Published:Updated:

பொறுப்புக்கார காவல் தோழிகள்!

கே.அபிநயா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியம், ரா. வருண் பிரசாத்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெருநகரங்களின் அலுவலகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், நிகழ்ச்சிகள் என்று எங்கெங்கிலும் பெண் செக்யூரிட்டிகள் சல்யூட் அடிப்பது, சமீபத்திய புத்துணர்வுப் பதிவு!

''போலீஸ் ஆகறதுதான் என் கனவு. அது நிறைவேறாம போச்சேனு வருத்தப்பட்டேன். இந்த செக்யூரிட்டி வேலை, அந்தக் கவலையைப் போக் கிடுச்சு. இதுவும் காவல் காக்கும் வேலைதானே!'' என்று சொல்லும் ரெஜினா மேரி மலர், சென்னை, அண்ணா சாலை தனியார் நிறுவனமொன்றின் செக்யூரிட்டி.

''பத்தாவதுதான் படிச்சிருக்கேன். குடும்பத்தைக் காப்பாத்த, கணவருக்கு கைகொடுக்கறதுக்காக இந்த வேலைக்கு வந்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், போகப்போக தன்னம்பிக்கைனா என்னனு இந்த வேலையும், இது தர்ற பொருளாதார பலமும் எனக்குச் சொல்லி கொடுத்திருச்சு!'' என்கிறார் மலர்ந்த முகத்துடன்.

பொறுப்புக்கார காவல் தோழிகள்!

''படிக்காத பெண்கள் எல்லாம் வீட்டு வேலைக்குத் தான் போகணுமா? யூனிஃபார்ம் போட்டுக்கிட்டும் வேலைக்குப் போகலாம். இந்த லேடி கார்டு வேலைக்கு சந்தோஷமா வாங்க! காலையில ஆறு மணிக்கு வந்துட்டு, நைட்டு ஆறு மணிக்குக் கிளம்பும்போது, டயர்டாதான் இருக்கும். ஆனா, அதெல்லாம் பார்த்தா முடியுமா!'' என்று வெகு உற்சாகமாக சொல்கிறார் ஷியாமளா தேவி. இவர், சென்னையில் 210 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டி.

''வர்றவங்களுக்கு வணக்கம், குட் மார்னிங்னு சொல்லும்போது, சிலர் எங்களைப் பார்த்து ஒரு சிநேகப் புன்னகை தந்துட்டுப் போனாலும், பலர் அங்க ஒரு மனுஷி நிக்கிற உணர்வே இல்லாம,

பொறுப்புக்கார காவல் தோழிகள்!

போவாங்க. அதனால, 'நீங்க படிச்சு பெரிய அதி காரியா வரும்போது, உங்க ஆபீஸ்ல நிக்கிற செக்யூரிட்டியைப் பார்த்து சிரிச்சுட்டுதான் உள்ள போகணும்!’னு எங்க பிள்ளைங்ககிட்ட எல்லாம் சொல்லி வெச்சுருக்கோம்!'' என்று சொல்லும் செக்யூரிட்டி பெண்கள் சிலரின் குரலில் அத்தனை ஆதங்கம்!

சென்னை, எஸ்.வி.எஸ்.எஸ். செக்யூரிட்டி சர்வீசஸின் இயக்குநர், வெங்கடாசலத்திடம் பேசியபோது, ''சென்னையில 100 ஆண் செக்யூரிட்டிகளுக்கு, 10 பெண் செக்யூரிட்டிகள் என்ற விகிதத்தில்தான் இப்போதைக்கு இருக்காங்க. இது படிப் படியா அதிகரிக்கும். ஏன்னா, லேடி செக்யூரிட்டியோட வேலைத் தரம் நல்லா இருக்கு. அதுக்கு அவங்களோட பொறுப்புணர்ச்சிதான் காரணம்''  என்று நற்சான்றிதழ் கொடுத்தார்!

காவல் தோழிகள் வாழ்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு