Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ரீடர்ஸ்

குட்டீஸ் குறும்பு!

ரீடர்ஸ்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'படார்’ கேள்வி!

அன்று என் கணவரின் நண்பர், எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு சாக்லேட் டப்பா வாங்கி வந்திருந்த அவர், அதை என் பேரன் அபிநவ் கையில் தந்தார். என்னிடம் சாக்லேட்டை காட்டியவனிடம், ''அவர் இருக்கும்போதே பிரித்துச் சாப்பிடுவது அநாகரிகம். அவர் போனபின் தருகிறேன்'' என்றேன்.

குட்டீஸ் குறும்பு!

'சரி’ என்று தலையாட்டியவன் நேராக அவரிடம் போய், ''நீங்க எப்போ கிளம்புவீங்க?'' என்று கேட்டதும், எங்களுக்கு ரொம்ப 'ஷாக்’காகி விட்டது. வந்தவரிடம் நடந்த 'விஷயத்தை’ கூற, விழுந்து விழுந்து சிரித்துத் தீர்த்தார். ஆனால், அப்போது எனக்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது. அதன்பிறகு, அந்த சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் சிரிப்பு பொங்குகிறது எனக்கு.

குட்டீஸ் குறும்பு!

- சுகந்தாராம், சென்னை-59

மகாபாரத 'தளபதி’!

அன்று தொலைக்காட்சியில் 'மகாபாரதம்’ தொடர் பார்த்துக்கொண்டிருந்தோம். கர்ணன் - குந்திதேவியின் சந்திப்பு. அப்போது என்னுடைய தம்பியின் சுட்டிப் பெண்ணிடம், 'குந்தியின் மகன்தான் கர்ணன். சிறுவயதில் குழந்தை பிறந்துவிட்டதால், குழந்தையை ஒரு புடவையில்

குட்டீஸ் குறும்பு!

சுற்றி, பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள்’ என்று நான் சொன்னதும், ''போங்க அத்தை, இது 'தளபதி’ சினிமாவில் ரஜினி அங்கிளின் கதை!'' என்று 'டக்’கென்று சொல்லி எங்களை பிரமிக்கவைத்து, சிரிக்க வைத்துவிட்டாள்.

- தாரா மணிவண்ணன், கோவை

'உஷார்’ சுட்டி!

குடும்ப நண்பர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வரும்போது என் குழந்தைக்கு 'பிஸ்கட்’ பாக்கெட் வாங்கி வந்தார். மூன்றாவது படிக்கும் என் குழந்தை, பிஸ்கட் பாக்கெட்டை ஒருமுறை நோட்டமிட்டு, ''இதோடு ஃப்ரீயா குடுத்த 'பவுல்’ எங்கே மாமா... அதை தரலியே!'' என்று கேட்டதும், ''மறந்தே போயிட்டேன் கண்ணா!'' என்று கூறி, இலவசமாகக் கிடைத்த பவுலையும் கொடுத்தவர், ''பரவாயில்லையே! குழந்தை உஷார்தான்!'' என்று சிரித்தபடியே பாராட்டினார்.

- சம்பத் குமாரி, திருச்சி