Published:Updated:

ரிங்ரோடு சுபா!

நிஜ மகளிர் மட்டும் திரைப்படம்கே.ஜி.மணிகண்டன், படம்: க.பாலாஜி

ரிங்ரோடு சுபா!

நிஜ மகளிர் மட்டும் திரைப்படம்கே.ஜி.மணிகண்டன், படம்: க.பாலாஜி

Published:Updated:

விரைவில் வெளிவரவிருக்கும் 'ரிங்ரோடு சுபா’ கன்னடப் படம்தான், 'சாண்டல்வுட்' எனப்படும் கன்னட திரையுலகின் தற்போதைய டாப் டாபிக்!

அப்படியென்ன இதில் விசேஷம்? 100 வருட இந்திய சினிமா வரலாற்றில், முதல் முறையாக பெண்கள் மட்டுமே இணைந்து உருவாக்கியிருக்கும் படம்!

படத்தின் இயக்குநர் பிரியா பெல்லியப்பா, தயாரிப்பாளர் ரஞ்சனி ரவீந்திரதாஸ், வசனகர்த்தா ரேகா ராணி, ஒளிப்பதிவாளர் ரேஷ்மி சர்க்கார், இசையமைப்பாளர் வாணி ஹரிகிருஷ்ணா, படத்தொகுப்பாளர் மரியா டிஸோசா, ஒப்பனைக் கலைஞர் பூனம் பிரசாத், ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா கிருஷ்ணா, கலை இயக்குநர் சித்ரலேகா ஷெட்டி, புகைப்படக் கலைஞர்கள் அவிஷா மற்றும் மெஹிஷா, நடன இயக்குநர்கள் மயூரி, சந்திரிகா, சக்தி... என அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் பெண்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படப்பிடிப்பு முடிந்து சவுண்ட் மிக்ஸிங் பணிகளுக்காக சென்னை வந்திருந்த 'ரிங்ரோடு சுபா’ படத்தின் இயக்குநர் பிரியா பெல்லியப்பாவைச் சந்தித்தோம்.

ரிங்ரோடு சுபா!

ஓவியர், புகைப்படக் கலைஞர், குறும்பட, விளம்பரப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட பிரியாவின் சொந்த ஊர், கர்நாடக மாநிலம் கூர்க். புனே திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பயின்ற இவருடைய முதல் படமே இதுதான்!

''துணிச்சலான ஒரு முடிவையோ, செயலையோ பெண்கள் முயற்சிக்கும்போது, 'இதெல்லாம் வேலைக்கு ஆகாது’ங்கிற நோக்கம், பலரோட பார்வையில தெரியுது. ஆனா, எந்த ஒரு செயலையும் பெண்கள் செய்வாங்க; செய்யமுடியும்! இதை நிரூபிக்கத்தான் முழுக்க முழுக்க பெண் டெக்னீஷியன்கள் இணைந்து இந்தப் படத்தை எடுத்திருக்கோம். பெரிய பயணத்துக்கு முதல்ல எடுத்து வைக்கிற ஒரு அடிதான் முயற்சி. அந்த முயற்சி என்னோடதா இருக்கிறது கூடுதல் சந்தோஷம்!''

- அரைகுறை தமிழில் பேசினாலும் அழகாவே ஆரம்பிக்கிறார் பிரியா.

''மும்பையில் விளம்பரப்படங்களை இயக்கிட்டு இருந்தப்போ, இந்தத் துறையில் நிறைய பெண் தொழிலாளர்களைப் பார்த்திருக்கேன். ஆனா, சினிமா துறையில் அதிக அளவு பெண் தொழிலாளர்கள் மத்த மாநிலங்களில் ஏன் இல்லைனு யோசிச்சேன். அதனாலேயே எல்லா டெக்னீஷியன்களும் பெண்களா இருக்கணும், பெண்களா மட்டும்தான் இருக்கணும்னு முடிவெடுத்தேன். ஆனா, இதுக்கான தேடல் ரொம்ம்ம்....பப் பெரிசு! எல்லா மாநிலத்துலயும் இருக்கிற திரைப்படம் சார்ந்த பெண் தொழிலாளர்களைத் திரட்டி, ஒரு புள்ளியில நிப்பாட்டுறதுக்கே பட்ஜெட்ல பாதி காலி. 'படத்தைவிட இந்த முயற்சி இன்னும் நல்லா இருக்கு. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. தைரியமா பண்ணு!’னு உற்சாகப்படுத்தினார் தயாரிப்பாளர். இந்தச் சுதந்திரம் போதாதா? பெண் திறமைகளை தேடிப் பிடிச்சி கொண்டுவந்தோம்!’

2003-ம் ஆண்டு பெங்களூரில் ஒரு பெண், தனக்கு நிச்சயிக்கப்பட்டவரை கொலை செய்த சம்பவம்தான் 'ரிங்ரோடு’ படத்தின் கதைனு பலரும் எழுதியிருக்காங்க. மொத்தப் படமும் அந்தச் சம்பவத்தை மட்டுமே சுத்திக்கிட்டு இருக்காது. ஒரு ஷாக்கிங் சம்பவம், வேறு சில ரியல்லைஃப் சம்பவங்கள்னு படத்துல மூணு கதைகள் இருக்கு. பெண்கள் சேர்ந்து எடுக்கிறதுனால, இது ஆண்களுக்கு எதிரான படமா இருக்குமோனு கற்பனை பண்ண ஆரம்பிச்சுடாதீங்க! இது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர். படம் முடிஞ்சு வெளியே வரும்போது, ஒரு ரிங்ரோட்டுல பயணம் பண்ணிட்டு வந்தா எப்படி இருக்குமோ, அந்த உணர்வு கண்டிப்பா இருக்கும். துனியா விஜய், நிகிதா முக்கியமான கேரக்டர்களில் நடிச்சிருக்காங்க. கன்னட சினிமாவின் மாஸ் ஹீரோ 'கிச்சா’ சுதீப், எங்க படத்துல ஒரு பாட்டு பாடியிருக்கிறது எங்களுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி!'' என்று பெருமூச்சு விட்டவர்,

''பெண்களா சேர்ந்து வேலை பார்க்கிறது ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு. அதுக்காக பெண்களோட மட்டும்தான் வேலை பார்ப்பேன்னு சொல்ல முடியாது! அடுத்தடுத்த படங்களிலும் பெண் தொழிலாளர்கள் அதிகமா இருப்பாங்க!'' என்று சொல்லி அளவாகச் சிரித்தார் பிரியா பெல்லியப்பா!

பிரியாவின் ஆசை: ''தமிழ்ப்படங்கள் நிறைய பார்ப்பேன். சமீபத்துல, 'வேலையில்லா பட்டதாரி’ பார்த்தேன். தனுஷ் பிரமாதமா நடிச்சிருந்தார். தமிழ்ல எனக்குப் பிடிச்ச இயக்குநர், மணிரத்னம். அமேஸிங் ஃபிலிம் மேக்கர். பத்தாம் வகுப்புவரை ஊட்டியிலதான் படிச்சேன். அதனால தமிழ்மேல ஆர்வம் தானா வந்துடுச்சு. வாய்ப்புகள் கிடைச்சா, தமிழ்லயும் நிச்சயமா படம் இயக்குவேன்!'' 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism