பூச்சூடவா’, 'காதலுக்கு மரியாதை’ என்று தமிழில் அசத்தலான படங்களைத் தந்த, மலையாள தேசத்து இயக்குநர் பாசிலின் மகன்தான் இந்த பகத் பாசில்.

வாழ்த்துக்கள் தம்பதிகளே!

ஒரே நாளில் ஒரு கோடி!

அமெரிக்க பாப் பாடகி, நடிகை மற்றும் எழுத்தாளர் டெய்லர் ஸ்விஃப்ட் உருவாக்கியிருக்கும் புதிய ஆல்பத்தின் பெயர் '1989’. இதை, அக்டோபர் மாதத்தில் 'ஐடியூன்ஸ்' நிறுவனம் வெளியிட உள்ளது. இதிலிருந்து 'ஷேக் இட் ஆஃப்’ என்னும் ஒரு பாடல் மட்டும் ஆகஸ்ட் 18 அன்று 'யூடியூப்’பில் வெளியாக... ஒரே இரவில் ஒரு கோடியே 26 லட்சங்களைக் கடந்து வைரலில் சாதனை படைத்துள்ளது. 1989 என்பது, டெய்லர் ஸ்விஃப்ட் பிறந்த ஆண்டு. பாப் பாடகர்களில், தனது இசை ஆல்பத்தை புரமோட் செய்வதில் டெய்லர் ஸ்விஃப்ட் திறமைசாலி. மற்றவர்கள் ரில¦ஸ் செய்யும் தறுவாயில் மட்டுமே சுறுசுறுப்பாக வெளியில் செயல்படுவார்கள். இவர், ஆண்டு முழுக்கவே தொடர்ந்து உலகத்தை வலம் வந்து ரசிகர் வட்டத்தை பரபரக்க வைத்துக்கொண்டே இருப்பார்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

அட, புதுமைப் பெண்!

பெங்களூரு பெண்ணான அவரை, தினமும் ஜாக்கிங் செல்லும்போது, விடாமல் கிண்டல் செய்துகொண்டிருந்தான் ஒரு ரோட் சைடு¢ ரோமியோ. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்தப் பெண், ஒரு நாள் அவனை விரட்டிச் சென்று, மண்டியிட வைத்து ஓங்கி மிதிக்கவே, பயந்து போனவன், தன் பேன்ட்டை கையில் பிடித்தபடி ஓடிப்போனான். சக நண்பர் ஒருவர் இதையெல்லாம் படம் பிடிக்க, 'ஈவ் டீஸிங் எ டஃப் லெஸன்’ என்கிற பெயரில் ஃபேஸ் புக்கில் ஏற்றப்பட்ட இந்த வீடியோ... சில மணி நேரங்களிலேயே 4,000 லைக்குகளை பெற்று வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

இந்திய பெண்களின் மொபைல்களிலும் பாரதி கண்ட இந்தப் புதுமைப் பெண் இப்போது பிரபலமாகிவிட்டார்.

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

எம்மா வாட்சன்!

'ஹெர்மாயின்’ இந்தப் பெயரைக் கேட்டாலே... ஹாலிவுட் பிரியர்கள் யாராக இருந்தாலும் சற்றே திரும்புவார்கள். 'ஹாரி பாட்டர்’ பட நாயகியின் பெயர்தான் இது. இந்தப் பாத்திரத்தில் நடித்த எம்மா வாட்ஸன், துடுக்கான பேச்சு, புத்திசாலித்தனமான நடிப்பு என அனைவராலும் குறும்புக் குழந்தையாக அறியப்பட்டவர். இப்போது 23 வயதாகும் எம்மா, சமூக ஆர்வலராகவும் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் துருக்கி துணைப்பிரதமர், 'பெண்கள் பொது இடத்தில் சிரிக்கக் கூடாது' என கருத்துத் தெரிவிக்க, தாங்கள் சிரித்தபோது க்ளிக்கிய போட்டோக்களை ட்விட்டரில் ஏற்றி, அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர் பெண்கள் பலரும். இதில் தன்னையும் இணைத்துக்கொண்டுவிட்டார் எம்மா. ஆண், பெண் இருவரும் சமம் என்பதற்காக போராடும் இந்தப் பெண்ணியவாதி, ஐக்கிய நாடுகள் சபையில், 'என் வுமன்’ எனும் மரியாதைக்குரிய அம்பாசிடராக பொறுப்பேற்றுள்ளார். மிகச்சிறு வயதில் இந்த பதவியில் அமரும் முதல் பெண் இவர்தான். இன்னொரு பக்கம் மாடலிங் துறையிலும் பிரபலமாகவே இருக்கிறார்.

ஒரு நடிகை என்பதைத் தாண்டி, சக மனுஷி எனும் கண்ணோட்டத்தில் பொது இடத்தில் தைரியமாக உலா வரும் எம்மாவின் குறிக்கோள், 'ஆணுக்கு பெண் என்றும் இளைத்தவள் இல்லை' என்பதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism