Published:Updated:

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

Published:Updated:

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில லேடி 'தல’களின் ஹாட் ஹிட்ஸ் இது!

காக்கிச் சட்டை கார்த்திகா!

'நீ சாதாரணமா நின்னு போட்டாலே உன் உயரத்துக்கு பேஸ்கட்பால் சாம்பியன் ஆகிடுவே!’னு உசுப்பேத்தி உசுப்பேத்தியே, இ.சி.இ மூன்றாமாண்டு படிக்கும் கார்த்திகாவை பேஸ்கட்பால் சாம்பியன் ஆக்கிட்டாங்க அவங்க ஃப்ரெண்ட்ஸ்! ''இதுவரை 5 தடவை தமிழ்நாடு பேஸ்கட்பால் அணியோட கேப்டனா இருந்து போபால், மத்தியப்பிரதேசம், ஆந்திரானு நிறைய டீம்களை வின் பண்ணி, தொடர்ச்சியா 5 கோல்ட் மெடல் வாங்கிருக்கேன். நேஷனல் லெவல்ல போலீஸ் டீம்ஸ் ஆடின மேட்ச்ல நானும் ஒரு பிளேயரா ஆடிருக்கேன். நான் அத்லெட்டும்கூட. லாங் ஜம்ப்ல ஸ்டேட் லெவல் பிளேயர். பேஸ்கட்பால்ல நேஷனல் டீமுக்கு கேப்டனாகணும். இன்னொரு பெரிய ஆசையும் இருக்கு. கார்த்திகா ஐ.பி.எஸ்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட்டே....ன்ஷன்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

ஆல் இன் ஆல் அபர்ணா!

சமீபத்தில் அனிருத்தின் 'நம்ம சென்னை’ வீடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் காம்பியரிங் செய்து பட்டையக் கிளப்பின அந்த வாயாடிப் பெண்தான், இந்த அபர்ணா. ''எம்.எஸ்.சி., எலெக்ட்ரானிக்ஸ் - மீடியா தேர்ட் இயர் படிச்சாலும், அண்ணா யுனிவர் சிட்டி 'சப்தம்’ கல்ச்சுரல்ஸ் கிளப் பிரெசி டென்ட், தியேட்டர் கிளப் ஆர்கனைசர்னு படிப்பைத் தாண்டி எனக்குப் பல வேலைகள். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக் ஸ்கூல் மாணவி என்பதால, 'வெஸ்டர்ன் சாங்குக்கு உன் வாய்ஸ் நல்லா இருக்குமே!’னு என்னை துபாய்ல நடந்த ஒரு ரெக்கார்டிங்க் காக அழைச்சுட்டுப் போனார் தெரியுமா! 'கோச்சடையான்’ல பின்னணி பாடியிருக் கேன், நிறைய டாக் ஷோல பேசியிருக்கேன், சித்ரா அம்மாகூட பாடின ஓணம் கோரஸ் மறக்க முடியாதது. பேட்மின்டன்ல ஆறு கோல்ட் மெடல், கிளாஸ்லயும் நான்தான் டாப்பர். மறந்துட்டேனே, மூணு ஷார்ட் ஃபிலிம்லயும் நடிச்சிருக்கேன்!''

ஓ... லிஸ்ட் ஒருவழியா முடிஞ்சிருச்சா..?!

வருத்தப்படாத 'வாலிபால்’ சங்கத் தலைவி!

காலேஜ் ஸ்போர்ட்ஸ் கிளப் செக்ரட்டரி, எம்.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படிக்கும் திவ்யா. ''இதுவரை பல பரிசுகளை ஜெயிச்சிருந்தாலும், ப்ளஸ் டூ படிக்கும்போது தமிழ்நாடு சார்பா விளையாடி ஜெயிச்ச கோல்ட் மெடல் மறக்கவே முடியாது. அனிமேஷன், வெப் டிசைனிங் என் இன்ட்ரஸ்ட். புதுசு புதுசா 'கால்சி’ எல்லாம் வேற புரோகிராம்ஸ் வெச்சி கிரியேட் பண்ணி, அதை ஃப்ரெண்ட்ஸ் லேப்டாப்ல போடும்போது, 'திவ்யா கால்சி’னு என் பேர் வரும்... அப்டியே ஜிவ்வுனு ஏறும்! ஒரு பெரிய 'கோடர்’ ஆகி எல்லாத்தையும் புரோகிராம்ல கொண்டு வரணும், 631 காலேஜஸ்ல அண்ணா யுனிவர்சிட்டி வாலிபால் டீம் ஃபர்ஸ்ட் வரணும்... இது ரெண்டும்தான் லட்சியம்!''

வாழ்த்துகள் மேடம்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''பிராப்ளம்ஸ்தான் பிராப்ளமே!''

சர்வதேச செஸ் பிளேயர், இ.சி.இ இரண்டாம் ஆண்டு படிக்கும் நந்திதா. ''நாலாவது படிக்கும்போது பரமபத போர்டுக்கு பின்ன இருக்கிற செஸ் கட்டங் கள்ல விளையாட்டா விளையாட ஆரம்பிச்ச நான், இன்னிக்கு உலகின் சிறந்த கோச், ஆர்.பி.ரமேஷோட ஸ்டூடென்ட். நடந்து முடிந்த காமன்வெல்த்தில் வெள்ளி வாங்கி னேன். ரேட்டிங் லிஸ்ட்டில் ஆசிய அளவில் 7-வது இடத்திலும், உலக அளவில் 16-வது இடத்திலும் இருக்கேன். இந்த 17 வயசுக் குள்ள, செஸ் போட்டிகளுக்காக பிலிப் பைன்ஸ், ரஷ்யா, இலங்கைனு இதுவரை 18 நாடுகள் சுத்திட்டேன். சவுத் ஆப்பிரிக்கா, சீனானு பறக்கப்போகும் பட்டியல் நீளுது. எனக்கு ஒரே ஒரு பிராப்ளம், மேத்ஸ். சரியான தலைவலி. அதனாலதான் அதுக்கு 'பிராப்ளம்ஸ்’னு பேர் வெச்சிருக்காங்க போல!''

என்ன ஒரு கண்டுபிடிப்பு!

தொகுப்பு: க.தனலட்சுமி,
 படங்கள்: ச.ஹர்ஷினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism