Election bannerElection banner
Published:Updated:

எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு?!

ந.ஆஷிகா, படம்: தே.தீட்ஷித்

கிச்சனை இடநெருக்கடி இல்லாமலும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள டிப்ஸ்கள் வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

வாங்கும் டப்பாக்கள் எல்லாம் ஒரே அளவிலோ அல்லது ஒரே டிசைனாகவோ இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

• காய்கறி நறுக்கும்போது அடியில் ஒரு பேப்பரை போட்டுக்கொண்டால், சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.

• 25 கிலோ அரிசியை வாங்கிவந்தால், அதை இரண்டு, மூன்று டப்பாக் களில் பிரித்துச் சேமிக் கலாம்.

• எண்ணெய் வைக்கும் இடத்துக்கு அருகில் கத்தி, தேங்காய் துருவி, குட்டி ஸ்பூன் போன்றவற்றை வைத்தால், அவசரத் துக்கு தேடும்படி இருக்காது.

• அன்றாட தேவைக்கான மளிகை, மசாலா பொருட்களை அடுப்புக்கு இடதுபுறத்தில் வைத்துக்கொள்ளலாம்.

• எண்ணெய் கீழே கொட்டி விட்டால், உடனே அதன் மீது கோதுமை அல்லது அரிசி மாவைப் போட்டு, வழித்தெடுத்தால், எண்ணெய் பசை இருக்காது.

எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு?!

• அடுப்புக்கு கீழே உள்ள 'சிலாப்’பில், தினமும் பயன்படுத்தும் குக்கர் மற்றும் கடாய்களை முதல் வரிசையில் வைத்துக்கொள்ளலாம். தேவைக்கு மட்டுமே பயன் படுத்தும் மாவு டப்பாக்களை அடுத்த வரிசையில் வைத்துக் கொள்ளலாம்.

• முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால் உடனே அதன் மீது உப்பைக் கொட்டினால், வாடை குறைந்துவிடும், சுலபமாக சுத்தம் செய்யலாம். சமையலறையில் நாம் நிற்பதற்கு வலதுபுறத்தில் மிக்ஸி, கிரைண்டர், 'மைக்ரோவேவ் அவன்’ போன்றவற்றை வைத்தால், கையாள சுலபமாக இருக்கும்.

• கண்ணாடிப் பொருட்கள், கப் அண்ட் சாஸர் போன்றவற்றை எப்போதும் அடுப்புக்கு எதிர்புறத்தில், மேலேதான் வைக்க வேண்டும். அடுப்பு அருகில் வைத்தால் பிசுபிசுப்பு ஒட்டும். வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு?!

• வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

• 'சிலாப்’களாக இல்லாமல், மாடுலர் கிச்சன்களில் வரிசையாக பல 'டிரா’க்கள் வைத்திருப்பவர்கள், முதல் வரிசையில்... டீ, காபித்தூள், சர்க்கரை போன்ற... காலை எழுந்ததும் தேவைப்படும் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது அடுக்கில்... சாம்பார் பொடி, இட்லி மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மசாலா பொருட்கள்; மூன்றாவது அடுக்கில்... பருப்பு வகைகள்; நான்காவது அடுக்கில்... அஞ்சறைப் பெட்டி, அருகிலேயே காய்ந்த மிளகாய் என வைத்துக்கொள்ளலாம். மொச்சை, பட்டாணி போன்ற பயறு வகைகளை ஐந்தாவது அடுக்கில் வைக்கலாம். கடைசி அடுக்கில் அரிசி வகைகளை வைக்கலாம்.

• அடுப்புக்கு வலப்புறம் எண்ணெய் கன்டெய் னர்களை வைக்கலாம். சந்தையில் இப்போது பலவிதமான 'ஹூக்’கள் கிடைக்கின்றன. அவற்றை சுவரில் மாட்டி, ஆயில் கன்டெய்னரை  மாட்டிவிட்டால், கீழே சிலாப்பில் எண்ணெய் பசைபடும் என்கிற கவலை இல்லை. சுவரில் மாட்ட வசதியில்லை என்றால், சின்ன ஸ்டாண்டு வைத்து, அதில் தடிமனான அட்டை வைத்து, அதன் மீது எண்ணெய் கன்டெய்னரை வைத்துப் பயன்படுத்தலாம். அதை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம்.

• உப்பு ஜாடிகளில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைக்கலாம். வெறும் கையில் உப்பை எடுத்தால், உப்பில் நீர் கசியும். பச்சை மிளகாய் போட்டு வைத்தால் நீர் கசியாது. வாரம் ஒருமுறை அதனை மாற்றினால் போதுமானது.

• துருவிய தேங்காயை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் பால் வைக்கும் டிரேயில் வைத்துவிட்டால், 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

• 'என் வீட்டு கிச்சனில் நான்தான் ராணி' என்ற நினைப்பு வரவேண்டும். அப்போதுதான் அதன் மீது உரிமையும், அக்கறையும், நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்ற ஆசையும் வரும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு