Published:Updated:

ஊருவிட்டு ஊருவந்து..!

அவுட்டோர்பொன்.விமலா

ஊருவிட்டு ஊருவந்து..!

அவுட்டோர்பொன்.விமலா

Published:Updated:

ணவரின் வேலை, தன்னுடைய வேலை, குழந்தைகளின் படிப்பு இப்படி பற்பல காரணங்களுக்காக வேற்று மொழி ஊர்களில் தங்கும் நம் தமிழ்ப்பெண்கள்... விசேஷங்களுக்காக ஊருக்கு வரும்போது ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று சரளமாகப் பேசி, தன் வீட்டினரையும், பக்கத்து வீட்டினரையும் வேடிக்கை பார்க்க வைப்பார்கள். இப்படி வெளிமாநிலங்களில், மொழி தெரியாத ஊரில் வாக்கப்பட்டு சென்ற நம் பெண்கள், அந்தப் புது மொழியைக் கற்றுக்கொண்ட தங்களின் அனுபவங்கள் பற்றி பேசுகிறார்கள் இங்கு!

கவிதா

''கல்யாணத்துக்கு முன்ன, மலையாள சினிமா, பெங்களூரு ஐ.டி கம்பெனிகள், ஹிந்தி ஆக்டர்கள்னு மற்ற மாநிலங்களைப் பத்தி ஏதேதோ பேசுவோம். ஆனா, எல்லாம் பேச்சோட சரி. இப்படிப்பட்ட சூழல்ல, கொல்கத்தாவுக்கு கல்யாணமாகி வருவேன்னு எதிர்பார்க்கவே இல்ல. 3 வருஷத்துக்கு முன்ன கணவரின் வேலை காரணமா, பாரக்பூர்ல செட்டில் ஆனோம். ஆரம்பத்துல பால்காரர்ல இருந்து காய்கறிக்காரம்மா வரைக்கும் எல்லார்கிட்டயும் சைகைதான். பிறகு, வீட்டில் வேலை பார்க்கிறவங்ககிட்ட, 'நான் திணறினாலும் பரவாயில்ல, எங்கிட்ட பெங்காலியிலதான் பேசணும்!’னு கண்டிப்பா சொல்லிட்டேன். நான் பெங்காலி கத்துக்க ஆரம்பிச்சது அவங்ககிட்ட இருந்துதான். மூணு வருஷத்துல கத்துக்கிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊருவிட்டு ஊருவந்து..!

கணவர், டெபுடி கமிஷனர் ஆஃப் போலீஸ். டிடெக்டிவ் டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கிறார். ஒருமுறை மாவோயிஸ்ட்கள் இருக்கிற காட்டுக்குப் போகவேண்டிய சூழ்நிலை. கண்ணிவெடி தாக்குதல்கள் நிறைஞ்ச இடம் அது. கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு அவரோட செல்போன், தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்துச்சு. தவியா தவிச்சாலும், அதை வெளிக்காட்டிக்காம தைரியமா இருந்தேன். அவர் போன ஜீப், கடந்து போன 2 செகண்ட்ல ஒரு வெடிகுண்டு விபத்து நிகழ்ந்ததா டிபார்ட்மென்ட்ல சொன்னாங்க. திரும்பி வந்ததும் அவரை சேர்த்து அணைச்சுக்கிட்டேன். ஆனா, அடுத்த முறையும் அவரோட கடமையை செய்ய தைரியமா காட்டுக்கு அனுப்பினேன். பெண்கள் வெளியூருக்குப் போனா அங்க உள்ள சாப்பாடு, கலாசாரம் கத்துகிட்டா மட்டும் போதாது... தனியா இருக்கிற சூழ்நிலைகள் நிறைய ஏற்படும். அதையெல்லாம் தைரியமா எதிர்கொள்ளணும். அதுக்கு, அந்த ஊரோட மொழியை கான்ஃபிடன்ட்டா பேச வேண்டியது அவசியம்! இதுக்கு நானே உதாரணம்.''

ஊருவிட்டு ஊருவந்து..!

சாரா ஜேக்கப்

''கல்யாணத்துக்கு அப்புறம் கணவரோட வேலை காரணமா புனேலயே செட்டில் ஆயிட்டோம். இங்க ஹிந்தி, மராத்தினு ரெண்டு மொழிகள் பேசுவாங்க. ஹிந்தி தெரிஞ்சாலே சமாளிச்சுடலாம். அதேநேரத்துல இங்க இருக்கிற பன்மொழி பேசுற மக்களோட பழகப் பழக, ஈஸியா மராத்தியும் கத்துக்கலாம். மொழி தெரியாத சூழ்நிலையை சமாளிக்க, முதல்ல ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக்கணும். ஆரம்பத்தில் அவங்க நமக்கு ஒத்தாசையா இருக்கிறதோட, மொழி கத்துக்கவும் உதவியா இருப்பாங்க. எங்கேயாவது வெளிய போகணும்னா, டாக்ஸி பயணம் புனேவில் பாதுகாப்பானது. என் கணவர் எப்பவுமே வேலையில் பிஸி. ஒரு தடவை குடியிருக்கிற வீட்டை மாத்திட்டு வேற வீட்டுக்குப் போற சூழ்நிலை. அந்த சமயம் அவர் பிஸியா இருக்க, தனி ஆளா தெரியாத ஊர்ல எப்படி சமாளிக்கிறதுனு பயந்தேன். 'நீ இந்த ஊருக்குப் புதுசுனு காட்டிக்காத... ஹிந்தியோ, மராத்தியோ... தயக்கமில்லாம பேசு’னு எனக்கு நானே சொல்லிட்டு, வேலைகளில் இறங்கிட்டேன். தனியாளா அந்த வேலையை முடிச்சப்போ, 'குட் சாரா!’னு சொல்லிக்கிட்டேன். ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்க்கிறதால, அந்த அலுவல் சூழலும் இந்தப் புது மொழியை நான் சீக்கிரமா கத்துக்க காரணமா அமைஞ்சது.''

ஊருவிட்டு ஊருவந்து..!

சாருமதி

''நான் கோயம்புத்தூர் பொண்ணு. கல்யாணத்துக்கு அப்புறம் சில வருஷங்கள் புனேவில் இருந்தப்போ, ஹிந்தி கத்துக்கிட்டேன். பிறகு, கணவரோட வேலைக்காக பெங்களூரு வந்தாச்சு. ஆரம்பத்துல, '30 நாளில் கன்னடம் கற்றுக்கொள்வது எப்படி?’ என்ற புக் வாங்கினேன். ஆனா, அதில் இருந்த கன்னடமும், பேச்சு வழக்கு கன்னடமும் நிறைய மாறுபட்டுச்சு. கன்னடம் பேச ஈஸியான வழி, கன்னடம் பேசுறவங்களோட பேசிட்டே இருக்கிறதுதான்ங்கிற ரூட் புரிஞ்சுது. இப்படிப் பேசிப்பேசியே கன்னடம் கத்துக்கிட்டேன். 'நிம் நெசரு ஏனு? (உங்கள் பெயர் என்ன), 'ஊட்டா ஆயித்தா? (சாப்பிட்டீர்களா)’, 'சென்னாகிதீரா?' (நல்லாயிருக்கீங்களா)னு சின்னச் சின்ன வார்த்தைகளா பேச ஆரம்பிச்சப்போ, சந்தோஷமா இருந்துச்சு. இந்த அஞ்சு வருஷத்துல சரளமா கன்னடம் பேச மட்டும் இல்ல, கன்னடப் பாடல்களை பாடுற அளவுக்கு வந்தாச்சு. கன்னடம், மலையாளம், தமிழ்னு எந்த மொழியா இருந்தாலும், அந்த மொழிக்கும், கலாசாரத்துக்கும் தகுந்த மாதிரி ஒரு தீம் உருவாக்கி, 'வாய்ஸ் வைரஸ்’ங்கிற பேர்ல யூடியூப்ல பாடல்களை அப்லோட் பண்ணிட்டு இருக்கேன்னா பாருங்களேன்! தவிர, 'கூல் பீன்ஸ்’ங்கிற பேர்ல ஈவன்ட் ஆர்கனைசேஷன் நடத்திட்டு வர்றேன். சூப்பர்ல!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism