Published:Updated:

டோன்ட் டேக் எ செல்ஃபி புள்ள!

தொகுப்பு: ச.ஸ்ரீராம், படம்: பா.காளிமுத்து

டோன்ட் டேக் எ செல்ஃபி புள்ள!

தொகுப்பு: ச.ஸ்ரீராம், படம்: பா.காளிமுத்து

Published:Updated:

ஹேர்ஸ்டைல் சொல்லித் தரும் ஆப்ஸ்!

பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் விஷயங்களில் ஒன்று, ஹேர்ஸ்டைல். அவர்களுக்கென்றே புதுமையான, வித்தியாசமான ஹேர்ஸ்டைல்களை வழங்குகிறது 'ஹேர்ஸ்டைல்ஸ் ஃபார் வுமன்’ எனும் ஆப்ஸ்!

டோன்ட் டேக் எ செல்ஃபி புள்ள!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆப்ஸில் பலவிதமான ஹேர்ஸ்டைல்களின் விவரங்களும், அதைச் செய்வதற்கான வழிமுறைகளும், விளக்கப்படங்களுடன் அளிக்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் டவுன்லோடு செய்துள்ளனர். இதில் தினசரி அப்டேட்களும் வந்து குவிகின்றன. ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப்ஸை நீங்களும் டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=apptastic.hairstyleswomentutorials

செல்ஃபி எடுக்கும் செல்லங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியவை. இவற்றில் நாம் நமது கூகுள் கணக்கின் மூலம் லாக் இன் செய்த பின்புதான் உபயோகப்படுத்த முடியும். அப்படி இந்த போனை பயன்படுத்தத் துவங்கும்போது அதில், ஏற்கெனவே உள்ள கணக்கின் மூலம் துவக்கவா, அல்லது புதிய கணக்கின் மூலம் துவக்கவா என திரையில் கேட்கும். அப்போது புதிய கணக்கின் மூலமோ அல்லது பழைய கணக்கின் மூலமோ துவங்கும்போது, செல்போனில் உள்ள கூகுள் ப்ளஸ் எனும் சமூக வலைதளத்துடன் நம் கணக்கு இணைந்துவிடும்.

 புதிதாக உருவாக்கப்படும் கணக்குகளில், அந்த கணக்குடன் இணைந்தே கூகுள் ப்ளஸ் கணக்கையும் இலவசமாக அளித்துவிடுகிறது கூகுள். இதுபோன்று இணைக்கப்பட்டுவிட்டால் மால்களில், வீட்டில் என்று நீங்கள் எடுக்கும் செல்ஃபி, டிபி (வாட்ஸ்அப் படங்கள்) உள்ளிட்ட புகைப்படங்கள், இன்டர்நெட் இணைப்பு ஆன் செய்யப்பட்டவுடன், நீங்கள் அறியாமலேயே உங்கள் கூகுள் ப்ளஸ் கணக்கில் பகிரப்பட வாய்ப்புள்ளது.

செல்ஃபிக்கள் மற்றும் 'டிபி’க்களை ஆண்களைவிட பெண்கள் தனிமையான இடங்களில் அதிகம் எடுக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பாதுகாப்பு காரணமாக தங்களது புகைப்படங்களை, 'புரொஃபைல்' படங்களாக வைத்துக்கொள்ளாமல் இருப்பவர்களின் புகைப்படங்கள்கூட, இந்த வழியில் பகிரப்பட வாய்ப்புள்ளது.

டோன்ட் டேக் எ செல்ஃபி புள்ள!

எப்படித் தவிர்க்கலாம்?

• செல்போனின் செட்டிங்கில் 'பேக் அப் அண்ட் ரீசெட்' (Backup and Reset)’ ஆப்ஷனை ஆஃப் செய்வதன் மூலம் உங்கள் செல்போனில் நீங்கள் பதிவு செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்கள் உங்கள் கணக்கில் சேமிக்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது. தவிர, கூகுள் ப்ளஸ் கணக்கின் செட்டிங்கில் கூகுள் ப்ளஸ் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆப்ஸ்களில் உங்கள் புகைப்படங்களை சேமிக்கும் ஆப்ஸ் இருக்கிறதா என்பதையும் கவனித்து ஆஃப் செய்யலாம்.

•  உங்களது புகைப்படம் பதிவேற்றம் ஆனவுடன் உங்களிடம் இதனைப் பகிரலாமா என்ற கேள்வி, செல்போன் திரையில் தோன்றும். அதை கவனித்து 'நோ’ கொடுத்து விடுங்கள். கவனக்குறைவாலோ, என்னவென்றே அறியாமலோ 'யெஸ்’ கொடுத்தால்... புகைப்படம் பகிரப்படும்.

•  நீங்கள் கூகுள் ப்ளஸ் உபயோகப்படுத்த மாட்டீர்கள் என்றால், இணையதளத்தில் 'லாக் இன்’ செய்து உங்கள் கூகுள் ப்ளஸ் கணக்கை டெலிட் செய்துவிடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism