சாலையில் இப்போது நிறைய ஸ்கூட்டர்கள் ஓடுகின்றன. இவற்றில் ஒன்றை வாங்க திட்டமிட்டால் எது ஓட்ட எளிதாக இருக்கும், எது நல்ல மைலேஜ் தரும், எது விலை குறைந்தது, எதில் நிறைய பொருட்களைக் கொண்டு செல்லமுடியும் என ஏகப்பட்ட குழப்பங்கள். இந்தியாவில் பெண்களுக்கான ஸ்கூட்டர்களில் சிறந்த ஸ்கூட்டர்களை இங்கே கொடுத்திருக்கிறோம். இவற்றை எடை, விலை, ஸ்டைல், மைலேஜ் என உங்களுக்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.

டிவிஎஸ் ஜெஸ்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டிவிஎஸ்-ன் லேட்டஸ்ட் டிரெண்டி ஸ்கூட்டி இது. முழுக்க முழுக்க பெண்களை மனதில் வைத்தே டிசைன் செய்யப்பட்டிருக்கும் 'ஜெஸ்ட்’ செம ஸ்டைலிஷ். தினமும் அலட்டாமல் சிட்டி டிராஃபிக்கை சமாளிக்க விரும்பும் இளம்பெண்களுக்கு ஏற்ற சாய்ஸ் ஜெஸ்ட்.
இன்ஜின் : 109.7 சிசி
பவர் : 7.9 bhp

எடை : 98 கிலோ
மைலேஜ் : 48-50 கி.மீ
பெட்ரோல் டேங்க் : 5 லிட்டர்
விலை :

42,300
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)
ப்ளஸ்
• எடை குறைவு என்பதால், வாகனங்களுக்கிடையே பேலன்ஸ் இழக்காமல் வளைத்து திருப்பி ஓட்டலாம்.
• ஆட்டோ சோக் சிஸ்டம் இருப்பதால், ஸ்டார்டிங் பிரச்னைகள் கிடையாது.
• ஹெல்மெட்டை ஸீட்டுக்கு அடியில் வைத்து மூடிவிடலாம்.
• அகலமான இருக்கை.
• ஈஸி சென்டர் ஸ்டாண்டு வசதி இருப்பதால், ரொம்பவே எளிதாக 'ஜெஸ்ட்’டில் சென்டர் ஸ்டாண்டு போடலாம்.
• டிவிஎஸ் சர்வீஸ் சென்டர்கள் தமிழகம் முழுவதும் இருக்கின்றன.
மைனஸ்
• பெட்ரோல் போடுவதற்கு ஸீட்டை திறக்க வேண்யிருப்பது.
• மூடும் வசதி கொண்ட கிளவ்பாக்ஸ் இல்லை.

ஹோண்டா ஆக்டிவா வீ
ஹோண்டா ஆக்டிவாதான் இந்தியாவின் நம்பர் 1 ஸ்கூட்டர். அதன் பெப்பி மாடல்தான் இந்த ஆக்டிவா வீ.
இன்ஜின் : 109.2 சிசி
பவர் : 8 bhp
எடை : 103 கிலோ
மைலேஜ் : 45-50 கி.மீ
பெட்ரோல் டேங்க் : 5.3 லிட்டர்
விலை :

54,776
(ஆன் ரோடு சென்னை)
ப்ளஸ்
• ஹோண்டாவின் தரம் மற்றும் நம்பகத்தன்மை.
• நல்ல இன்ஜின்.
• அகலமான இருக்கைகள்.
மைனஸ்
• ஓட்ட ஜாலியாக இல்லை.
• முன்பக்க சஸ்பென்ஷன் பழைய தொழில்நுட்பம்.
• ஹாண்டில்பார் தாழ்வாக இருப்பது, உயரமான பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கும்.

பியாஜியோ வெஸ்பா LX125
இந்தியாவிலேயே பெண்களுக்கு அழகான ஸ்கூட்டர் என்றால் அது வெஸ்பாதான். கிளாஸிக் இத்தாலியன் டிசைனுடன் இருக்கும் இந்த ஸ்கூட்டரை எந்த பெண் ஓட்டினாலும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், 'காசு, பணம், துட்டு, மணி’ பிரச்னையில்லாதவர்களுக்கே இந்த ஸ்கூட்டர்!
இன்ஜின் : 125 சிசி
பவர் : 9.92 hp
எடை : 114 கிலோ
பெட்ரோல் டேங்க் : 8.5 லிட்டர்
மைலேஜ் : 40-43 கி.மீ
விலை :

78,767
(ஆன் ரோடு சென்னை)
ப்ளஸ்
• டிசைன்... டிசைன்... டிசைன்!
• பொருட்கள் வைக்க முன்னே க்ளவ்பாக்ஸ் இருப்பது.
• சைடு ஸ்டாண்டுக்கு ஆட்டோ ரிடர்ன் வசதி உள்ளது.
மைனஸ்
• பிரேக் லாக் கிளாம்ப் இல்லை.
• ரொம்பவும் வீக்கான முன்பக்க பிரேக்.
• சர்வீஸ் நெட்வொர்க்.

சுஸூகி லெட்ஸ்
சுஸூகி ஆக்ஸஸ், ஸ்விஷ் போன்ற வையும் நல்ல ஸ்கூட்டர் கள்தான், ஆனால், புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் லெட்ஸ் பெண்களுக்கேற்ற ஸ்கூட்ட ராக 'சிக்'கென்று இருக்கிறது.
இன்ஜின் : 112.8 சிசி
பவர் : 8.7 bhp
எடை : 98 கிலோ
மைலேஜ் : 46-50 கி.மீ
பெட்ரோல் டேங்க் : 5.2 லிட்டர்
விலை :

52,762
(ஆன் ரோடு சென்னை)
ப்ளஸ்
• காம்பேக்ட் சைஸ்; 'ஸ்லிம்' வெயிட்.
• ஹாலொஜன் ஹெட்லைட்.
• பிரேக் லாக் கிளாம்ப் கச்சிதமாக இயங்குகிறது.
• குறைவான எடை, நிறைவான பவர். பெர்ஃபாமென்ஸில் கில்லி... ’சுஸ¨கி லெட்ஸ்’.
மைனஸ்
• ஹாண்டில்பார் தாழ்வாக இருப்பது, உயரமான பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கும்.
• பொருட்கள் வைக்க இடவசதி மிகவும் குறைவு.
• சுஸுகியின் சர்வீஸ் குறித்த சந்தேகங்கள்.