'மாமா... நீங்க எங்க இருக்கீங்க..?!’னு ரிங்டோன் வெச்சு அட்ராஸிட்டியைக் கூட்டுறது, பாய்ஸ் ஸ்டைல்! ரிங்டோன்ல கேர்ள்ஸோட செலக்ஷன் என்ன?! சென்னையில உள்ள எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி மாணவிகளிடம் கேட்டோம்!

தீக்ஷிதா, இ.சி.இ, இரண்டாம் ஆண்டு

'எங்கிட்ட ரெண்டு சிம் இருக்கு. நான் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகை. அதனால ரெண்டுலயும் தலைவர் சாங்தான் ('மெர்சலாயிட்டோம்...’ போங்க!). தவிர, ஒவ்வொருத்தருக்கும் ஒரு டோன் வெச்சுருக்கேன். அப்பாவுக்கு 'வா வா என் தேவதையே’, அம்மாவுக்கு 'நீயே நீயே என் தாயே நீயே’, ஃப்ரெண்ட்ஸுக்கு 'முஸ்தஃபா’, பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸுக்கு 'என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சான்’ - இப்படி எக்கச்சக்க டோன்ஸ் இருக்கு. வீட்டுக்குப் போயிட்டா, 'சைலன்ட் மோட் ஆன்’. ஏன்னா... பேஸிக்கலி நான் ரொம்ப நல்ல பொண்ணுங்கோ... நம்புங்கங்கோ!''

அட நாங்க நம்பிட்டோங்கோ!

ஷாஹின் தாஜ், ஐ.டி, இறுதியாண்டு

'நான் கேம்பஸ்ல செலக்ட் ஆனது விகடன் வரைக்கும் தெரிஞ்சு, பேட்டி எடுக்க வந்திருக்கீங்களா?! ஓ... இது வேற விஷயமா? என்னோட ரிங்க்டோன், மொபைல் கம்பெனி போன்லயே வெச்சுருக்கிற டோன் தான். ஹலோ, என்ன சிரிக்கிறீங்க? மூவி சாங் வைக்கிறது, இன்னும் கொஞ்ச நாள்ல அவுட் டேட் ஆகி டும். என்னை மாதிரி டிஃபால்ட் டோன்தான், பெரிய பெரிய பிசினஸ் மேன் எல்லாம் வைக்கிறது. அது மட்டும் இல்ல பாஸ்... இப்போ நான் ஸ்டூடென்ட் இல்ல... கொஞ்ச நாள்ல வேலைக்குப் போகப் போறேன். அப்புறம் பெரிய பிசினஸ் உமன் ஆகலாம். அதுக்குதான் இப்ப இருந்தே இந்த டோன். எப்பூடி?!'

அம்மாடி!

ரோஜா, இ.சி.இ, மூன்றாம் ஆண்டு

''என் ரிங்டோனை எதுக்குக் கேட்கறீங்க? எதுவும் வில்லங்கம் ஆயிடாதே! சரி, சொல்றேன். என் ரிங்டோன் காயத்ரி மந்திரம் (இதுக்குதான் இவ்வளவு முன்னேற்பாடா..!). என்ன, என்னைப் பார்த்தா பக்திமயமான பொண்ணு மாதிரி தெரியலையா? கண்டுபிடிச்சிட்டீங்களே! இந்த டோன் வெச்சாதான், சைலன்ட் மோட்ல போட மறந்து, கிளாஸ் நடக்கும்போது கால் வந்துட்டா லும், எங்க சார் திட்ட மாட்டாரு. எப்படி நம்ம ஐடியா?! ஐயோ, உண்மையை உளறிட்டேனா? பரவாயில்லை. அவள் விகடன்ல இந்த ஆர்டிக்கிள எங்க சார் படிக்க மாட்டார். எல்லாம் 'காயத்ரி' பாத்துக்குவா!'

எல்லாம் அந்த காயத்ரிக்குத்தான் வெளிச்சம்!

நிவேதா, இ.இ.இ, மூன்றாம் ஆண்டு

'எனக்கு இன்ஸ்ட்ரூமென்டல் மியூஸிக்னா ரொம்பப் பிடிக்கும். விஜய் டி.வி மகாபாரதம் சீரியல்ல, அர்ஜுனனும் திரௌபதியும் சந்திக்கிற ஸீன், செம்ம..! அப்போ ஒரு பி.ஜி.எம் போடுவாங்க பாருங்க... ஆஸம். அவ்ளோ அழகான இன்ஸ்ட்ரூமென்ட் பிளே அது. சீரியல் பார்த்துட்டு இருந்தப்போவே முடிவு பண்ணிட்டேன்... இதான் என் ரிங்டோன்னு!''

பி.ஜி.எம் ரெடி. அர்ஜுனன் எப்போ வருவார்..?!

கட்டுரை, படங்கள்: அ.பார்த்திபன்