Published:Updated:

ஏர்ஹோஸ்டஸ்..!

கல்விஅ.பார்வதி, படம்: தி.குமரகுருபரன்

ஏர்ஹோஸ்டஸ்..!

கல்விஅ.பார்வதி, படம்: தி.குமரகுருபரன்

Published:Updated:

'ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், இன்ஜினீயரிங், மெடிக்கல் ஸ்டூடென்ட்ஸை எல்லாம் மீட் பண்ணிட்டே இருக்கீங்க... எங்க ஏரியா பக்கம் வரவே மாட்டேங்கிறீங்களே!''னு உரிமையோட இன்விடேஷன் வெச்சாங்க, சென்னை, யுனிவர்சல் ஏர்ஹோஸ்டஸ் அகாடமி மாணவிகள்.

''இதோ வந்துட்டோம்ல!''னு உடனே அட்டெண்டன்ஸ் போட்டு, ''ஊருல ஆயிரம் படிப்பு இருக்க, இதைத் தேர்ந்தெடுத்ததுக்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்குமே... கொஞ்சம் எடுத்துவிடறது..?''னு உலகத்துக்கே பொதுவான கேள்வியை எடுத்துவிட்டோம்.

''நான்தான் முதல்ல''னு முந்திக்கிட்ட நாகர்கோவிலைச் சேர்ந்த சுகன்யா, ''பொறியியல், மருத்துவம் மட்டும்தான் படிப்பா என்ன? எல்லாரும் படிக்கிறதையே நாமளும் படிச்சுட்டு, எல்லாரும் பார்க்கிற வேலையவே நாமளும் பார்க்கக் கூடாது அப்படீங்கிறதுக்காகவே, பிரத்யேகமான இந்த ஏர்ஹோஸ்டஸ் படிப்பை தேர்ந்தெடுத்தேன். காதைக் கொடுங்க... இந்த ஏர்ஹோஸ்டஸ் காஸ்ட்யூம் மேல எனக்கு காதலோ காதல்! இந்த கோர்ஸை தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு முக்கியக் காரணம்''னு சொன்னவங்க,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சொந்தக்காரங்க எல்லாரும், 'இந்தப் படிப்பெல்லாம் எதுக்கு?’னு கேட்டாலும், 'நீ ஆசைப்பட்டதைப் படிம்மா!’னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வெச்ச எங்கப்பாவுக்கு நன்றி!''னு சென்ட்டிமென்ட் டச் கொடுத்தாங்க.

ஏர்ஹோஸ்டஸ்..!

''எண்ட நாட்டிலே ஏர்ஹோஸ்டஸ் படிக்க விடமாட்டாங்க''னு மலையாளம் கலந்த தமிழில் ஆரம்பிச்ச கேரளாவைச் சேர்ந்த சேச்சி ஸ்வேதா, 'இது ரொம்ப ரிஸ்க்கான துறை... குட்ட பாவாட, நுனிநாக்கு இங்கிலீஷ் இதெல்லாம் உனக்கு வராது’னு சொல்லி, கோழிக்கோடுல இருக்கிற இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்க்கறதுக்கு ஃபோர்ம்மெல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்க. பின்னே இந்த படிப்போட நல்லதெல்லாம் எடுத்துச் சொல்லி, இதுதான் என் பேஷன்னு பிடிவாதம் பிடிச்ச பிறகுதான், சென்னைக்கு அனுப்பினாங்க. ஏர் இந்தியா, ஃபிளை எமிரேட்ஸ் மாதிரியான பெரிய விமான நிறுவனத்தில் ஏர்ஹோஸ்டஸ் ஆகணும்ங்கிறதுதான் என் லட்சியம்!''னு நம்பிக்கையோட சொன்னாங்க ஸ்வேதா.

'நான் ராமேஸ்வரத்துப் பொண்ணு. எங்க ஊர்லயே இந்தப் படிப்பு படிக்கிற முதல் பொண்ணு நான்தான்!''னு பெருமையோட ஆரம்பிச்ச பென்குயின் (அட பேரே செம அசத்தல்), 'பொம்பளப் புள்ளைய, படிக்கறதுக்காக சென்னைக்கு அனுப்பப் போறியா’, 'ஏர்ஹோஸ்டஸ் படிப்பா, யோசிச்சு முடிவெடுனு’னு பலரும் பொடி போட்டாலும், நான் இஷ்டப்பட்ட படிப்பை படிக்க வைக்கிறதுல உறுதியா இருந்தார் எங்கப்பா. ஒரு நல்ல விமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, எங்கப்பாவை மட்டுமில்ல, ஊரையே அதில் கூட்டிட்டுப் போகணும்!''னு ஆசை சொன்னாங்க. 'இந்தப் படிப்புல கொடுக்கிற பயிற்சி எல்லாம், இந்த வேலைக்கு மட்டுமில்ல, நம்ம வாழ்க்கைக்கும் ரொம்ப பயன்படக்கூடியது. பர்சனாலிட்டி டெவலப்மென்ட், லாங்வேஜ் டெவலப்மென்ட், ஒரு சூழலை சமாளிக்கிற விதம்னு இங்க நான் பட்டை தீட்டப்படறதால தன்னம்பிக்கை கூடியிருக்கு!''னு சந்தோஷமா சொன்ன விவேதாவுக்கு சொந்த ஊர் காரைக்கால்.

''நான்தான் கடைசியா?''னு செல்லக் கோபம் காட்டின திருநெல்வேலியைச் சேர்ந்த மெர்சியா, ''எனக்கு சர்வீஸ் (சேவை) பண்றது ரொம்பப் புடிக்கும். அதனாலேயே இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். சர்வீஸ் பண்ண, நர்ஸிங்கூட படிச்சுருக்கலாமேனு நீங்க கேட்கலாம். ஆனா, எனக்கு மேக்கப் பண்ணிக்கவும் ரொம்பப் பிடிக்குமே! அதுமட்டுமில்ல, சலிக்க சலிக்க ஊர் சுத்தலாமே!''னு கண்ணடிச்சாங்க.

''ஹே... மேக்கப் பத்தி நாங்க சொன்னதெல்லாம் சும்மா ஜாலிக்குப்பா. பொறுமை, சமயோசிதம், சம்பளம்னு உண்மையில இந்த புரொஃபஷன் எல்லா வகையிலயும் நம்மை பல படிகள் உயர்த்தும்''னு கோரஸா சொன்னாங்க நாளைய ஏர்ஹோஸ்டஸ்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism