Published:Updated:

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேம்பஸ் அ.பார்வதி, படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேம்பஸ் அ.பார்வதி, படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

Published:Updated:

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் ஸ்டார் பெண்களின் ஸ்வீட் போர்ட்ஃபோலியோ இங்கே!

எம்.ஏ பர்ஸ்ட் இயர் படிக்கிற ஜோஸ்பின் வில்லியமோட ஹார்ட், தாட் எல்லாமே அவங்களோட கிடார்!

''சினிமா பாட்டை கிடார்ல பாடுறதில் எனக்கு துளிகூட விருப்பம் கிடையாது. மனசை வருடுற இறை பாடல்களைப் பாடுறதுதான் என் ஸ்பெஷாலிட்டி. எனக்குனு எந்த குருவும் இல்லை. நானே வாசிக்க கத்துக்கிட்டேன். மதுரை, காமராஜ் யுனிவர்சிட்டி நடத்துன பல போட்டிகள்ல, காலேஜ் கல்சுரல்ஸ்லனு கலந்துகிட்டு பிரைஸ் வாங்கியிருக்கேன். ஒரு பிரைவேட் சேனல் நடத்தின 'ஆச்சி சிங் தி சீஸன்’ போட்டியில கலந்துகிட்டு ரன்னர் அப் பரிசை வாங்கினேன். இன்னும் நிறைய தூரம் கடக்கணும்'' என்கிறார் கிடார் கம்பிகளை வருடியபடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

ல்லூரியின் மகளிர் நடனக் குழுவான 'டி போபியா'வோட (D-PHOBIA) லீட் டான்ஸர்ஸ் பி.காம்., இறுதியாண்டு படிக்கும் ஹர்ஷிதா மற்றும் விலங்கியல் இறுதியாண்டு படிக்கும் இரீன். இவங்க குழு பரிசு தட்டாத மேடையே இல்லை. கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்கள் பட்டியல்ல இவங்க பேரும் உண்டு. ''கல்லூரிப் படிப்பை முடிச்சுப் போனாலும், எங்க டான்ஸ் பயணம் தொடரும்!''னு ஃபுட் லூஸ் செய்து காட்டுறாங்க இந்த டபுள் ஸ்டார்ஸ்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

டிப்பது எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி. ஆனாலும், சயின்ஸைவிட ஆர்ட் விஷயங்கள்லதான் விருப்பம் ஜாய்ஸ்லின் பிரவீனாவுக்கு. க்வில்லிங் பேப்பர்ல இவங்க செய்ற ஜிமிக்கிக்கு, ஹாஸ்டல், தோழிகள், உறவுகள்னு எல்லா இடங்கள்லயும் வரவேற்பு. ''இதுக்காக நான் எந்த கிளாஸும் போனதில்லை. நண்பர் ஒருத்தர் செய்றதைப் பார்த்தே சுயமா கத்துக்கிட்டேன். இப்போ டெரகோட்டாவிலும் ஜுவல்லரி செய்யத் தொடங்கிட்டேன். ஃப்ரெண்ட்ஸோட பிறந்த நாளுக்கு என்னோட ஹேண்ட்மேட் பரிசுகளைக் கொடுக்கிறதுதான் என் ஸ்டைல்!''

- உள்ளங்கை விரித்து, தான் படைத்திருக்கும் கிராஃப்ட் அயிட்டங்களைக் காட்டுறாங்க ஜோ.

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''நான் வாயுள்ள பிள்ளை, நிச்சயம் பிழைச்சுக்குவேன்ல..!''

- கண்கள் சிமிட்டுறாங்க, பி.ஏ, வரலாறு முதலாமாண்டு படிக்கும் ஓவியா. ''பேச்சுத் திறமையில் என்னோட பரிசுப் பட்டியல் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிருச்சு. ஒருமுறை கரூர் மாவட்டம் வந்திருந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்கிட்ட, 'இந்தியாவின் தற்போதைய ஊழலை வைத்துப் பார்த்தால், 2020-ல் நீங்க சொல்ற மாதிரி இந்தியா சூப்பர் பவர் நேஷன் ஆக வாய்ப்பிருக்கும்னு நினைக்கிறீங்களா?’னு கேட்டேன்.

கேர்ள்ஸ் புரொஃபைல்!

அதற்கு அவர், 'நீ என்னைக் கேள்வி கேட்கல, கருத்து சொல்லியிருக்கே. 2020 இந்திய நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கமா நீ இருப்பே!’னு வாழ்த்தினார்!'' என்று உற்சாகம் ஆகும் ஓவியா, நம்மாழ்வார் கல்வி திட்டத்தின் மாணவச் செயலாளர்; 2013-ம் ஆண்டில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய மாநில அளவிலான தமிழ் விவாதத்தில் முதல் பரிசை வென்றவர்; கரூர் மாவட்ட 'சிந்தனை மன்றத்தின்’ உறுப்பினர்னு கலக்கிட்டு இருக்காங்க. வாசிப்பிலும் அதிக நேசம் கொண்ட ஓவியா, ''என் வாழ்வின் மிகச் சிறந்த நிமிடங்களா நான் நினைப்பது, எழுத்தாளர் ராஜுமுருகனோடு உரையாடிய தருணம்தான்!''

- விழிகள் விரித்துச் சொல்றாங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism