Published:Updated:

மாடலிங்... இது நம்ம ஏரியா!

மாடலிங்... இது நம்ம ஏரியா!

கல்லூரிப் படிப்பு ஒருபக்கம், கேமரா ஃப்ளாஷ்கள் மறுபக்கம் என்று மாடலிங் ஃபீல்டில் கலக்கும் இளம்பெண்களின் காலம் இது! அந்த மாடலிங் துறை, இன்றைய யுவதிகளின் ஆர்வத்துக்கும், நம்பிக்கைக்கும் உரியதாக எந்தளவுக்கு எளிமையாக மாறி இருக்கிறது என்பதை... இதில் கலக்கிக் கொண்டிருக்கும் ஹரித்தா, கரிஸ்மா, அத்தியா ஆகியோரிடம் பேசியபோது நன்றாகவே உணர முடிந்தது!

''நம்மளோட சுதந்திரத்துக்கு ஒரு லிமிட் இருக்கு. மாடலிங் துறைக்கு வர்ற பெண்கள் அந்த லிமிட்டை சரியா கடைப்பிடிக்கணும்!'' என்று மாடலிங்கின் பாலபாடத்தை கற்பிக்கிற ஹரித்தா, இந்த வருடம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ. சோஷியாலஜி முடித்திருக்கிறார்.

மாடலிங்... இது நம்ம ஏரியா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஜர்னலிஸ்ட். ப்ளஸ் ஒன் படிக்கும்போதே மாடலிங் பீல்டுக்கு வரணும்னு முடிவெடுத்துட்டேன். காலேஜ்ல சேர்ந்ததுக்கு அப்புறம் அதுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கிட்டேன். ஸ்பெஷல் என்னன்னா, எனக்கு மாடலிங் துறையில பிள்ளையார்சுழி போட்டது, 2008-ல 'அவள் விகடன்’ அட்டைப்படத்துல வெளியான என்னோட போட்டோதான். அதைத் தொடர்ந்துதான் பாராட்டுகளும், வாய்ப்புகளும் கிடைச்சுது.

அழகை முதன்மையா கொண்டாடினாலும், டைமிங், உழைப்பு, ரசனை, அர்ப்பணிப்புனு இதுல நிறைய சென்ஸிட்டிவான விஷயங்கள் இருக்கு. படிக்கும்போதே அந்த ஃபீல்டோட நுணுக்கங்கள தெளிவா கத்துக்கிட்டேன். இருபதுக்கும் மேற்பட்ட புராஜெக்ட்கள் முடிச்சாச்சு. படிப்பும் முடிஞ்சுட்டதால, இனி ஃபுல் டைம் மாடல் நான்!'' என்று சந்தோஷப்படுகிறார் ஹரித்தா.

மாடலிங்... இது நம்ம ஏரியா!

எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்சி.,'எலெக்ட்ரானிக் மீடியா’ முடித்து, பி.ஜி. அட்மிஷனுக்காகக் காத்திருக்கும் கரிஸ்மா, ''என் அப்பா ராம், நிறைய சீரியல்ல, சினிமாவுல நடிச்சவர். இப்போ பிஸினஸ்மேன். அம்மா, பியூட்டி பார்லர் மேனேஜர். அவங்களோட பாதிப்புலதான் நான் மாடலிங் வந்தேன்னு நெனச்சுடாதீங்க. எனக்கு ஃபிலிம் டைரக்டர் ஆகறதுதான் கனவு. அதுக்கான அடிப்படைப் பயிற்சி மற்றும் தொடர்பு கிடைக்குமேனுதான், இதை டிக் பண்ணினேன்.

காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எடுத்த மூணு குறும்படங்கள்ல நடிச்சிருக்கேன். இப்ப பரபரப்பா ஓடிட்டிருக்கற 'காஞ்சனா’   படத்தோட தெலுங்கு வெர்ஷன்ல ஒரு ரோல் பண்ணியிருக்கேன்.

உண்மையைச் சொல்லணும்னா, கிளாஸ்ரூம், காபி ஷாப்னு இருந்த என்னை, ஷூட், ஷெட்யூல், பேமென்ட்னு இந்த மாடலிங் கேரியர்தான் காலேஜ் நாட்கள்லயே ஒரு கம்ப்ளீட் புரொஃபஷனலா மாத்தி இருக்கு.விருப்பம் இருக்கிற பெண்கள்... தடைகள், தயக்கங்களை தள்ளி வெச்சுட்டு வாங்க... இது நம்ம ஏரியா!'' என்று அழைக்கிறார்.

மாடலிங்... இது நம்ம ஏரியா!

''சென்னை டபுள்யூ.சி.சி. காலேஜ்ல ஃபைனல் இயர் விஸ்காம் படிக்கிறேன்'' என்று அறிமுகமாகும் அத்தியா, சிம்பிளாகப் பேசுகிறார். ''எனக்கு அப்பா மட்டும்தான். அவர் டாக்டர். தங்கை, ஸ்கூல் போயிட்டு இருக்கா. பள்ளிக்கூட நாட்கள்லயே கதைகள் எழுத ஆரம்பிச்சேன். ஆன்லைன் பத்திரிகைகள்ல சிலது பப்ளிஷ் ஆச்சு. அந்த அங்கீகாரம் தந்த சந்தோஷத்துல, கிரியேட்டிவிட்டியை சார்ந்து சுழல்ற மீடியா ஃபீல்ட்லதான் கெரியர் இருக்கணும்னு முடிவு எடுத்தேன். அதுக்கான ஆரம்பப் புள்ளியாதான் மாடலிங்ல ஆர்வம் காட்ட ஆரம்பிச்சேன். அதுக்கு வாய்ப்பா அமைஞ்சது... சில்க்ஸ் விளம்பரம். அதுல தலைகாட்டினதுக்கு அப்புறம் நிறைய ஷோஸ் நடத்தி கொடுத்தேன்.

தமிழ் சினிமாவுல பெயர் எடுக்கிற ஹீரோயினா ஆகணுங்கறது, என்னோட பெரிய கனவு. இன்னொரு பக்கம், சில ஸ்கிரிப்ட்களும் வெச்சு இருக்கேன். நிறையவே திறமை இருக்குங்கிற நம்பிக்கை இருக்கு. அது போதும்ல?!'' என்று அட்டகாசமாக முடித்தார் அத்தியா!

நீங்கள் அழகு ப்ளஸ் அலர்ட்னெஸ் கேர்ளா... மாடலிங் துறை உங்களை வரவேற்கிறது!

- ம.மோகன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்