Published:Updated:

ஃபவுண்டேஷன் பலவிதம்... உங்களுக்கு எது பொருந்தும்?

இந்துலேகா.சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு பெண்... மூக்கும், முழியுமாக அழகாக இருந்தாலும், அவள் டல்லாக இருந்தால் நன்றாகவா இருக்கும்? அந்த டல்னஸ்ஸை தற்காலிகமாகப் போக்கி, முகத்தை 'பளிச்’ ஆக்குவதுதான், 'மேக்கப் பேஸ்’ என்று சொல்லப்படும் ஃபவுண்டேஷன். இதைப் போட்டுக்கொண்ட பிறகுதான், ஐலைனர், பிளஷர் இதுபோன்ற மேக்கப் அயிட்டங்களைப் பயன்படுத்தி மேலும் மெருகூட்டிக்கொள்ள வேண்டும். ஆனால், உங்களுக்கான ஃபவுண்டேஷனை சரியாகத் தேர்வு செய்யாவிட்டால், மொத்த மேக்கப்பும் வேஸ்ட் ஆகிவிடும். இதுமட்டுமல்ல, இப்போது மார்க்கெட்டில் பற்பல விதங்களில் ஃபவுண்டேஷன்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதன் வகைகளை யும், பயன்பாடுகளையும் தெரிந்துகொண்டால்தானே அழகுக்கு அழகு சேர்க்க முடியும்.

இதைப் பற்றி சென்னை மற்றும் சிங்கப்பூர் 'மியா பியூட்டி சலூன்’ நிர்வாகி ஃபாத்திமா, இங்கே விவரிக்கிறார்.

லிக்விட் ஃபவுண்டேஷன்: ''இதில் ஆயில் பேஸ்டு, ஆயில் ஃப்ரீ, வாட்டர் புரூஃப், 24 ஹவர்ஸ் என்று பல வகைகள் உண்டு. இதை ஒரு கோட்டிங் அப்ளை செய்து, வழக்கமான லைட் மேக்கப் ஆகவும் போட்டுக்கொள்ள லாம், இரண்டு கோட்டிங் அப்ளை செய்து விசேஷங்களுக்கான ஹெவி மேக்கப் ஆகவும் போட்டுக்கொள்ளலாம்.

ஃபவுண்டேஷன் பலவிதம்... உங்களுக்கு எது பொருந்தும்?

டின்டெட் மாய்ஸ்ச்சரைஸர்: சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதுடன், மேக்கப் போட்டது போன்ற ஒரு பிரைட் லுக் தருவது, இதன் சிறப்பு. இதனுடன் எஸ்.பி.எஃப்-ம் இருந்தால், அது சன் ஸ்க்ரீனாகவும் பயன்படும்.

ஃபவுண்டேஷன் பலவிதம்... உங்களுக்கு எது பொருந்தும்?

ஆயில் பேஸ்டு ஃபவுண்டேஷன்: இது தொய்வான சருமத்தை இளமையாக மாற்றும். குறிப்பாக, முக சுருக்கங்களைத் தற்காலிகமாக மறைக்கும். வறண்ட சருமத்தை வழவழப்பாகக் காட்டும் தன்மை, மற்றொரு சிறப்பு.

ஷீர் ஃபவுண்டேஷன்: மேக்கப் செய்தது தெரியக்கூடாது என்று நினைப்பவர்களுக்கான சரியான தேர்வு, ஷீர் ஃபவுண்டேஷன். இதை மிகவும் சுலபமாக அப்ளை செய்துகொள்ளலாம். நார்மல், டிரை சருமத்தினருக்கான நல்ல சாய்ஸான இதை, ஆயிலி சருமம் உள்ளவர்கள் தவிர்க்கலாம்.

மேட் அல்லது ஆயில் ஃப்ரீ ஃபவுண்டேஷன்: மற்ற ஃபவுண்டேஷன்களில் ஆயில் கலந்திருக்கும். ஆனால், இது முழுக்க முழுக்க வாட்டர் பேஸ்டு ஃபவுண்டேஷன் என்பதால், ஆயில் ஃப்ரீ. ஆயிலி சருமத்தினர் இதைத் தேர்ந்தெடுக்கலாம். இதைப் பயன்படுத்துவதற்கு முன் சருமத்தில் ஒரு கோட் மாய்ஸ்ச்சரைஸர் அல்லது ஃபவுண்டேஷன் ப்ரைமர் பயன்படுத்தினால், நீட் லுக் கிடைக்கும்.

விப்டு ஃபவுண்டேஷன்: எல்லா வகையான சருமத்துக்கும் பொருந்தக்கூடியது. குறிப்பாக, வறண்ட மற்றும் வயதான சருமத்துக்கு, நிமிடங்களில் ஃப்ரெஷ் லுக் தரும்.

ஸ்டிக் ஃபவுண்டேஷன்: முகம் முழுக்க பயன்படுத்துவதற்கான ஃபவுண்டேஷன் அல்ல; முகத்தில் இருக்கும் தழும்புகள், கரும்புள்ளிகள், மங்கு, கண் கருவளையம் போன்றவற்றை மறைப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் ஃபவுண்டேஷன். இதைப் பயன்படுத்தியதும், முகம் முழுவதுக்கும் க்ரீம் அல்லது லிக்விட் ஃபவுண்டேஷன் அப்ளை செய்யலாம். நார்மல், ஆயிலி சருமத்தினர் இதை நேரடியாக அப்ளை செய்யலாம். வறண்ட சருமத்தினர் சிறிது மாய்ஸ்ச்சரைஸர் தடவிவிட்டு, அதன்பிறகு இந்த ஸ்டிக் ஃபவுண்டேஷனை அப்ளை செய்யவும்.

பவுடர் ஃபவுண்டேஷன்: இதை காம்பாக்ட் பவுடர் என்று சொல்வோம். ஆயிலி சருமத்துக்கு புத்துணர்வு தோற்றம் தரும். தினசரி உபயோகத்துக்குச் சிறந்தது.

ஃபவுண்டேஷன் பலவிதம்... உங்களுக்கு எது பொருந்தும்?

மினரல் ஃபவுண்டேஷன்: இயற்கையான மினரல்களில் இருந்து தயாரிக்கப்படும் இது, சென்ஸிட்டிவ் மற்றும் அலர்ஜி சருமத்துக்குச் சிறந்தது. இதை முகத்தில் அப்ளை செய்ய பெரிய பிரஷ் பயன்படுத்த வேண்டும்.

ஃபவுண்டேஷன் பலவிதம்... உங்களுக்கு எது பொருந்தும்?

ஷிம்மர் ஃபவுண்டேஷன்: இது முகத்தை கண் கூசும் அளவுக்கு ரொம்பவே பளிச்செனக் காட்டும். அதனால் முகம் முழுவதும் அப்ளை செய்வதைவிட, எங்கெல்லாம் தேவையோ, அதாவது கன்னங்களில், முகவாயில், மூக்கின் நுனியில், புருவங்களுக்கு நெருங்கிய நெற்றிப் பகுதியில் என்று எங்கெல்லாம் ஹைலைட் செய்ய வேண்டுமோ, அங்கு மட்டும் பூசலாம். சரும நிறத்தைவிட லைட் ஷேடில் இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஃபவுண்டேஷன் பலவிதம்... உங்களுக்கு எது பொருந்தும்?
ஃபவுண்டேஷன் பலவிதம்... உங்களுக்கு எது பொருந்தும்?

வாட்டர் புரூஃப் ஃபவுண்டேஷன்: வெயில், வியர்வை மற்றும் மழைக்காலங்களில் மேக்கப் கலையாமல் இருக்க இதைப் பயன்படுத்தலாம். ஆனால், இதை சாதாரணமாக சோப் போட்டு கழுவாமல், மேக்கப் ரிமூவர் கொண்டு க்ளீன் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சரும துவாரங்கள் விரியவும், பிளாக் ஹெட்ஸ் வரவும் வாய்ப்புள்ளதால், தினசரி உபயோகத்துக்கு ஏற்றது அல்ல.

ஃபவுண்டேஷன் பிரைமர்: சுவருக்கு பெயின்ட் அடிக்க பிரைமர் பயன்படுத்துவது போல்தான் இதுவும். இது முகப்பருவினால் ஏற்படும் சிறுசிறு குழிகள், வெட்டுக் காயங்கள் போன்றவற்றைத் தற்காலிகமாக நிரப்பும். அதனால் பிரைமர் மீது ஃபவுண்டேஷன் அப்ளை செய்யும்போது, சருமம் பார்க்க சீராக இருக்கும். மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்து ஃபவுண்டேஷன் அப்ளை செய்வதைவிட, பிரைமர் அப்ளை செய்து ஃபவுண்டேஷன் அப்ளை செய்யும்போது கூடுதல் அழகாக இருக்கும்.

இவற்றில் உங்கள் சருமத்துக்கானதை தேர்வு செய்துவிட்டீர்களா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு