Published:Updated:

டாம் அண்ட் ஜெர்ரி கப்பிள்!

பொன்.விமலா, படங்கள்: தே.தீட்ஷித்

டாம் அண்ட் ஜெர்ரி கப்பிள்!

பொன்.விமலா, படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:

''காலையில எழுந்தவுடன் உங்க முகத்துல யாராவது தூசு தட்டி எழுப்பினா கோபம் வருமா வராதா..? இவ்ளோ இல்லீங்க... காலையில எந்திரிக்கும்போதே இவர் மேல அவ்ளோ கோபம் வரும் எனக்கு!''

- ஜெகன் மீது செல்லப் புகார் பட்டியலை அடுக்கத் தயாரானார் அவர் மனைவி வான்மதி.

''பெர்ஃபக்டா இருக்கணும், வீட்டை சுத்தமா வெச்சுக்கணும், எடுத்த பொருளை அங்கேயே வைக்கணும்னு எல்லாம் சொல்லிச் சொல்லியே இவர் பண்ற டார்ச்சர் இருக்கே... ரொம்ப ஓவர்! என்னிக்காச்சும், எங்கயாச்சும் வீட்டுல ஒரு பொருள் கலைஞ்சு கிடந்தாப் போதும்... லெக்சர் கொடுத்தே கொன்னுடுவார். இவருக்கு பொண்ணு தர மாட்டேன்னு எங்க வீட்ல ஒத்த கால்ல நின்னாங்க. ஆனா, நான் ரெண்டு கால்லயும் குதி குதின்னு குதிச்சு அடம் பண்ணி இவரைக் கல்யாணம் பண்ணினேன். ரெண்டு வருஷம் ஓடிருச்சு... இந்த தூசு தட்டியோட நான் குப்பை கொட்ட ஆரம்பிச்சு!'' என்று ஜெகனுக்கு வான்மதி புது பட்டப்பெயர் சொல்ல,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்க லவ்ஸ் ஆரம்பிச்ச கதையை நான் சொல்றேன்...!'' என்று கொசுவத்தி சுற்றினார் ஜெகன்.

டாம் அண்ட் ஜெர்ரி கப்பிள்!

''நான் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருந்த நேரம், நாடகத்துலயும் இருந்தேன். அப்படி ஒரு நாடகத்துல நடிக்கும்போதுதான் வான்மதியைச் சந்திச்சேன். பொதுவா நம்மைச் சுத்தி கேர்ள்ஸ் கூட்டம் எப்பவும் டிராஃபிக் ஜாம் ஆகும். செமையா கடலை வறுப்பேன். அப்படித்தான் வான்மதி கூடவும் பேசிட்டு இருந்தேன். திடீர்னு ஒருநாள் வான்மதி 'ஐ லவ் யூ’ சொன்னா. 'ஏம்ம்மா... ஏன்..? பார்க்க சின்னப் பொண்ணா இருக்கே... அறியாத வயசு, தெரியாத மனசு. போய் பொழைக்கிற வழியைப் பாரு போ...’னு அனுப்பிட்டேன். ஒரு வருஷம் கழிச்சு, 'இப்பவும் ஐ லவ் யூ!’னு வந்து நின்னா. இந்த முறை 'மீ டூ!’ சொல்லிட்டு, ஜாலியா லவ் பண்ணினோம். அவங்க வீட்டுல எங்க கல்யாணத்துக்கு ஒப்புக்கவே இல்ல. அப்புறம்...''

- பெரிய இடைவெளிவிட்டு சுவாரஸ்யத்தை தூண்டித் தொடர்ந்தார் ஜெகன்.

''அயன் படத்துல நடிச்சது மூலமா சூர்யா மட்டுமில்ல, சிவகுமார் சாருக்கும் அறிமுகமானேன். இவங்க ரெண்டு பேர்கிட்டயும் நிறைய நல்ல விஷயங்கள், அனுபவங்கள் கத்துக்கிட்டேன். சின்ன வயசுல இருந்தே நான் என் பாட்டி கூடதான் வளர்ந்தேன். எந்த பின்புலமும் இல்லாமதான் சினிமாவுக்கு வந்தேன். மெள்ள மெள்ள சினிமாவில் பரிச்சய முகமானேன். என்னை விட 10 வயது சின்னப் பொண்ணான வான்மதி, எனக்காக அவங்க வீட்டுல நடத்துற போராட்டத்தைக் கேட்ட சிவகுமார் சார், எனக்காக வான்மதி வீட்டுக்குப் போய் பெண் கேட்டு, அவங்களை சமாதானப்படுத்தினார். எங்க கல்யாணமும் அவர் முன்னிலையில நல்லபடியா நடந்துச்சு!''

- ஃப்ளாஷ்பேக்கில் இருந்து ஜெகன் விடுபட, கொசுவத்தி அணைந்திருந்தது.  

''பி.எஸ்ஸி., மேத்ஸ் படிச்சாலும், கிளாஸிக்கல் டான்ஸ்தான் எனக்கு விருப்பம். இப்போ குட்டிப்பசங்களுக்கு டான்ஸ் கிளாஸும் எடுக்கிறேன். சமீபத்துல 'மேஜிக் லேண்டர்ன்’ நடத்தின பொன்னியின் செல்வன் நாடகத்துல நடிச்சது பெருமையான அனுபவம். ஆரம்பத்துல சினிமாக்காரன்னு இவருக்கு பொண்ணு தரவே மாட்டேன்னு சொன்ன எங்க பேரன்ட்ஸ், இப்ப நான் இவரைப் பத்தி என்ன சொன்னாலும், இவருக்குத்தான் சப்போர்ட் பண்றாங்க!'' என்கிறார் பூரித்து.

டாம் அண்ட் ஜெர்ரி கப்பிள்!

''இந்தப் பொண்ணு பார்க்கத்தான் சாது. கல்யாணத்துக்கு முன்னாடி இவ பண்ணின வேலை இருக்கே... நாங்க பண்ற லவ்ஸை எல்லாம் கார்ட்டூனா வரைஞ்சு அவ காலேஜ் பேக்ல ஒளிச்சு வெச்சிருந்திருக்கா. அதை எங்க மாமியார் பார்த்து பயந்தே போயிட்டாங்களாம். இந்த நியூஸ் எனக்கே லேட்டாதான் தெரிஞ்சது. அந்த கார்ட்டூன் புக்கை வாங்கிப் பார்த்தா... மெர்சலாயிட்டேன் போங்க. அவ்ளோ குறும்பு இவ!'' என வான்மதியின் கன்னம் கிள்ள, ஒரே அதிரி புதிரி கலாட்டாக்கள்.

''போன வருஷம் தீபாவளிக்கு இவர் எங்க வீட்டுக்கு வந்தப்போ, ஒத்த பட்டாசுகூட வாங்கிட்டு வரல. என்னைவிட என் தங்கச்சி ரொம்பவே ஏமாந்து போயிட்டா. கேட்டா, 'நான் பட்டாசுக்கு எதிரான ஆள்’னு தத்துவம் பேசுறாரு. எதுக்கெடுத்தாலும் ரூல்ஸ், அது இதுன்னு பேசிட்டே இருப்பாரு. படத்துலதான் காமெடியன். நிஜத் துல ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப சீரியஸ்!'' என்கிறார் வான்மதி.

''எனக்கும் வான்மதிக்கும் எக்கச்சக்க சண்டை நடக்கும். அதுதான் நிஜம். சண்டை போடாத தம்பதின்னு யாருமே இருக்க முடியாது. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமே உரிமையா கோவிச்சிக்கணும், அப்புறம் கொஞ்சிக்கணும். அதாங்க லைஃப்!'' என்று ஜெகன் கண்ணடிக்க, ''ஓகே ஆபீஸர்!'' என்று காதைத் திருகி அவரை கத்தவிடுகிறார் வான்மதி!

ரிப்போர்ட்டர் நோட்ஸ்!

ஜெகனின் வீடு படுசுத்தம், நேர்த்தி. ரசனைக்கு தகுந்தவாறு அலங்கரிக்க, சுவர் முழுக்க கலைப்படைப்புகள்! சிவன், பார்வதி உருவம் பொரித்த டி-ஷர்ட் அணிந்திருந்தார் ஜெகன். மீடியாவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்ற சம்பிரதாயப் பேச்சின்றி, சண்டைக்கோழி கணவன் - மனைவியாக எப்போதும் போல் இயல்பாகவே இருந்தனர். வீட்டில் பல உண்டியல்கள் வைத்து,  5

டாம் அண்ட் ஜெர்ரி கப்பிள்!

ரூபாய் காயின்கள் கையில் கிடைக்கும்போதெல்லாம் அதில் போட்டு நிரப்புவாராம் ஜெகன். சில்லறை தட்டுப்பாடு வரும்போதெல்லாம் அதை குலுக்கி எடுத்துக்கொள்வாராம் வான்மதி. மஞ்சள் நிற 'வெஸ்பா’ நிற்கிறது, வான்மதியின் வாகனமாக!

மினி நூலகம்!

ஜெகன் தன் வீட்டில் வைத்திருக்கும் மினி நூலகம், அலங்காரத்திலும் அசத்துகிறது. நடிகர் சிவகுமார் திறந்து வைத்துள்ள இந்த நூலக அறையில் உள்ள பெரும்பாலான புத்தகங்கள் வெளிநாட்டில் வாங்கியவை. புத்தகத்தின் பக்கங்களைத் திறக்கும்போது அதில் உள்ள கதைக்கு தகுந்தவாறு விரிந்து மேலெழும் உருவங்கள், வாவ்! வேறு வீட்டுக்கு மாறுதலாகிப் போனாலும் அப்படியே அந்த செட்டப்பை கழற்றிக் கொண்டு செல்வது போல அமைத்திருக்கிறார் இந்த மினி நூலகத்தை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism