Published:Updated:

வீக்எண்ட் சந்தை... அசத்தும் அழகிரி மருமகள்!

சந்தை சி.மீனாக்ஷி சுந்தரம் , படங்கள்: ரா.வருண் பிரசாத் 

வீக்எண்ட் சந்தை... அசத்தும் அழகிரி மருமகள்!

சந்தை சி.மீனாக்ஷி சுந்தரம் , படங்கள்: ரா.வருண் பிரசாத் 

Published:Updated:

யவுசெஞ்சு அரசியல் பத்தி கேக்காதீங்க, எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்!'' - முன்னெச்சரிக்கை அறிவிப்போடு வந்தமர்ந்தார், அனுஷா துரைதயாநிதி. மு.க.அழகிரியின் மருமகள்.

'வீக்எண்ட் சந்தை’ என்று இவர் ஆரம்பித்திருக்கும் கான்செப்ட், சென்னையில் செம டாக்.

''வீக்எண்ட் சந்தை... என்னதான் உங்க பிளான் அனுஷா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னோட ரொம்ப நாள் கனவு இது. காலேஜ் முடிச்சப்பவே இது எனக்குள் விழுந்த ஐடியா. கல்லூரி நண்பர்கள்லாம் சேர்ந்து நெஃபெர்டாரி (Nefertari) என்ற ஈவென்ட் மேனேஜ்மென்ட் அமைப்பை தொடங்கியிருக்கோம். இது மூலமாத்தான் இந்த 'வீக்எண்ட் சந்தை’. இன்றைய இளைஞர்கள் பலர், வேலை தேடுவதைவிட, சொந்த பிசினஸ் முயற்சியில் ஆர்வமா இருக்காங்க. காஸ்ட்யூம் டிசைனிங், பியூட்டி பார்லர், கேம்ஸ் டெவலப்பிங், தொழில்நுட்ப பொருட்கள் விற்பனை, பெயின்ட்டிங், உணவு வகைகள், ஃபேஷன்னு தாங்கள் ஆரம்பித்திருக்கும் தொழிலை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க நினைக்கிற இளம் பிசினஸ் மேக்னட்களையும், இந்த மாதிரி விஷயங்களை ஒரே இடத்துல எதிர்பார்க்கிற பொதுமக்களையும் ஒண்ணா இணைக்கிற புள்ளிதான் வீக்எண்ட் சந்தை!''

வீக்எண்ட் சந்தை... அசத்தும் அழகிரி மருமகள்!

- இளம் எனர்ஜிகளின் பிரதிநிதியாகப் பேசும்போதும், இன்னும் பிரகாசமாகிறார் அனுஷா.

''இந்த சந்தையில் இருக்கிற ஒவ்வொரு கடைக்கும் ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்றோம். தேர்வு செய்யப்பட்ட கடைகளோட, சில என்.ஜி.ஓ குழுக்களுக்கும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் இலவச ஸ்டால்கள் வழங்கியிருக்கோம். திருநங்கைகள், பெண்கள் விடுதலை, ஒடுக்கப்பட்ட சமுதாயம்னு சமூக அக்கறையோட பல விஷயங்களை முன்னெடுத்துச் செல்ற 'சீயா’ அமைப்பு எங்களோட இணைஞ்சிருக்காங்க. மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஸ்டால்களுக்கும் இடம் கொடுத்

திருக்கோம். இதுல கிடைக்கிற லாபம், நல்ல காரியங்களுக்குப் போய்ச் சேரும். போன வருஷம் 40 ஸ்டால்களோட கோவையில ஆரம்பிச்ச இந்த சந்தை, இப்போ 80 ஸ்டால்களோட சென்னையில் ஹிட் அடிச்சிருக்கிறது சந்தோஷமான விஷயம்!'' எனும் அனுஷாவுக்கு, சமூக தளத்தில் இயங்குவதற்கான அக்கறையும் சிந்தனையும் நிறையவே இருக்கிறது.

''அடித்தட்டு மக்களோட வசிப்பிடங்கள்ல பெண் குழந்தைகள் சந்திக்கிற பிரச்னைகள் சொல்ல முடியாதது. பாதுகாப்பின்மை, குடும்பத்தோட வறுமை உள்ளிட்ட காரணங்களால் திறமை இருந்தும் முடங்கிப் போறதை பார்த்திருக்கேன். இதைப் பத்தின கவலை எப்பவும் எனக்குள்ள கேள்விகளை எழுப்பிட்டே இருக்கும். அவங்களுக்கெல்லாம் அதைச் செய்யணும், இதைச் செய்யணும்னு வார்த்தைகளா சொல்லாம, செய்துட்டு பகிர்ந்துக்கறேன்!'' என்றவரின் 'பெரிய’ குடும்பம் பற்றிக் கேட்டோம்.

வீக்எண்ட் சந்தை... அசத்தும் அழகிரி மருமகள்!

''துரை, அப்பா, அம்மா (மாமனார் அழகிரி, மாமியார் காந்தியை அப்பா, அம்மா என்றே குறிப்பிடுகிறார்) மொத்தக் குடும்பமும் என்னை அக்கறையோட பார்த்துக்கிறாங்க. அப்பாவுக்கு கிரிக்கெட், சினிமா ரொம்பப் பிடிக்கும். சமயத்துல துரை, நான் எல்லாருமே அவர்கிட்ட மொக்கை வாங்குற அளவுக்கு சினிமா தகவல்கள்ல அப்டேட்டடா இருப்பார். எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் பத்தி அவ்ளோ விஷயங்கள் தெரியும் அவருக்கு. லேட்டஸ்ட் டிரெண்ட் டெக்கி அயிட்டங்கள்ல நமக்கு ஏதாவது சந்தேகம்னாகூட சரி பண்ற அளவுக்கு மாஸ் அவர். நானும் துரையும் பயங்கரமா செலவு பண்ணுவோம். மாசக் கடைசியில் எனக்கு பர்ஸ் காலியாகிடும். அப்பா எனக்கு ஒரு பர்ஸ் வாங்கிக் கொடுத்தார். என்ன சென்ட்டிமென்ட்டோ தெரியல... அதுல இருந்து அந்த பிரச்னையே வந்ததில்ல!''

- அந்த பர்ஸை ஆசையாக எடுத்துக் காட்டியவர்,

''என்னோட ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் எனக்கு பெரிய சப்போர்ட்டிவ் தூணா நிற்கிறது, துரைதான். அவரை லைஃப் பார்ட்னரா தேர்ந்தெடுத்த என் முடிவு எவ்வளவு அழகானது என்பதை பல சந்தோஷ தருணங்கள் மூலமா உணர வெச்சிட்டே இருக்கார்.''  

''கலைஞர், பாட்டி, ஸ்டாலின், உதயநிதி, கிருத்திகா..?''

''தாத்தா, பாட்டி பார்த்து ரொம்ப நாளாச்சு. பாட்டியை ரொம்பப் பிடிக்கும். ஒரு தடவை எனக்கு சின்ன விபத்து. கூடவே இருந்து அவ்வளவு அக்கறையா கவனிச்சுக்கிட்டாங்க. ஸ்டாலின் சித்தப்பாவை நிகழ்ச்சிகள்ல பார்த்தா பேசுவோம். உதயா அண்ணா, கிருத்திகா அண்ணி ரொம்பப் பிடிக்கும். கிருத்திகா அண்ணிகிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்குவேன். சினிமாவில் சீக்கிரமே அவங்க வேற லெவல்ல இருப்பாங்க. போன வருஷம் 'வீக்எண்ட் சந்தை’க்கு வந்திருந்தாங்க'' எனும் அனுஷாவுக்கு பெயின்ட்டிங், காஸ்ட்யூம் டிசைனிங்கில் விருப்பம். முறைப்படி சங்கீதம் பயின்றிருக்கிறார்.

வீக்எண்ட் சந்தை... அசத்தும் அழகிரி மருமகள்!

''அதான் 'மங்காத்தா’ படத்துல 'இது எங்க பல்லேலக்கா’ பாடினேனே! சான்ஸ் கிடைச்சா தொடர்ந்து பாடுவேன்'' என்கிறார் தேன் குரலில்.

''கணவர் தயாரிப்பாளர் என்பதால் நீங்க இப்போ சினிமா குடும்பமாவும் ஆகிட்டதால இந்தக் கேள்வி. உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ..?''

''அஜித் சார், ரொம்ப கிளாஸ். மரியாதை தெரிந்த மனிதர். பெர்ஃபக்ட் ஜென்டில்மேன் விருதுனா, அது அஜித் சாருக்குதான்!'' என்றவர், சில நொடிகள் பிரேக் விட்டு,

''இதுக்கு மேல எதுவும் கேள்விகள் கேட்டு என்னை மாட்டி விட்டுடாதீங்க... பை!''

- பளிச் புன்னகையுடன் விடை கொடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism