Published:Updated:

வெயிட்டை குறைக்கலாம்... ஸ்ட்ரெஸ்ஸை விரட்டலாம்!

ரிலாக்ஸ்ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து

''நடனத்துடன் இணைந்த ஏரோபிக்ஸ் ஸும்பா (Zumba). நவீன வகை உடற்பயிற்சி. வேகமான இசை மற்றும் மெல்லிசைக்கு ஏற்ற உடல் அசைவுகள் மூலம் ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் ஸும்பா வகுப்புகள், இன்று பல பெண்களாலும் விரும்பப்படுகின்றன. இதன் அடுத்த கட்டம், அக்வா ஸும்பா (Aqua Zumba). அதாவது, தண்ணீரில் ஸும்பா.  

மதுரையில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் 'அக்வா ஜும்பா’ வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு. மதுரை கோச்சடை ஏரியாவில் உள்ள ''டைப்ளோஸ்’ டான்ஸ் அண்ட் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் பயிற்சியாளர் சுபாஷினி, ''உடல் எடையைக் குறைப்பதற்கும், ஸ்ட்ரெஸ் எனப்படும் மனஅழுத்தத்தைத் தவிர்க்கவும் செய்யப்படும் ஸ¨ம்பா பயிற்சியைத் தண்ணீரில் செய்வதே 'அக்வா ஸ¨ம்பா’. இதனை 'பூல் பார்ட்டி’ என்றும் அழைப்பார்கள். 45 நிமிடங்கள் முதல், ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் செய்யப்படும் இந்தப் பயிற்சியை மூன்று வயது முதல் எந்த வயதினரும் மேற்கொள்ளலாம்.

வெயிட்டை குறைக்கலாம்... ஸ்ட்ரெஸ்ஸை விரட்டலாம்!

பயிற்சியாளர்கள் தண்ணீரில் இருக்கும்போது பிளே செய்யப்படும் சர்வதேச இசை வடிவங்களுக்கு, அவர்கள் நடனமாட வேண்டும். பொதுவாக, தரையில் நடன அசைவுகள் மேற்கொள்வதைவிட, தண்ணீரில் கைகளை, கால்களைத் தூக்கி, இழுத்து... இடுப்பையும் தோளையும் சுற்றி என இயக்கும்போது, தசையானது அதிகம் இயங்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை தள்ளிவிட்டு பயிற்சி மேற்கொள்வதால், எலும்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும். அதேசமயம், தரையில் ஸ¨ம்பா செய்யும்போது ஏற்படும் சோர்வு, தண்ணீரில் ஏற்படாது என்பதால் நீண்ட நேரம் இதைச் செய்ய முடியும்!'' என்று சிம்பிளாக விஷயத்தைப் பதிய வைத்தார், சுபாஷினி.

வெயிட்டை குறைக்கலாம்... ஸ்ட்ரெஸ்ஸை விரட்டலாம்!

பயிற்சி எடுக்க வந்திருந்த தனியார் கல்லூரி பேராசிரியை வெண்ணிலா கண்ணன், ''வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்தித்து, இனி இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த ஒரு தருணத்தில்தான் இந்த பயிற்சிக்கு வந்தேன். அன்றிலிருந்தே என் ஸ்ட்ரெஸ் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது. உடலுக்கு மட்டுமல்ல... மனதுக்கும் இது ஆரோக்கியம் தரவல்லது. ஒரு பயிற்சி செய்கிறோம் என்கிற எண்ணமே இல்லாமல், விளையாட்டாகச் செய்ய முடிவது இதன் ஹைலைட்!'' என்று பரிந்துரைக்கிறார்.

தளர்ந்த தசைகளை இறுக்கி, எலும்புகளுக்கு வலு சேர்க்கும் அக்வா ஸும்பா அனுபவம் பெற நீங்க ரெடியா!

ஸும்பாரே ஸும்பாரே ஸும்பக்கு ஸும்பா!

அடுத்த கட்டுரைக்கு