Published:Updated:

ஜமீன் ராணிகள்!

அரண்மனைஉ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ஜமீன் ராணிகள்!

அரண்மனைஉ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:

'ஜமீன்’ என்ற வார்த்தையே நம்மை நிமிர்ந்து பார்க்கவைக்கும் சுவாரஸ்யத்துக்குரியது. குட்டி குட்டி நாடுகளாக கட்டி ஆண்ட ஜமீன் ராஜ்யம்... வெள்ளையர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த கையோடு, படிப்படியாக மறைந்தது. என்றாலும் ஜமீனின் ஆளுகைக்குட்பட்ட அரண்மனைகளும், நிலபுலன்களுமாக, இன்றைக்கும் ஜமீன் வாரிசுகள் கம்பீரமாக அரண்மனைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி வாழும் ராணிகள் சிலரைச் சந்தித்தோம்.

பெரியகுளம் ஜமீன்

81 வயதாகும் வசந்தகுமாரி, தொடப்ப நாயக்கனூருக்கு உட்பட்ட பெரியகுளம் ஜமீனின் ராணி. ஜமீன் மார்ச்சீ ராமபத்ரா நாயுடுகாருவின் மனைவி. அவர் பேச்சில் உணர முடிந்தது அந்த ஆளுமையை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னோட ஃபாதர் மெட்ராஸ் பிரசிடென்சி போஸ்ட் மாஸ்டரா இருந்தார். நான் பொலிடிக்கல் எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன். அதோட ஐயாம் எ கிரிக்கெட் பிளேயர். என்னோட அக்காவும் நானும், இந்த ஜமீனின் அண்ணன், தம்பியை மேரேஜ் பண்ணினோம். 1955-ல மெட்ராஸ்ல ஒன்பது நாட்கள் பாட்டு கச்சேரியோட நடந்துச்சு எங்க மேரேஜ்'' என்று நம்மை விழித்துப் பார்க்க வைக்கிறார்.

ஜமீன் ராணிகள்!

''எங்க ஜமீன் பரம்பரையிலேயே அரண் மனையைவிட்டு வெளியில வந்த முதல் பெண் நான்தான். நானும் கணவரும் ப்ளைமவுத் கார்ல இந்தியா முழுக்க சுத்தியிருக்கோம். பெரும்பாலும் நான்தான் டிரைவ் பண்ணுவேன். ஃபாரினும் போயிருக்கோம்.

திருமங்கலம் வரைக்கும் ஜமீன் கன்ட்ரோல்ல இருந்துச்சு. இங்க வேலை பார்க்கிறவங்களுக்கு உணவும், நெல்லும்தான் சம்பளம். அப்போ எல்லாம் கும்பாசோறு முறை (பெரிய அகப்பை யில் சோறும் குழம்பும் கலந்து கொடுப்பார்கள். ஒரு அகப்பை சோறை இரண்டு வேளைக்கு இரண்டு பேர் சாப்பிடலாம்) இருந்தது. இங்க இருந்த பெண் பிள்ளைகள் படிக்காம இருக் கிறதைப் பார்த்துட்டு, ஸ்கூல் கட்டிக் கொடுத் தேன். இப்பவும் டிரஸ்ட் மூலமா கல்வி, மருத்துவ உதவிகள் செய்றோம்.

ஜமீன் ராணிகள்!

எனக்கு ஒரு பெண், ரெண்டு பையன்கள். எல்லோரும் திருமணம் முடிச்சு வெளியூர்ல இருக்காங்க. ஜமீன் வாரிசுகள் எல்லாரும், படிச்சு, பெரிய வேலைக்குப் போற மனநிலைக்கு இப்ப வந்துட்டாங்க. என்னையும் தங்களோட வரச் சொல்லிக் கூப்பிடுவாங்க. ஆனா, இந்த அரண்மனைக்கு ராணியாவே வாழ்ந்து முடிச் சுடறேன்னு சொல்லிட்டேன்!'' என்று தெம்போடு சொல்கிறார்.

தேவாரம் ஜமீன்

தேனி மாவட்டம், தேவாரம் ஜமீன், ஜமீந்தாரிணி பொன்னுத்தாயின் ஆளுமையின் கீழ் செயல்பட்டது. அங்கு தற்போது வசிப்பவர், பொன்னுத்தாயின் கொள்ளுப்பேரன் பிரதீப்பின் மனைவி ஜெயவாணி. ''தெப்பம், அந்தப்புரம், மாளிகை, வேலையாட்களுக்கு வீடுகள்னு, அரண்மனையே கிட்டத்தட்ட 100 ஏக்கருக்கும் மேல இருக்கும்! இந்த ஜமீன்ல என் கணவரோட உடன் பிறந்த மூன்று ஆண்கள், ரெண்டு பெண்கள்னு இந்தத் தலைமுறையில மொத்தம் ஆறு வாரிசுகள். ஊர்ல எந்த விசேஷம்னாலும் ஜமீன் குடும்பத்துக்கு முதல் மரியாதை. ஊர்க்காரங்க வீட்டுக் கல்யாணத்தில் ஜமீன்தான் தாலி எடுத்துக் கொடுப்பார். ஒரு ஜமீன் குடும்பம், பெரும்பாலும் இன்னொரு ஜமீன் குடும்பத்தில்தான் சம்பந்தம் பண்ணுவாங்க'' என்று பாரம்பர்யம் சொல்லும் ஜெயவாணி, திண்டுக்கல் மாவட்டம், பொட்டிசெட்டிபட்டி ஜமீனைச் சேர்ந்தவர்.

''அந்தக்கால அரண்மனை வாழ்க்கையில, பொண்ணுங்க யாரும் வெளியில போக மாட்டாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு, கடைக்குப் போய் எதுவுமே வாங்கினதில்லை. பலசரக்கு சாமான்ல இருந்து துணிமணி வரைக்கும் எல்லாமே வீட்டுக்கு வந்துடும். ஜமீன் ஆட்கள் ஊருக்குள்ள போகும்போது, வீதிக்கு வந்து மக்கள் வேடிக்கை பார்ப்பாங்க. வயசு வித்தியாசம் இல்லாம பெண்களை 'தாயம்மா’, 'தாயி’னும், ஆண்களை 'பாண்டியா’னும் வாஞ்சையோட சொல்லுவாங்க'' எனும் ஜெயவாணி, எம்.ஏ., பி.எட் படித்திருக்கிறார்.

ஜமீன் ராணிகள்!

சாப்டூர் ஜமீன்

துரை மாவட்டம், சாப்டூர் ஜமீன் நாகையசுவாமி காமைய நாயக்கரின் மனைவி, மகாராணி மீனாட்சி. ''நான் போடி ஜமீன் பொண்ணு. எங்க ஜமீன்ல பெண் பிள்ளைகளுக்கு மீனாட்சினுதான் பேரு வைப்பாங்க. சின்ன வயசுல என்னை மெட்ராஸ், குட்ஷெப்பர்டு கான்வென்டில் படிக்க வெச்சாங்க. எங்க ஜமீன்ல வெளியூர் போய் படிச்ச முதல் பெண் நான்தான். எங்கப்பா எம்.எல்.சி-யா இருந்தார். எனக்கு 13 வயசானப்போ அப்பா இறந்துட்டார். அதுக்குப் பிறகு போடியிலேயே தங்கிட்டேன்.

எனக்கு பணிவிடை செய்றதுக்குனே இங்க ஆட்கள் இருப்பாங்க. ஜமீன் பெண்கள் திருமணமாகிப் போகும்போது, அந்த பணியாட்களும் கூட சேர்ந்தே புகுந்த வீட்டுக்குப் போவாங்க. 1954-ல், சாப்டூர் ஜமீனான என் மாமா பையனுக்கு என்னைத் திருமணம் முடிச்சு வெச்சாங்க. எங்க ஜமீன் சொத்து, கிட்டத்தட்ட 64,000 ஏக்கர். கல்யாணத்துக்கு அப்புறம், அரண்மனைக் கிளியா இருக்கணும். போட்டோகிராஃபியும், டிராயிங்கும் என் பொழுதுபோக்கு'' என்று சொன்ன மீனாட்சி, ஜமீனின் முக்கிய சிறப்பம்சமான பிரச்னைகளுக்கு  வழங்கப்படும் தீர்ப்பு பற்றி சொன்னது படுசுவாரஸ்யம்.

ஜமீன் ராணிகள்!

''பேசித் தீர்க்க முடியாத பிரச்னையோட ரெண்டு பேரு என் மாமனார்கிட்ட வந்தாங்க. ஜமீந்தாரான அவர், ஊருல தண்ணி இல்லாத கிணத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். கிணறு வெட்டி, அந்த மண்ணை தலையில தூக்கி வெச்சுட்டு ஒருத்தர் தன்னோட வாதத்தை சொல்லணும். அவர் முடிச்சதும் அடுத்தவர் அதேபோல மண்ணை வெட்டி தலையில தூக்கிட்டு வந்து தன் தரப்பு வாதத்தை சொல்லணும்னு சொல்லிட்டார். மாத்தி மாத்தி இப்படி செஞ்சதுல, சுமை தாங்க முடியாததால, ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து ஒண்ணா சேர்ந்துட்டாங்க; கிணறு வெட்டி தண்ணியும் வந்துடுச்சு!'' என்று சொல்லும் மீனாட்சியை, தன் வீட்டு விசேஷத்துக்கு முதல் அழைப்பாக அழைக்க வந்தார் ஒருவர்.

''அம்மாவும் துரையும் வந்து கௌரவிக்கணும்!'' என்றவருக்கு உறுதிகொடுத்து, பணியாட்களை அவருக்கான மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறார். திருமணத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு தன் மகனுக்கு கட்டளையிட்டவர், தொடர்ந்தார்.

''எனக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணு. இப்ப என்னோட மருமக, அவங்களோட மருமகன்னு மூணு தலைமுறை இந்த அரண்மனை யில் இருக்கோம்!' என்றவர், கம்பீரமாய் அமர்ந்தார் தன்னுடைய அரியணையில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism