Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

நெட் பிட்ஸ் ஷாலினி நியூட்டன்

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

நெட் பிட்ஸ் ஷாலினி நியூட்டன்

Published:Updated:
ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

டொரன்டோவில் 'காக்கா முட்டை’!

வெற்றிமாறனின் 'கிராஸ்ரூட்’ நிறுவனமும், தனுஷின் 'ஒண்டர்பார்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம், 'காக்கா முட்டை’. வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கிஉள்ளார். வடசென்னை சேரிவாழ் சிறுவர்கள், தங்கள் பகுதியில் புதிதாக திறக்கப்படும் பீட்ஸா கடையிலிருந்து, பீட்ஸா வாங்கிச் சாப்பிட ஆசைப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படம், அதற்கு முன்பே டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுவிட்டது. ஆஸ்கர் புகழ் 'ஸ்லம்டாக் மில்லியனர்’ அளவுக்கு படத்தை ஒப்பிட்டதோடு, அந்தப் படத்தைவிட 'காக்கா முட்டை’ பொழுதுபோக்காக இருப்பதாகவும் பாராட்டியுள்ளனர் படத்தைப் பார்த்த ஹாலிவுட் பத்திரிகையாளர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'காக்கா முட்டை’ அடிக்குமா விருது வேட்டை?!

பட்டையக் கிளப்புறாங்க பசங்க!

'பசங்க’ படத்தில் நடித்த சிறுவர்கள், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில், முக்கியப் பாத்திரங்களில் நடித்த 'கோலி சோடா’, சென்னையின் பிரபல கோயம்பேடு மார்க்கெட்டில் வசிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியது.

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

இந்த வருடத்தில் வெளியான பெரிய பட்ஜெட் படங்களைவிட அதிக வசூலைப் பெற்ற இப்படம், தற்போது தென்கொரியா நாட்டின்,  புசான் நகரில் 19-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இவ்விழாவுக்கு 'கோலிசோடா’ படம் செல்ல உறுதுணையாக இருந்த நடிகர் விக்ரமுக்கு நன்றி கூறுகிறார் விஜய் மில்டன்.

பசங்க பட்டையக் கிளப்புறாங்க டோய்!

மீண்டும் வருகிறார் ஆக்ஷன் குயின்!

தமிழில் அறிமுகமானாலும், தெலுங்கு தேசத்தில் கால் ஊன்றி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர், விஜயசாந்தி. தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு, 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ என்கிற பெயரில் வெளியான இவருடைய படம், இங்கேயும் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைத் தந்தது. அன்றைய நாட்களில் நம்மூர் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கெல்லாம் சவால்விட்டு, 100 நாட்களைக் கடந்து ஓடியது. இதன் மூலமாகத் தெலுங்குப் படங்களுக்கு தமிழிலும் புது மவுசு உருவானது. ஒரு கட்டத்தில் ஆந்திர அரசியலில் நுழைந்த பின் சினிமாவை ஒதுக்கிவைத்தார். தனி தெலங்கானாவுக்காக குரல் தந்தவர், தெலங்கானா அமைந்ததும் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். 1997-ல் விஜயசாந்தியின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றபடம், 'ஓசே ராமு லம்மா’. 'விஜயசாந்தியால்தான் இந்தப் படத்துக்கு வெற்றி கிடைத்தது. எனவே அதன் இரண்டாம் பாகத்திலும் அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது’ என்று அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டார், இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கும் தாசரி நாராயணராவ். சிரஞ்சீவியின் போட்டியாளராக சினிமாவிலும், அரசியலிலும் இருந்தவர் விஜயசாந்தி. தற்போது சிரஞ்சீவி தன்னுடைய 150-வது படத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், விஜயசாந்தியும் சினிமாவுக்கு வருகிறார்.

குயின் ரிட்டர்ன்ஸ்!

ஒரே நாளில் பத்து லட்சம்!

தமிழ்நாட்டின் தற்போதைய ஹாட் நியூஸ், ஷங்கர் இயக்க, விக்ரம் நடிக்கும் 'ஐ’ படம்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அஜித்தின் 'பில்லா 2’ பட டீஸர்தான் முதன்முதலாக ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது. பின்னர் விஜய் நடித்த 'தலைவா’, ரஜினியின் 'கோச்சடையான்’ என அந்த சாதனை முறியடிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. தற்போது இந்தப் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, 12 மணி நேரத்திலேயே 'ஐ’ படத்தின் டீஸர் லட்சங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 'கோச்சடையான்’ டீஸரை இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் 'யூடியூப்’பில் பார்த்துள்ளனர். அதை முறியடிக்கும் வேகத்தோடு முன்னேறிக்கொண்டிருக்கிறது 'ஐ’. கூகுள் தேடுதல் தளத்திலும் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாகியுள்ளது 'ஐ’. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்துகொண்டது, படத்தின் எதிர்பார்ப்புகளை மேலும் ஏற்றிவைத்திருக்கிறது!

'ஹை’ சொல்ல வைத்த 'ஐ!’

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

இந்தியனின் அடையாளம்!

சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்லும் ஒரு மனிதன், அந்நாட்டின் அடையாளத்துடன் தன்னை இணைத்து வாழ எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்பதை வெளிச்சம்போடுகிறது 'மை டியர் அமெரிக்கன்ஸ்’ எனும் குறும்படம். ஆறு நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை இயக்கிய அர்பிதா குமார், கலிஃபோர்னியாவில் வாழும் இந்தியர். பத்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறியபோது தனக்கிருந்த மனநிலையையும், எதிர்கொண்ட அனுபவங்களையும் படத்தில் பிரதிபலித்திருப்பதாகச் சொல்கிறார். இந்தியர்களின் மனஉணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் இந்தக் குறும்படம் பல விருதுகளை வென்றிருக்கிறது. சான்ஃபிரான்சிஸ்கோ வில் நடைபெற்ற பெண்களுக்கான 2014-ம் ஆண்டுக் கான சர்வதேசத் திரைப்பட விழாவில் அர்பிதா குமார் கௌரவிக்கப்பட்டுள்ளார். இன்னும் நிறைய விருது களும், அங்கீகாரங்களும் தொடர்ந்தபடியே இருக் கின்றன.

சபாஷ் அர்பிதா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism