அவள் விகடன் போலவே, 17 வயதிலிருக்கும் சர்வதேச ஸ்டார் டீன் பெண்கள் சிலரின் புரொஃபைல்!
பிரிட்டனி வென்ஞர்
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக மாணவி. மூளையைப் பயன்படுத்தி படிக்க வேண்டிய வயதில், புதிதாக ஒரு மூளையையே உருவாக்கிவிட்டார். ஆம்... திசுக்களின் மாதிரிகளை வைத்து புற்றுநோய்க்கான கூறுகளை அறியும் செயற்கை மூளையை உருவாக்கியுள்ளார் வென்ஞர். ஜீன்களின் வரிசையையும் தகவலையும் பிரித்தறியும் திறன் கொண்டது இந்த செயற்கை மூளை. இவருடைய ஆராய்ச்சிக்காக 'டெட் எக்ஸ் அட்லாண்டா’வில் இவருக்கு வழங்கப்பட்டது 50 ஆயிரம் டாலர் ஸ்காலர்ஷிப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செயற்கை இதயம், நுரையீரல்... உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம்!

பெக்கி ஜி
முழுப்பெயர் ரெபெக்கா மரியா கோமெஸ். இதை எப்படி பெக்கி ஜி எனச் சுருங்க முடியும் என்று கேட்கக் கூடாது. இவர் பாடல் புனைவார், அதை மிக ஸ்டைலாகப் பாடுவார், பாடிக்கொண்டே ஆடவும் செய்வார். ராப் சிங்கர். அமெரிக்காவை மெல்ல உசுப்ப ஆரம்பித்திருக்கிறார் இந்த ஸ்வீட் செவன்டீன் லாஸ் ஏஞ்சலஸ் ராட்சஸி. இந்த ஆண்டு வெளியான இவருடைய 'ஷவர்’ ஆல்பம் இவரை பாப் உலகில் பரபரப்பாக்கியிருக்கிறது.
'பாப்’பரசி!
டெய்லர் ஃபெர்ன்ஸ்
பிறந்தது அமெரிக்க மண். ஆனால், மண்ணை மிதிக்க நேரம் இல்லை பெண்ணுக்கு. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்காத குறை. நினைவு தெரிந்த வயதிலிருந்தே கார் ரேஸ்தான் சாப்பாடே! எட்டு வயதானபோது, ஜூனியர் நோவிஸ் குவார்ட்டர் மிட்ஜெட் போட்டியில் வென்றதில் ஆரம்பித்தது இவருடைய முதல் சாதனை. ஒவ்வொரு வயதிலும் அந்த வயதில் செய்யப்பட்ட முந்தைய சாதனைகளை முறியடிப்பதுதான் இவருடைய பொழுதுபோக்கு! நேஷனல் மிட்ஜெட் - யு.எஸ்.ஏ.சி. சீரிஸ் எனும் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றிருப்பது சாதனை!
கியர்... சியர்!

சிமர் மல்ஹோத்ரா
நம் இந்தியப் பட்டாம்பூச்சி. புதுடெல்லியில் பிறந்து வளர்ந்தவர். 'தெர் இஸ் அ டைட்’ (There is a tide) என்பது இவருடைய முதல் நாவல். புவியை நேசிக்கும் ஒரு பொலிடிக்கல் கதை இது. இவர், ஒரு சமூக சேவை நிறுவனமும் நடத்துகிறார். டெல்லியில் சம்பிரதாயமான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்கிறாள். அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்கள் அவளை அரசியல் உலகுக்குத் தள்ளுகிறது... இதுதான் சிமர் மல்ஹோத்ராவை புகழ்பெறச் செய்திருக்கும் கதையின் ஒன்லைன்.
புக்கர், நோபல் எல்லாம் இனிதான்!