Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டீஸ் குறும்பு!

கேட்டாளே ஒரு கேள்வி!

எங்களுடைய 4 வயது பேத்தி மோனீஷ்வர்ஷினி, விநாயகர் சதுர்த்தியின்போது தன் அப்பாவிடம், ''விநாயகரோட அப்பா பெயர் என்ன? அம்மா பெயர் என்ன?'' என வரிசையாக கேட்டுக்கொண்டே வந்தாள். அவரும், ''அம்மா பெயர் பார்வதி, அப்பா பெயர் பரமசிவன், தம்பி பெயர் முருகன்'' எனக் கூறிக்கொண்டே வந்தார். திடீரென்று அவள், ''அவங்க வீட்டுல என்ன சாமியை வெச்சு பூஜை செய்வாங்க?'' என்று கேட்டதும், பதில் கூறமுடியாமல் திகைத்து நின்றார் அவள் தந்தை. இந்தக் காலத்து சுட்டிங்களோட பிரெய்ன் எப்படி வேலை செய்யுது பாருங்க!

- சு.கண்ணகி, மிட்டூர்

குட்டீஸ் குறும்பு!

ஃபை... ஃபை... ஃபை... சமாளிஃபை!

ஒருசமயம் நவராத்திரி கொலுப்படியில் பொம்மைகளை அடுக்கும்போது, 'அஷ்டலக்ஷ்மி செட்’டில் சந்தான லக்ஷ்மி பொம்மை உடைந்துவிட்டது. ''அடடா! இப்படி உடைஞ்சு போச்சே... தனியாகவும் கிடைக்காதே!'' என்று நான் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த என் பேத்தி ''அதனால் என்ன பாட்டி! இந்த லக்ஷ்மியை வைக்கலாமே! என்று கூறி, பழைய 'துர்கா லக்ஷ்மி, சரஸ்வதி’ செட் பொம்மையிலிருந்து லக்ஷ்மி பொம்மையை எடுத்து வைத்துவிட்டு, ''இப்போ பார்... எட்டு லக்ஷ்மியும் இருக்கு'' என்று சொன்னாள். ''இது வெறும் லக்ஷ்மி... சந்தான லக்ஷ்மி என்றால், கையில் குழந்தையுடன் இருப்பாள்'' என்றேன். அதற்கு என் பேத்தி, ''யாராவது கேட்டா, 'குழந்தை, உள்ளே தொட்டில்ல தூங்கறது’னு சொல்லிட்டா போச்சு!'' என்றாளே பார்க்கலாம். பொம்மை உடைந்த வருத்தம் மறைந்து, பேத்தியின் சாதுர்யம் சிரிக்க வைத்தது.

- சங்கரி வெங்கட், சென்னை-63

குட்டீஸ் குறும்பு!

மினிமம்... மேக்ஸிமம்!

பக்கத்து வீட்டுப் பையன் மகேஷ், ஆங்கில மீடியத்தில் 4-ம் வகுப்பு படிக்கிறான். பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவான். பெற்றோரை 'மம்’, 'டாட்’ என்று அழைப்பான். ஒரு நாள், கல்லூரி மாணவர்கள் சிலர் மகேஷைக் கூப்பிட்டு, ஆங்கிலத்தை வைத்தே அவனைக் கலாய்த்தார்கள். ''டேய் மகேஷ்! உங்கம்மாவை 'மம்’ங்கிறே! உங்க சின்னம்மா, பெரியம்மாவை எப்படிக் கூப்பிடுவே?'' என்று கேட்டார்கள். சிறிது நேரம் யோசித்தவன், ''சின்னம்மாவை மினிமம் (Minimum),  பெரியம்மாவை மேக்ஸிமம் (Maxmum)னு கூப்பிடுவேன்'' என்றதும், சுற்றிலும் ஒரே சிரிப்பலை!

- பத்மினி கோவிந்தராஜ், மதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism