Published:Updated:

ஒருநாள் ‘தொழிலதிபர்’!

ஜாலி சேல்ஸ்அ.பார்வதி, ந.ஆஷிகா, படங்கள்: இரா.யோகேஷ்வரன் 

ஒருநாள் ‘தொழிலதிபர்’!

ஜாலி சேல்ஸ்அ.பார்வதி, ந.ஆஷிகா, படங்கள்: இரா.யோகேஷ்வரன் 

Published:Updated:

‘ஒரு நாள் முதல்வர்’ மாதிரி, இந்த காலேஜ் பெண்களுக்கு ஏதாச்சும் 'ரோல் பிளே’ கொடுத்தா என்ன..?!’ என்ற நம்மோட வித்தியாசமான ஐடியாவை செயலாக்க முன்வந்தாங்க சஹானா, அவந்திகா மற்றும் சாரா.

ஒருநாள் ‘தொழிலதிபர்’!

''வித்தியாச சிந்தனையா, வில்லங்க சிந்தனையானு போகப் போகதான் தெரியும்!''னு செல்லமா முறைச்ச  சஹானா, ''சரி சொல்லுங்க... என்ன ரோல் எடுக்கணும்?''னு விபரீதம் தெரியாம பொறுப்பை நம்மகிட்ட விட, ஒரு கீரைக் கூடையை அவங்க முன்ன வெச்சோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீங்க, இன்னிக்கு 'ஒரு நாள் கீரைக்காரம்மா’. எங்கே... கீரை விற்கக் கிளம்புங்க பார்க்கலாம்''னு சொன்னவொடன, ஷாக் ஆகிட்டாங்க சஹானா.

''ஆனா, இவ்ளோ பெர்ர்ர்ரிய கூடையை எப்படித் தூக்குறது? ஒரு சைக்கிள் கொடுக்கிறீங்களா?''னு கேட்ட அவங்க கோரிக்கை நிராகரிக்கப்பட, ஒருவழியா அந்த வித்தையைக் கத்துக்கிட்டு கூடையை தலைமேல தூக்கிக்கிட்டு சென்னை, கோடம்பாக்கம் ஏரியாவில் நடைபோட்டாங்க.

''ஹலோ, கீரையை விக்கணுமே... அதை எப்போ செய்றதா உத்தேசம்?''னு நாம ஞாபகப்படுத்த, ''ம்ம்மா... கீரகீர... அரக்கீர, முருங்கீர, மிளகுதக்காளிகீர''னு அவங்க புரொஃபஷனலா போட்ட சத்தத்தில் அசந்தே போயிட்டோம்.

''எங்க வீட்டுப்பக்கம் கீரை விக்கிற பாட்டி இப்படித்தான் விப்பாங்க''னு சொல்லிக்கிட்டே நடக்க, சில பெண்கள் கேட்டைத் திறந்து வெளியே வந்தாங்க. ஆனா, 'ஆளுக்கும், கூடைக்கும் சம்பந்தமில்லையே!’னு சஹானாவை எல்லாரும் சந்தேகமா பார்த்தபடியே திறந்த கதவை மூடப் போக, ஓடிப் போய் மார்க்கெட்டிங் பண்ணினாங்க சஹானா.

''ஆன்ட்டி, ஒரு புராஜெக்ட்டுக்காக... ப்ளீஸ்''னு சொல்லிக்கிட்டே கீரைக் கட்டுகளை எடுத்துக் காட்ட, கொஞ்சம் போணி ஆச்சு. அப்படி இப்படினு மூணு கட்டு விக்கிறதுக்குள்ள மூச்சு தள்ள, ''ஆட்டயக் கலைச்சுக்கலாம் பாஸ்!''னு சரண்டர் ஆகிட்டாங்க சஹானா.

''ஒரு மெசேஜ் சொல்றேன் கேட்டுக்கோங்க. சுமையைத் தூக்கிக்கிட்டு வெயில்ல அலஞ்சு திரிஞ்சு வீடு தேடி வந்து எந்தப் பொருள் விக்கிறவங்ககிட்டயும் தயவு செஞ்சு பேரம் பேசாதீங்க. ஒரு ரெண்டு ரூபாயில அவங்களுக்கு லாபம் வந்து கொட்டப் போறதும் இல்ல, அந்த ரெண்டு ரூபாயில நம்ம பணம் குறையப் போறதும் இல்ல!''

கை தட்டுங்கப்பா!

சென்னை, வடபழனி முருகன் கோயில்ல 15 நிமிஷம் பூக்கார அம்மாவா... ஸாரி... பூக்கார பாப்பாவா மாறினாங்க அவந்திகா. கோயில் வாசல்ல இருந்த ஒரு பூக்கார அக்காகிட்ட, ''இன்னிக்கு உங்க பூவையெல்லாம் வித்துத் தர்றேன்க்கா!''னு அக்ரிமென்ட் போட, ''அதெல்லாம் வேணாம்ப்பா...''னு நழுவப் பார்த்தாங்க அக்கா. அவந்திகா விடாம அவங்கள சமாதானப்படுத்தி, ''எந்தெந்தப் பூ என்னென்ன விலைனு சொல்லிடுங்க...''னு எழுதிக்கிட்டு, அந்த பிட்-ஐ பூக்கூடை அடியில் வெச்சுக்கிட்டாங்க.

ஒருநாள் ‘தொழிலதிபர்’!

ஒரு அம்மா வந்து, ''முல்லப்பூ ரெண்டு மொழம் கொடுப்பா''னு கேட்க, அவந்திகா முகத்துல அசடு. என்னனு பார்த்தா, அம்மணிக்கு எந்தப் பூ முல்லைப் பூனு தெரியல. ஆனாலும் சமாளிச்சு, ''இந்தப் பூவாக்கா..?''னு ஒரு பூவை கை காட்ட, ''இல்லப்பா... முல்லப்பூ...''னு அந்தம்மா முல்லப்பூவை கை காட்ட, முதல் கஸ்டமரை வெற்றிகரமா சமாளிச்சாச்சு. அடுத்தடுத்து, 'கதம்பம் அஞ்சு மொழம்’, 'மல்லிகைப்பூ ரெண்டு மொழம்’னு வியாபாரம் சூடு பிடிக்க, 15 நிமிஷம் பூ வித்து முடிக்கிறதுக்குள்ள அவந்திகா ஆகியிருந்தாங்க... நார்!

''இதுவரைக்கும் நான் பூ வாங்கினதுகூட இல்ல. ஆனா, இன்னிக்கு பூ வித்த அனுபவம்... ஹம்மா!''னு சிரிச்சாங்க அவந்திகா.

''இளநீர் விற்கட்டுமா..?''னு சாரா தானா முன்வந்து கேட்டப்போ, கொஞ்சம் நம்ப முடியாமதான் பார்த்தோம். ஆனா தாம்பரம், முடிச்சூர் ஹை ரோட்டில், பட்டப்பகல் வெட்ட வெயில்ல சாரா ஓடிஓடி இளநீர் வித்தது, சூப்பர்!

ஒருநாள் ‘தொழிலதிபர்’!

''இந்த அரிவாளைத் தூக்கி வெட்டுறதுக்கே தனியா சாப்பிடணும் போல. ஆனா கையில, காலுல வெட்டுக் காயம் படாம நான் இளநீர் வெட்டக் கத்துக்கிட்டதே பெரிய விஷயம். பொதுவா இளநீர் வெட்ட சில ஃபார்முலாக்கள் இருக்கு. அப்புறம் இளநீர்ல சாதா இளநீர், செவ்விளநீர், தண்ணீர் அதிகம் உள்ள இளநீர், வழுக்கை அதிகமுள்ள இளநீர்னு நிறைய வகைகள் இருக்கு. எந்தெந்த இளநீர் என்னென்ன விலைனு மனப்பாடமா ஆகிடுச்சு. ஒரு 40 ரூபாய் வெட்டுங்க... சூப்பரா ஒரு இளநீர் வெட்டறேன்!''னு கேட்ட சாராவோட ரெண்டு மணி நேர இளநீர் வியாபாரம்... 250 ரூபாய்!

ஏதோ புள்ளைங்களுக்கு ஒரு சைடு தொழில் சொல்லிக் கொடுத்த புண்ணியம் நமக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism