Published:Updated:

டயானா... லவ் யூ... மிஸ் யூ!

ஃப்ளாஷ்பேக்ந.ஆஷிகா

டயானா... லவ் யூ... மிஸ் யூ!

ஃப்ளாஷ்பேக்ந.ஆஷிகா

Published:Updated:

'இங்கிலாந்தின் இளவரசி' என்கிற ஆடம்பர அடையாளத்தையும் மீறி, 'நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று மக்கள் கொண்டாடும் அன்புக்குச் சொந்தக்காரர்... டயானா! தோற்றத்தில் இளமையும்

டயானா... லவ் யூ... மிஸ் யூ!

புதுமையும், உள்ளத்தில் எளிமையும் இரக்கமும்... இதுதான் டயானாவின் அக, புற அடையாளங்கள். விபத்தொன்றில் சிக்கி, 36 வயதில் இந்த ஏஞ்சல் பறந்து சென்று 17 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும்... 'டயானா’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளத்தில் பெருகுகிறது நேசம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்கூல் டீச்சர் டயானா, இளவரசியான பயணம்... சுவாரஸ்யமானது.

இங்கிலாந்து, பக்கிங்ஹாம் அரண்மனை எலிசபெத் மகாராணியின் செக்ரெட்டரியை, டயானாவின் அக்கா ஜேன் திருமணம் செய்துகொண்டார். டயானாவின் அப்பா அல்டாஃப், அரண்மனையின் குதிரை பராமரிப்பு வீரர். இவர்களைப் பார்க்க அரண்மனைக்குச் செல்லும் டயானா அவ்வப்போது அங்கு நடக்கும் விழாக்களிலும் பங்கேற்பார். இந்த அழகு தேவதையை இளவரசர் சார்லஸ் பார்த்து காதல் கொண்டதும் அப்படி ஒரு விழாவில்தான்.      

காதல் செய்தி அறிந்த நிமிடத்திலிருந்து துரத்த ஆரம்பித்தன, உலக கண்களும், கேமராக்களும். டயானாவின் குணம், சார்லஸின் பிடிவாதக் காதல் இரண்டுமே மகாராணியை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தன. அரச குடும்பத்தில் நடைபெற்ற முதல் காதல் திருமணம்.

20 வயதில் வேல்ஸ் இளவரசியான டயானா, அரண்மனைக்குள்ளேயே சுருக்கிக்கொள்ளாமல், மருத்துவமனைகள், எய்ட்ஸ் நோயாளிகள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் என பொதுவெளியில் இயங்கினார். இவையெல்லாம்தான் டயானாவை இங்கிலாந்து மட்டுமல்லாது, உலகெங்கும் அனைவர் மனதிலும் சிம்மாசனமிட வைத்தன. அரச குடும்பத்து குழந்தைகளுக்கு அரண்மனைக்கே வந்து ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதுதான் வழக்கம். ஆனால், தன் மகன்கள் வில்லியம், ஹென்றி பள்ளிக்குச் சென்று படித்தால் மட்டுமே மக்களோடு மக்களாக பழகும் வாய்ப்பு கிடைக்கும் என்று முடிவெடுத்தார் டயானா.

ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கை கசப்பாக மாற, சமூக சேவைகளில் அதிக நேரம் செலவழித்தார். விரிசல் வெளி உலகுக்கு தெரிய வந்தபோது, 'என் மேல் தவறில்லை' என்றார் சார்லஸ். 'நான் சிம்மாசனத்தில் அமரும் ராணியாக இருக்க விரும்பவில்லை. மக்கள் மனங்களில் ராணியாக விரும்புகிறேன்!' என்றார் தொலைக்காட்சிப் பேட்டியில் டயானா. இதற்குப் பிறகு, 'அரண்மனையா, டயானாவா... மக்கள் யார் பக்கம்?’ என்று மீடியா ஒட்டெடுப்பு நடத்த, 'டயானா!’ என்றனர் 83 சதவிகித மக்கள்!

டயானா... லவ் யூ... மிஸ் யூ!

மக்கள் ஆதரவு இளவரசி பக்கம்தான் என்று தெரிந்ததும் அமைதியாக இருந்தனர் அரண்மனைவாசிகள். ஆனால், மறைமுக இன்னல்கள் தொடர்ந்தன. 'திருமணமான கமீலா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறேன்’ என்று சார்லஸ் பகிரங்கமாக அறிவிக்க, டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் வெளியிட்ட நூலில், 'டயானாவும் நானும் நெருக்கமாக இருந்துள்ளோம்’ என்று செய்தி வெளியாக, காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

டயானா... லவ் யூ... மிஸ் யூ!

விவாகரத்துக்குப் பிறகு, அரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் மகனான டோடியுடன் பழகுகிறார் டயானா என்ற செய்தி பரவியது. இவர்களைப் படம் எடுத்துவிட வேண்டும் என்று பின் தொடர ஆரம்பித்தனர் மீடியா புகைப்படக்காரர்கள். 1997-ம் ஆண்டு, ஆகஸ்ட் 31 அன்று பாரீஸின் ஓர் உணவகத்தில் இருந்து டயானா, டோடி, பாதுகாவலர் மற்றும் வண்டி ஓட்டுநர் கிளம்ப, புகைப்படக்காரர்கள் துரத்த ஆரம்பிக்க, ஃப்ளாஷ்களில் இருந்து தப்பிக்க 150 கி.மீ வேகத்தில் பறந்த கார் விபத்தில் சிக்கியது. சம்பவ இடத்திலேயே டோடி மற்றும் ஓட்டுநர் இறக்க, பாதுகாவலர் மற்றும் டயானா இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எப்போதும் புன்னகை தவழும் அந்தத் தேவதையை ரத்தச் சகதியாக பார்த்த மருத்துவர்கள், அழுதுகொண்டேதான் சிகிச்சை அளித்தனர். ஆனால், அது பலனளிக்கவில்லை!

இறப்புக்குப் பின்னும் விடவில்லை டயானாவை. இது விபத்தா, கொலையா என்று செய்திகள் பரபரக்க, ஓட்டுநர் குடித்திருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணம் என்று முடித்து வைத்தது போலீஸ். ஏஞ்சல் பறந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன! இன்றும் அவரின் கல்லறையில் சிந்தும் கண்ணீர்த் துளிகள்... அவர் இறந்தும் வாழ்கிறார் என்பதற்கு சாட்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism