Published:Updated:

டாட்டூ சமீர்!

பசங்க ஏரியாஜி.நெல்சன்  மேத்யுஸ்  மதுரம்,  படங்கள்: இரா.யோகேஷ்வரன்

டாட்டூ சமீர்!

பசங்க ஏரியாஜி.நெல்சன்  மேத்யுஸ்  மதுரம்,  படங்கள்: இரா.யோகேஷ்வரன்

Published:Updated:

குட்டியூண்டு ஸ்டார் அளவுக்கு, நம் உடம்பில் ஒரு டாட்டூ போட்டுவிடுவதற்காக 15 ஆயிரம் ரூபாய் வாங்கும் சமீர்... இந்தியாவின் பாலிவுட், கோலிவுட் ஸ்டார்களின் ஃபேவரைட் டாட்டூ டிசைனர்! ஸ்ருதிஹாசன் தன் இடது கையில் வரைந்திருக்கும் டாட்டூ, லேட்டஸ்ட் பரபரப்பு. இதை வரைந்ததும் சமீர்தான்! சஞ்சய் தத், ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், சல்மான்கான், சுஷ்மிதா சென், ஸ்ருதி ஹாசன் என இவரிடம் டாட்டூ போட்டுக்கொள்ளும் செலிப்பிரட்டிகளின் லிஸ்ட் நீள்கிறது.

சென்னை, தி பார்க் ஹோட்டலுக்கு சமீபத்தில் விசிட் அடித்தவரிடம் ஒரு காஸ்ட்லி அண்ட் ஸ்வீட் இன்டர்வியூ!

''சஞ்சய் தத்க்கு டாட்டூ போடணும்னா... எனக்கு ரொம்ப பிடிக்கும். சிவன் டாட்டூ போட்டிருக்கார். அது அவருக்கு சமூகத்துக்கு மேல உள்ள கோவத்தை காட்டுறது மாதிரியான ஐடியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாட்டூ சமீர்!

என்னோட ஃபேவரைட் ஹீரோயின் சுஷ்மிதா... க்ளோஸ் ஃப்ரெண்டும் கூட! சுஷ்மிதாவுக்கு நான் போடுற டாட்டூ மட்டும் ரொம்ப யுனிக்கா, மீனிங்ஃபுல்லா இருக்கும். சமீபத்துல, 'ஐ.ஐ.எம் ஃபேஷன் மிஸ் இந்தியா' ஈவன்ட் பண்ணினாங்க. அது நல்லா போனதுனால ரொம்ப சந்தோஷத்துல கிரியேட்டிவா யோசிச்சு எனக்கு டாட்டூ டிசைன் சொன்னாங்க. அதைப் போட்டு விட்டேன்.

டாட்டூ சமீர்!

கங்கனா ரனாவத்துக்கு... குயின், ஸ்வார்ட், விங்ஸ் இருக்கிற மாதிரியெல்லாம் டாட்டூஸ் போட்டு விட்டேன். சின்ன வயசுல அவங்க அப்பா, அவங்கள குயின் மாதிரி பாத்துகிட்டாராம். அவங்களோட சொந்த ஊர்ல இருந்து மும்பை வந்து, லாங்வேஜ் எல்லாம் கத்துகிட்டு, இப்ப சூப்பரா சிறகடிக்கிறதுனால விங்க்ஸ்... பாலிவுட்ல அவங்க முக்கியமான இடத்தை பிடிச்சதுனால ஸ்வார்ட்னு மீனிங்ஃபுல்லா யோசிச்சு இந்த டாட்டூஸ் போடச் சொன்னாங்க. செம சூப்பர்

டாட்டூ சமீர்!

ஐடியால்ல..!'' என்று சிரிக்கும் சமீர், சிறுவயதில் படிப்பு போக மீதி நேரங்களில் டாட்டூ டிசைன் ஸ்டுடியோ ஒன்றில் வேலை செய்திருக்கிறார். பிறகு, சின்ன அளவில் சொந்தமாக ஒரு டாட்டூ ஸ்டுடியோவை ஆரம்பித்து, இன்று இந்தியாவின் பிரபலங்கள் தேடும் டாட்டூ ஆர்ட்டிஸ்ட் என்று வளர்ந்திருக்கிறார்.

அப்படி என்ன த‌னிச்சிறப்பு இவருடைய டாட்டூக்களில்?

''பொதுவாக, டாட்டூ போடுறதுக்கு மெட்டல், ஆர்கானிக்னு இருவகை இங்க் பயன்படுத்தப்படும். இதுல பழங்கள், காய்கள் மூலமா தயாரிக்கப்படும் இங்க்... ஆர்கானிக் இங்க். என்னோட டாட்டூ எல்லாமே ஆர்கானிக் இங்க் பயன்படுத்திதான் போடுறேன். இப்படி போடுறதுனால நம்மோட ஸ்கின்னுக்கு எந்தவித அலர்ஜியும், பாதிப்பும் வராது. இன்னிய தலைமுறை பசங்க, டாட்டூ போடுறதை ஸ்டைலுக்காக காண்பிக்காம, அதுல அவங்களோட எண்ணத்தை வெளிகாட்ட நினைக்கிறாங்க. அதனால நான் ரொம்ப மெனெக்கெட்டு டாட்டூ போடுறேன். ஒவ்வொரு டாட்டூவும் அந்தந்த மனிதனோட எண்ணத்தைப் பிரதிபலிக்கணும்கிறதுதான் முக்கியம். இப்படி அர்த்தமுள்ள ஒரு டாட்டூ போடறதுக்காக ஒரு வருடம் காத்திருந்து போட்டுக்கிட்டாலும் தப்பில்ல. வெறும் ஸ்டைலுக்காக போடக்கூடாது'' என்கிறார்!

கலக்குங்க சமீர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism