Published:Updated:

பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!

சர்வேஅவள் விகடன் டீம்

பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!

சர்வேஅவள் விகடன் டீம்

Published:Updated:

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கா.முரளி,    தி.கௌதீஸ், அ.ஆமினா பீவி, கோ.க.தினேஷ், நா.ராஜமுருகன்

'அவள் விகடன் பதினேழாம் ஆண்டு சிறப்பிதழுக்காக ஒரு ஸ்பெஷல் சர்வே...' என்று யோசித்தபோது, நம் கண்களில் மின்னியவர்கள்... பட்டாம்பூச்சிகளாக சிறகடித்துக்கொண்டிருக்கும் பதினேழு வயது ப்ளஸ் டூ மாணவிகள்தான். புரிந்தும் புரியாமலும் இருக்கும் இரண்டும்கெட்டான் வயதான இந்த வயதில் எடுக்கும் முடிவுகள்தான், அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக இருக்கும். ஆம்... கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதற்கான கடைசி படியில் நின்றுகொண் டிருக்கும் வயதாயிற்றே!

பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மாணவிகளின் உலகம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக ஏழு கேள்விகள் கொண்ட சர்வே தாளுடன் விகடன் மாணவ பத்திரிகையாளர்கள் களத்தில் இறங்கினார்கள். சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், விருத்தாசலம், திருச்செங்கோடு, விருதுநகர், கோவில்பட்டி, திருவண்ணாமலை,  தஞ்சாவூர், கரூர், நாமக்கல், திருவாரூர், திண்டிவனம், தேனி, புதுச்சேரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல் என பல ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 2,500 மாணவிகளை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் இருந்து பதில்களைப் பெற்றனர்.

இந்த சர்வேயின்போது, நமக்குக் கிடைத்த அனுபவம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்...

தேனி, அரசு, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வே தாளை நன்கு படித்த மாணவிகள். 'நீங்கள் படிப்பது ஸ்டேட் கவர்ன்மென்ட் ஸ்கூல், சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல்?' என்ற கேள்வியைப் படித்ததும் சற்றுத் திணறி, ''இதுக்கு அர்த்தம் என்ன?'' என்று தயக்கத்துடன் கேள்விகளை வீசினார்கள். தெளிவுபடுத்திய பிறகும்கூட ஏதோ ஒரு சந்தேக மனதோடுதான் பதிலை நிரப்பினார்கள்.

பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!

'ப்ளஸ் டூ-வுக்கு பிறகு என்ன படிக்க ஆசை?' என்ற கேள்விக்கு டாக்டர், இன்ஜினீயர் என்று கொடுக்கப்பட்டிருந்த ஆப்ஷன்களைவிட, 'மற்றவை' என்று கோடிட்ட இடத்தில் டீச்சர், அக்ரி என்று எழுதி ஆச்சர்யப்படுத்தினார்கள் நிறைய மாணவிகள். இவர்களிடம் ''டீச்சர் ஆகி என்ன பண்ணப் போறீங்க?'’ என்றபோது வந்த பதில், அதிர்ச்சியில் உறைய வைத்தது. ''டீச்சர் வேலையில நிறைய நேரம் சும்மாவே பொழுது போக்கலாம்' என்பதுதான் அவர்களின் பதில்!

பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!
பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!

'உங்களை எந்தவிதத்தில் அழகுபடுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?' என்ற கேள்விக்கு, ''வீட்டுலதான்... வெளியில போறதுக்கு அப்பா - அம்மா விடமாட்டாங்க'’ என்று தங்களின் சூழ்நிலையைப் புரியவைத்தார்கள் நடுத்தர மற்றும் சிறுநகரங்களைச் சேர்ந்த மாணவிகள். ஆனால், சென்னை, கோவை போன்ற சில நக ரங்களின் மாணவிகளின் பதில் இதற்கு நேரெதிர். முடிந்தால் வாரத்துக்கு ஒரு தடவைகூட பியூட்டி பார்லருக்கு விசிட் அடிப்பவர்களும் இவர்களில் அதிகம் இருக்கிறார்கள். பெரும்பாலும் பெற்றோருடன் மட்டுமே செல்ல அனுமதி கிடைக்கிறது.

நடுத்தர மற்றும் சிறுநகர மாணவிகளில் சிலருக்குத்தான் 'ஃபேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால், 'பர்சனலாக ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு 'ஸ்மார்ட் போன்' என்பது பற்றியே சில ஊர்களில் தெளிவுபடுத்தவும் வேண்டியிருந்தது. புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகளில் பெரும்பாலானவர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' பற்றி அத்தனை அறிமுகம் இல்லாமல்தான் இருக்கிறது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் மாணவிகளில் 'பர்சனல் போன் வைத்திருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, ''இதை அவசியம் சொல்லணுமா? ஏன்னா, நாங்க வாட்ஸ்ஆப் எல்லாம் யூஸ் பண்றோம்னு தெரிஞ்சா, ஸ்கூல்ல என்ன சொல்வாங்களோனு பயமா இருக்கு'’ என்று தயக்கத்துடன் பதிலை 'டிக்’ செய்தார்கள். சென்னை பள்ளிகளைப் பொறுத்தவரை, பெரும்பாலான மாணவிகளிடமும் பர்சனல் போன் இருக்கிறது. இதில் காஸ்ட்லி மொபைல்களும் அடக்கம். தினமும் பள்ளி விட்டதும், டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், வீட்டுப்பாடம் எல்லாவற்றையும் முடித்துவிட்டு இரவு சக மாணவிகளோடு 'வாட்ஸ்ஆப்’பில் சாட் செய்வதுதான் இவர்களுடைய முக்கியமான வேலை.

பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!
பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!

''எப்போ பார்த்தாலும் படி... படி... படி... இந்த வார்த்தையை தவிர, ஸ்கூலுக்கோ, பேரன்ட்ஸுக்கோ வேற வார்த்தையே கிடைக்காது. ஏகப்பட்ட பிரஷருக்கு மத்தியில இருக்கிற எங்களுக்கு, 'வாட்ஆப்’ல சாட் பண்றது மட்டும்தான் ஒரே ரிலாக்ஸேஷன். ஸோ வீ என்ஜாய்ட் இட்!'’ என்று கண்களில் சந்தோஷம் பறக்க சொல்கிறார்கள், சென்னை மாணவிகள்.

சென்னை மாணவிகளிடம் ''ஃப்ரண்ட்ஸோட அடிக்கடி எந்த டாபிக் பற்றி பேசுவீர்கள்?'’ என்று கேட்டதும்... ''பேரன்ட்ஸ் பிரஷர் பத்திதான்'’ என்று கோரஸாக பதில் வந்து அதிர வைத்தது. ''அந்தப் பொண்ணு பாரு எப்படி படிக்கிறானு கம்பேரிசன் வேற பண்ணுவாங்க. அவங்களோட டார்ச்சர் பத்திதான் அதிகம் பேசுவோம்'' என்பவர்கள், இன்டர்நெட்டை படிப்பு தவிர கேம்ஸ் ஆட, ஃபேஸ்புக்கில் உலாவ, டிவீட் அடிக்க என்று சகலத்துக்கும் உபயோகிக்கிறர்கள்.

பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!

பொதுவாக பிள்ளைகளின் டிரெஸ் சென்ஸ் விஷயத்தில் நடுத்தர மற்றும் சிறு நகரங்களில் சுடிதார் மாதிரியான உடைகளும்... மாநகரங்களில் மார்டர்ன் உடைகளும் அதிகமாக மாணவிகளால் விரும்பப்படுகின்றன. ஆனால், மாநகரங்களிலும் பெற்றோர்களின் கட்டளைக்கிணங்க அதிகமான மாணவிகள் சுடிதார்தான் அணிகிறார்கள்.

மாநகரம், நடுத்தர நகரம் மற்றும் சிறுநகரம் என்று எல்லா ஊர் மாணவிகளுமே பெரும்பாலும் சினிமா மீது கூடுதல் ஆர்வத்தோடுதான் இருக்கிறார்கள். சக மாணவிகளிடம் படிப்பைத் தவிர, இவர்கள் அதிக மாக விவாதிப்பது சினிமா பற்றித்தான்! சொல்லப் போனால், படிப்பைக் காட்டிலும் அதிகமாக விவாதிக் கும் விஷயமாகவே இருக்கிறது இந்த சினிமா!

இதற்கு அவர்கள் சொல்லும் பதில் - ''சினிமா தான் எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு!''

சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் சர்வே கேள்விகளை கொடுத்ததும்தான் தெரிந்தது, அங்குள்ளவர்களுக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும். படிக்கத் தெரியாது என்கிற விஷயம்! இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே! அவர்களுக்கெல்லாம் கேள்விகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாம் சொல்லிக்கொண்டே வர, அதைக் கேட்டுக் கேட்டு விடைகளை 'டிக்’ செய்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism