''ஃபோலியோ-14' என்கிற பெயரில் சென்னை, ஹயாட் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ... செம கலக்கல்! 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைனிங்' கல்வி நிறுவனத்தின் சார்பில், செப்டம்பர் 13 அன்று மாலையில் நடைபெற்ற இந்த கலர்ஃபுல் நிகழ்வில்.... நவநாகரிக உடை அலங்கார டிசைனர்களின் உடைகளை அணிந்து, அழகு பெண்கள் அணிவகுத்தது, கொள்ளை அழகு! இந்த நிகழ்வின் 'ஷோ ஸ்டாப்பர்' எனும் வகையில் பங்கேற்ற... ஸோயா அஃப்ராஸ், வண்ணவண்ண உடையிலும் ஒய்யார நளின நடையிலும் பார்வையாளர்களின் கரகோஷத்தை அள்ளினார். இந்த ஆடைகள் அனைத்தையும் ஒவ்வொருவிதமான தீமுடன்... சாயல், தீபா, சுரேஷ், சங்கீதா, வேதிகா, சர்தார், ரிபிக்கா, அஞ்சும் பராக் ஆகிய ஃபேஷன் டிசைனர்கள் உருவாக்கியிருந்தனர். இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டிசைனிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்திருந்த ஆடையும் இதில் இடம்பிடித்தது சிறப்பு!


