Published:Updated:

இசை, இங்கே உங்கள் சாய்ஸ்!

பிடிச்சதைக் கத்துக்கலாம்... பிரேமா நாராயணன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர் மியூசிக்

இசை, இங்கே உங்கள் சாய்ஸ்!

பிடிச்சதைக் கத்துக்கலாம்... பிரேமா நாராயணன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர் மியூசிக்

Published:Updated:

ர்னாடக சங்கீத அனுபவத்தில் 75 ஆண்டுகளை நிறைவுசெய்து பவளவிழா கண்ட மகாகலைஞர், 'டி.வி.ஜி' என்று அழைக்கப்படும் டி.வி.கோபாலகிருஷ்ணன். பத்மபூஷண் போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றவர். 'ராஜபார்வை’ படத்தில் இடம்பெற்ற 'அந்தி மழை பொழிகிறது’, 'டிக் டிக் டிக்’ படத்தில் இடம்பெற்ற 'இது ஒரு நிலாக்காலம்' பாடல்களின் இடையே வரும் இவரது ஹம்மிங், அந்தக் காலத்தில் ஏக பிரபலம். டி.வி.ஜி-யின் வளர்ப்பு மகள், இசைக்கலைஞர் தேவி நேத்தியார், 'ஒத்த ரூபா தாரேன்’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் திரை உலகிலும் பிரபலமானவர். டி.வி.ஜி. நடத்திய இசைப்பள்ளி 'அய்மா’வின் முழுப் பொறுப்பையும் தற்போது ஏற்றிருப்பவர்.

சென்னை, பெருங்குடியில் இருக்கும் இசைப் பள்ளியில் வண்ணத்துப்பூச்சிகளாய் வளைய  வந்த குழந்தைகளை அமரவைத்துவிட்டு, நம் முன் வந்தமர்ந்தார் தேவி.

இசை, இங்கே உங்கள் சாய்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எனக்கு பூர்விகம் கேரள மாநிலம், பாலக்காடு பக்கத்தில் ஒரு கிராமம். சின்னப் பொண்ணா இருக்கிறப்போ, வருஷா வருஷம் குருவாயூர் கோயில்ல நடக்கும் சங்கீதப் போட்டியில் பாடுவேன். பாடி முடிச்சதும், அதைக் கேட்டுட்டிருந்த அப்பா, என்னை அப்படியே தூக்கிப் பாராட்டினார். அப்போ, எனக்கு ஒன்பது வயசிருக்கும். அதுக்கப்புறம், சங்கீதத்துக்காகத்தான் சென்னை வந்தேன். அப்பா கூடவே இருந்து சங்கீதம் கத்துக்கிட்டேன். சொந்த மகள் போல பாசம் காட்டிப் படிக்க வெச்சார். அவரோட மகளா, இங்கேயே தங்கிட்டேன்!'' என்ற தேவியிடம், இசைப்பள்ளி பற்றிக் கேட்டோம்.

''இந்தப் பள்ளி புதுசுனு சொல்லமுடியாது. 30 வருஷங்களுக்கு முன், தன் குருநாதர் செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவாக, பல கனவுகளோட அப்பா ஆரம்பிச்சார். லாப நோக்கம் இல்லாம ஆத்ம திருப்திக்காக நடத்திக்கிட் டிருந்த இசைப்பள்ளியை, பலரும் வணிக நோக்கத்தோட வாங்கிக்க முன் வந்தாங்க. அப்பாவுக்கு சம்மதம் இல்ல. 'உன்னால நடத்த முடியுமா?’னு கேட்டார். அவரோட உயிரான 'அய்மா’-வில் (AIMA -Academy of Indian Music and Arts) புதிதாக சில மாற்றங்களை செஞ்சிருக்கோம்'' என்றவர், பள்ளியின் சிறப்பம்சங்களைக் குறிப் பிட்டார்.

''இது ஒரு வித்தியாசமான இசைப்பள்ளி. இங்கே சாதி, மதம் கிடையாது. வயசு வித்தியாசம் கிடையாது. ரெண்டு வயசுக் குழந்தையில் இருந்து, முதியவர்கள் வரை பாட்டு கத்துக்கலாம். கர்னாடக சங்கீதம், சினிமாப் பாட்டு, சுலோகம், பஜன்னு அவங்கவங்களுக்கு வேண்டிய வடிவத்தில், இசையைக் கத்துக்கொடுக்கிறோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தினு எந்த மொழியிலும் இங்க சங்கீதம் கத்துக்கலாம். பார்ட்டியில் பாட, கோயிலில் பாடனு அந்தந்த இடங்களுக்கான பாடல்களைக் கற்றுத் தர்றோம். வெளிநாட்டில் இருக்கிறவங் களுக்கு 'ஸ்கைப்’ மூலமா வகுப்புகள் எடுக்கிறோம்.

இசை, இங்கே உங்கள் சாய்ஸ்!

பாட்டு டீச்சர் ஆகணும்னு விரும்புறவங்களுக்கு சிலபஸ் உடன் டிப்ளோமா கோர்ஸ் உண்டு. புரொஃபஷனல் சிங்கர்ஸுக்கு தனிப்பட்ட பயிற்சி உண்டு. இப்போ, டி.வி ரியாலிட்டி ஷோக்கள்ல பாடறதுக்காக நிறையப் பேர் கத்துக்க வர்றாங்க. அவங்களுக்கான 'வாய்ஸ் டிரெயினிங்’ தனியே இருக்கு'' எனும் தேவி, உலகம் முழுக்க இசைக் கெனவே பயணித்திருப்பவர். 5 மொழிகளில் பாடும் இவர், பண்டிட் ரவிஷங்கர் முதல் அனைத்து இசை மேதைகளுடனும் பணிபுரிந்திருக்கிறார்.

''இங்கே யார் வேணாலும் பாட்டு கத்துக்  கலாம். மேல்தட்டுக் குடும்பங்களுக்கு மட்டுமே சங்கீதம் என்ற ஒரு இமேஜ் இருக்கு. குப்பத்துக் குழந்தைகளுக்கு விருப்பமிருந்தா அவங்களுக்கும் இசையை இலவசமா கத்துக்கொடுக்கிறோம். ஏன்னா, திறமை இருக்கிற ஒரு குழந்தை, காசு இல்லாத காரணத்தால பாட்டுக் கத்துக்க முடியாம போயிடக் கூடாதுனு அப்பா அடிக்கடி சொல்வார்..!''

-  கனிவுடன் சொல்கிறார் தேவி.

டி.வி. கோபாலகிருஷ்ணன்!

ன்றைய வெள்ளித்திரை பிரபலங்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், டிரம்ஸ் சிவமணி என இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு ஆசான், டி.வி.கோபாலகிருஷ் ணன். நான்கு வயதில் மிருதங்கம் கற்று, ஆறு வயதில் அரங்கேற்றம் செய்த அபூர்வ கலைஞர். ''சங்கீதம் கத்துக்கிறதுக்காக 1950-ல் சென்னை வந்தேன். கத்துக்கிறச்சயே கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். கச்சேரி பண்றச்சயே, கத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன். செம்பை வைத்தியநாத பாகவதர்தான் என் சங்கீத குரு. அவர் நினைவாக ஒரு சங்கீதப் பள்ளி தொடங்கி, அவர் பாணியில் நானும் யார்கிட்டயும் காசு வாங்காம கலையைக் கத்துக்கொடுத்தேன். இப்போ எனக்கு 82 வயசுக்கு மேல ஆயிடுச்சு. மகள் தேவிகிட்டே ஒப்படைச்சுட்டேன்!'' என்கிறார், பூரிப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism