Published:Updated:

நெட் ஜோக்ஸ்!

ஜோக்ஸ்தொகுப்பு: நிலா

நெட் ஜோக்ஸ்!

ஜோக்ஸ்தொகுப்பு: நிலா

Published:Updated:

உங்களுக்கு வயசாயிடுச்சா..?!

நெட் ஜோக்ஸ்!

எழுபதுகளில் இருக்கும் அந்தக் கணவன், மனைவி இருவருக்கும் மறதிப் பிரச்னை. ''நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மறக்காமல் இருக்க, ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...'' என்று அறிவுறுத்தினார் டாக்டர். அன்று மாலை காபி தயாரிக்க எழுந்த பாட்டியிடம், ''எனக்கு இன்னிக்கு டீ கொடு... பேப்பரில் எழுதி எடுத்துட்டுப் போ...'' என்றார் தாத்தா. ''டீதானே, எனக்கு மறக்காது...'' என்ற பாட்டியிடம், ''அப்படியே ரெண்டு பிஸ்கட்டும் எடுத்துட்டு வா... நான் வேணும்னா பேப்பர்ல எழுதித் தரட்டுமா..?'' என்றார் தாத்தா. ''டீயும், பிஸ்கட்டும்தானே... எனக்கு மறக்காது...'' என்று கிளம்பிய பாட்டியை மீண்டும் அழைத்தவர், ''தாகமா இருக்கு... கொஞ்சம் தண்ணியும் எடுத்துட்டு வா. எதுக்கும் நான் பேப்பர்ல எழுதித் தர்றேனே..!'' என்று கேட்க, ''அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் உங்களுக்கு டீ, பிஸ்கட், தண்ணி எடுத்துட்டு வர்றேன்!'' என்று கிச்சனுக்குள் சென்றார் பாட்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

15 நிமிடங்கள் கழித்து வந்த பாட்டி காபி கோப்பையைத் தாத்தாவிடம் கொடுக்க, அவருக்கோ கோபம்.

''நான் உங்கிட்ட கேட்ட பிரெட் எங்கே..?!''

நெட் ஜோக்ஸ்!

வாலுப் பசங்க!

வகுப்பில், பென்ச்சில் இருந்து எழுந்து ஆசிரியையிடம் சென்றான் சாம்.

''செய்யாத ஒரு விஷயத்துக்காக நான் தண்டனை அனுபவிக்கணுமா மிஸ்..?''

''நிச்சயமா இல்ல...''

''நான் இன்னிக்கு ஹோம்வொர்க் பண்ணல!''

தன் கர்ப்பிணி அம்மாவின் வயிற்றைப் பார்த்து குழப்பமாகிக் கேட்டான் அவள் முதல் பையன்.

''உள்ள என்னம்மா இருக்கு..?''

''ஒரு அழகான தங்கச்சி பாப்பா!''

''அவளை ஏம்மா நீங்க சாப்பிட்டீங்க..?!''

நெட் ஜோக்ஸ்!

டிஷ்யூம்... டிஷ்யூம்!

ராஜேஷ§க்கும் லாவண்யா வுக்கும் சண்டை. இருவரும் பேசி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. மறுநாள் காலை ஆறு மணிக்கு வெளியூர் போக வேண்டிஇருந்தது ராஜேஷ§க்கு. தூக்கத்தில் கும்பகர்ணனான அவனை இதுபோன்ற அதிகாலை வேலைகளுக்கு வழக்கமாக லாவண்யாதான் எழுப்பிவிடுவாள். 'ஆனால், இந்த மௌனயுத்த சமயத்தில் எப்படி அவளிடம் எழுப்பச் சொல்லிக் கேட்பது?' யோசித்த ராஜேஷ், 'நாளை காலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பிவிடவும்... முக்கிய வேலை இருக்கிறது...’ என்று ஒரு பேப்பரில் எழுதி, லாவண்யா படுக்க வருவதற்கு முன்பாக அவள் தலையணை மீது வைத்துவிட்டு தூங்கிவிட்டான்.

மறுநாள் காலை ராஜேஷ் விழித்து கடிகாரம் பார்த்தபோது, மணி ஏழரை. அலுவல் சம்பந்தமான முக்கியமான பயணம் தாமதமாகிவிட்டதில், ராஜேஷ் ரொம்பவே அப்செட்! அருகில் நின்றிருந்த லாவண்யாவிடம், ''முக்கியமான வேலைனு சொல்லியும், என்னை நீ எழுப்பிவிடல இல்ல?!'' - தாம்தூம் என்று குதிக்க, அவள் முறைத்தபடியே அவன் தலையணையைக் கைகாட்டினாள். அதன் அருகே ஒரு பேப்பர் படபடத்துக்கொண்டிருந்தது. ராஜேஷ் எடுத்துப் படித்தான்...

'மணி அஞ்சு ஆயிடுச்சு... முக்கியமான வேலை இருக்குனு சொன்னீங்களே... எழுந்திரிங்க..!’

நெட் ஜோக்ஸ்!

அம்மா ராக்ஸ்!

ஒவ்வொரு முறை புது லிப்ஸ்டிக் போட்டுப் பார்க்கும்போதும், பாத்ரூம் கண்ணாடியில் முத்தமிட்டுச் செல்லும் தன் மகளின் பழக்கத்தை அவள் அம்மா எவ்வளவோ கண்டித்தும், அவள் அதை நிறுத்துவதாக இல்லை.

அன்றும் பாத்ரூம் கண்ணாடியில் மகள் முத்தமிட்டு வந்திருக்க, கடுப்பானாள் அம்மா. அங்கிருந்தே மகளை அழைத்தாள்...

''டீனா... நான் இங்க வெச்சிருந்த பிரஷ்ஷைக் காணாமே... பார்த்தியா..?''

''எந்த பிரஷ்ம்மா..?!''

''அதான்... டாய்லெட் க்ளீனிங் பிரெஷ்... நீ முத்தம் கொடுக்கிற கண்ணாடியைக்கூட தேய்ப்பேனே..?''

''!!!!!''

நெட் ஜோக்ஸ்!

பொம்மைக் கதை...  உண்மைக் கதை!

தாத்தா இனி பிழைக்க மாட்டார் என்று கூறிவிட்டார் டாக்டர். தன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த தாத்தா, ''நீ பரண்ல வெச்சிருக்கிற அந்தப் பெட்டியில அப்படி என்னதான் இருக்குனு நான் தெரிஞ்சுக்கணும்..!'' என்றார் பாட்டியிடம், தன் கடைசி ஆசையாக. அமைதியாக ஆமோதித்த பாட்டி, அந்தப் பெட்டியை எடுத்து வந்து தாத்தாவிடம் கொடுக்க, அதில் இரண்டு பொம்மைகளும், 25 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்தது.

''என்ன இது..?''

''எனக்குத் திருமணமானபோது, என் பாட்டி எனக்கொரு அறிவுரை கூறினார்... 'எப்போதெல்லாம் உன் கணவர் உன்னைக் காயப்படுத்துகிறாரோ, அப்போதெல்லாம் அமர்ந்து ஒரு பொம்மை செய். மனம் அமைதியடைந்துவிடும்’ என்றார்.''

தாத்தா பெட்டிக்குள் பார்த்து, 'நல்லவேளை... இரண்டு பொம்மைகள்தான் இருக்கின்றன!’ என்று மனதுக்குள் மகிழ்ந்தவாறே,

''சரி... இந்தப் பணம்..?'' என்றார்.

''நான் செய்த பொம்மைகள் விற்று சம்பாதித்தது!''

நெட் ஜோக்ஸ்!

நீயா... நானா?!

''டாக்டர்... என் மனைவிக்கு வரவர காது சரியா கேட்கலைனு நினைக்கிறேன்...'' என்ற தினேஷிடம், டாக்டர் அவர் மனைவியின் செவித்திறனை சோதிக்க ஒரு வழிமுறையைச் சொல்லி அனுப்பினார். வீட்டுக்குச் சென்ற தினேஷ், கிச்சனில் நின்ற மனைவியிடம் இருந்து 40 அடி தூரத்தில் நின்றுகொண்டு, ''விஜி... இன்னிக்கு டின்னருக்கு என்ன?'' என்றான். விஜியிடம் இருந்து பதில் இல்லை. அடுத்ததாக, 30 அடி தூரம் வரை அருகில் சென்று, ''விஜி... இன்னிக்கு டின்னருக்கு என்ன?'' என்று கேட்க, பதில் இல்லை. சந்தேகம் கிட்டத்தட்ட உறுதியாக, டாக்டர் சொன்னபடி 20 அடி தூரத்தில் நெருங்கி நின்றபடி, ''விஜி... இன்னிக்கு டின்னருக்கு என்ன?'' என்றான். சமையலை கவனித்தபடியே, ''தோசை! இதோட மூணாவது முறை சொல்றேன்!'' என்றாள் விஜி கடுப்பாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism