Published:Updated:

கல்யாண க்ளிக்ஸ்!

போட்டோகிராஃபிஇந்துலேகா.சி

கல்யாண க்ளிக்ஸ்!

போட்டோகிராஃபிஇந்துலேகா.சி

Published:Updated:
கல்யாண க்ளிக்ஸ்!

எந்த ஒரு நிகழ்வையும் தவற விடாம, அந்த நொடியை அப்படியே படம் பிடிக்கிறதுதான் போட்டோ ஜர்னலிஸ்ட்டோட திறமை. இதில் இன்னும் நேர்த்தியும் சுவாரஸ்யமும் கலப்பதுதான்... வெடிங் போட்டோ ஜர்னலிஸம்!''

- சமீப ஆண்டுகளாக மிகவும் புகழ்பெற்று வரும் 'வெடிங் கேண்டிட் புகைப்படத் துறை'க்கு (திருமண புகைப்படங்கள்) அழகாக அர்த்தம் சொல்கிறார், கார்த்திக் யாதவ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அடிப்படையில நான் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். சென்னை, ட்ரக்கிங் கிளப்ல உறுப்பினரா இருக்கிறதால, மற்ற கிளப் உறுப்பினர்களோட சேர்ந்து நிறைய இடங்கள் சுத்துவேன். அந்த நிகழ்வுகளைப் படம் எடுக்கிறதுக்காக கேமராவை கையில் எடுத்தேன். அந்த அனுபவ ஞானத்தால நண்பர்களோட திருமணத்துக்கு ஃப்ரெண்ட்லியா போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன்'' எனும் யாதவ், தன்னுடையை வேலை பாதிக்காதவாறு போட்டோகிராஃபியையும் தொடர்கிறார்.

கல்யாண க்ளிக்ஸ்!
கல்யாண க்ளிக்ஸ்!
கல்யாண க்ளிக்ஸ்!
கல்யாண க்ளிக்ஸ்!
கல்யாண க்ளிக்ஸ்!
கல்யாண க்ளிக்ஸ்!

''எளிய திருமணங்களைவிட, சொந்தங்கள் கூடி நடத்தும் கலகல திருமணங்கள்தான் என்னோட விருப்பம். என் கேமராவுக்கு நல்ல தீனி கிடைக்கும். அக்னி குண்டத்தை வலம் வந்து, அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்து, ஒரே ஊஞ்சல்ல ஆடி, தேங்காய் உருட்டி, அப்பளம் உடைச்சு, மோதிர வேட்டையில ஒரே குடத்தில் இருகரம் இணைச்சுனு சடங்கு சம்பிரதாயங்களோட... அத்தை, மாமா, பெரியப்பா, சித்தப்பானு சொந்தங்கள் சூழ வெகு விமரிசையா நடக்கும் அந்த திருமணங்கள்ல கலாசார அழகு நிறைஞ்சிருக்கும். அதை அப்படியே பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பாவும் இந்த போட்டோகிராஃபியை நான் பார்க்கிறேன்!'' எனும் கார்த்திக்,

''என்னைப் பொறுத்தவரை நான் பண்ணுவது கிரியேட்டிவ் கேண்டிட் போட்டோகிராஃபி. அதாவது ஒவ்வொரு போட்டோவிலும் கிரியேட்டிவிட்டி, ஒவ்வொரு ஃபிரேமிலும் ஒரு கதை இருக்கணும். அப்படி எல்லா புகைப்படங்கள்லயும் சந்தோஷம், பூரிப்பு, வெட்கம், வாழ்த்து, ஆனந்தக் கண்ணீர்னு உணர்வுக் குவியல்களை கொண்டு வருவேன்'' என்றவர், தான் எடுத்த புகைப்படங்களின் கதைகளையும் சொல்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism