Published:Updated:

வேலைக்கு உத்தரவாதம் தரும் இலவச பயிற்சிகள் கிடைக்குமா?

வேலைக்கு உத்தரவாதம் தரும் இலவச பயிற்சிகள் கிடைக்குமா?

கொஸ்டீன் ஹவர்

''மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எனக்கு, குடும்பச் சூழ்நிலை காரணமாக ப்ளஸ் டூ-வுக்கு மேல் படிப்பைத் தொடர முடியவில்லை. அதிகம் செலவு பிடிக்காத அல்லது கல்வி உதவித்தொகையுடன், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமுள்ள குறுகியகாலப் படிப்பு அல்லது பயிற்சி இருப்பின், அது குறித்த தகவல்களை அளித்தால் பேருதவியாக இருக்கும்'' என்று கேட்டிருக்கும் கள்ளக்குறிச்சி சுமித்ராவுக்காக, அது தொடர்பான பயிற்சி மற்றும் படிப்புகளை வழங்கி வரும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பெரம்பலூர், கிறிஸ்டியன் கல்வி நிறுவன வைஸ் சேர்மன் சாம் பிரபாகரன் வழிகாட்டுகிறார்.

வேலைக்கு உத்தரவாதம் தரும் இலவச பயிற்சிகள் கிடைக்குமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

''தமிழகத்தின் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட சமூகத்தின் பொருளாதார வசதி குறைந்த மக்களுக்காக அரசு சார்பில் இலவசமாக தொழிற்படிப்புகள் வழங்கப்படுகின்றன. சான்றிதழ் படிப்பு ஆறு மாதம், டிப்ளமா படிப்பு ஒரு வருடம். சான்றிதழ் படிப்புக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு. டிப்ளமாவுக்கு... ப்ளஸ் டூ. பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.) சாதிச்சான்றிதழ், பள்ளி மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் என்பதற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்று போன்றவை இந்த இலவச படிப்புகளைப் பெற விண்ணப்பிக்க அவசியமானவை.

ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் இதுகுறித்து நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகும். விளம்பரத்தில், குறிப்பிட்ட மாவட்டத்தில் பயிற்சி அளிக்க உள்ள கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவலும் இடம் பெற்றிருக்கும். அந்தக் கல்வி நிறுவனத்தையோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தையோ நேரில் அணுகி, தகவல்களைப் பெறலாம்; தங்களுக்கு ஏற்ற படிப்பைப் பற்றி மாணவர்கள் அங்கு கவுன்சிலிங்கும் பெறலாம்.

பிறகு, உரிய சான்றிதழ் நகல்களோடு பிற்பட்ட நலத்துறை அலுவலகம் வாயிலாகவோ, பயிற்சியை நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் கல்வி நிறுவனம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்தில் சேர்க்கை முடிந்திருப்பின், அருகிலுள்ள வேறு மாவட்டத்தை அணுகலாம்.

வேலைக்கு உத்தரவாதம் தரும் இலவச பயிற்சிகள் கிடைக்குமா?

பாரா மெடிக்கல் படிப்புகள், ஐ.டி.ஐ தொழிற்படிப்புகள், கம்ப்யூட்டர் படிப்புகள், பியூட்டிஷியன், டெக்ஸ்டைல், கேட்டரிங், ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் மற்றும் தொழிற்பயிற்சிகளை இத்திட்டத்தின் கீழ் பெறலாம். பாரா மெடிக்கலின் கீழ் க்ளினிக்கல் நர்சிங் அசிஸ்டன்ட், இ.சி.ஜி மற்றும் எக்ஸ்ரே டெக்னீஷியன், லேப் டெக்னீஷியன், பியூட்டிஷியன், கேட்டரிங், டெக்ஸ்டைல் போன்ற படிப்புகள் மாணவிகள் மத்தியிலும்... வெல்டர், டர்னர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட ஐ.டி.ஐ. படிப்புகள் மாணவர்கள் மத்தியிலும், கம்ப்யூட்டர் படிப்புகள் இரு பாலர் மத்தியிலும் வரவேற்புள்ளதாக இருக்கின்றன.

நேரடிக் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் தொலைதூரப் படிப்பை மேற்கொள்பவர்களும், கூடுதல் தகுதிக்காக இந்த இலவச படிப்புகளை மேற்கொள்கிறார்கள். அதேபோல, இந்த இலவச படிப்புகளை முடித்ததும்... கூடுதலாக ஒரு டிகிரியை முடிப்பவர்களுக்கு கூடுதல் சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

பயிற்சியின் முடிவில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மற்றும் பிற்பட்ட நலத்துறை சார்பில் அளிக்கப்படும் சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்களைத் தேடும் தனியார் நிறுவனங்களுக்காக இந்தப் பதிவு ஏற்பாடு. இதைக் கொண்டு அரசுப்பணி கோரும் வாய்ப்பு இன்னும் வரவில்லை.

பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு 100 சதவிகித வேலைவாய்ப்பு அமைகிறதா என்பதைக்கொண்டே, அடுத்த வருடத்திலும் பயிற்சி அளிக்க குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தை அரசு அனுமதிக்கும் வகையிலான ஏற்பாடு பின்பற்றப்படுகிறது. எனவே, பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்களே மாணவர்களுக்கான வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதம் ஆகின்றன.

தங்கும் வசதி, உணவு தவிர்த்து படிப்பு, பயிற்சி மற்றும் கல்வி உபகரணங்கள் அனைத்தும் இதன் கீழ் இலவசமாகக் கிடைக்கும்.

இந்தப் படிப்புகள் மற்றும் பயிற்சிகளை பெறுவதற்கு அதிகபட்ச வயது வரம்பு 35 என்பதால், திருமணமான பெண்களும் இதில் சேர்ந்து சுய அடையாளத்தையும், வாழ்க்கையில் பிடிப்பையும், வேலைவாய்ப்பு தகுதியையும் பெறலாம்.''