Published:Updated:

நெகிழ வைக்கும் இளையாள்!

லோ.இந்து, படம்: தி.குமரகுருபரன்

நெகிழ வைக்கும் இளையாள்!

லோ.இந்து, படம்: தி.குமரகுருபரன்

Published:Updated:

போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னால்... ''இருங்க ஒரு நிமிஷம், நைட் டியூட்டி பாத்துட்டு வந்ததுல தூக்கமில்ல. கண்ணுலாம் எரியுது'' என்று சிறிது இடைவெளிவிட்டு, ''ம்... இப்ப எடுங்க'' என்று, அத்தனை களைப்பிலும் சிறு புன்னகையை வரவழைத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார், இளையாள். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 24 வயது நர்ஸுக்கு, சமீபத்தில் நர்சிங் துறையில் அரசு சார்பில் வழங்கப்படும் 'இளம் சாதனையாளர்’ விருது கிடைத்திருக்கிறது!

நெகிழ வைக்கும் இளையாள்!

''நல்லா படிச்சு ஒரு டாக்டராகணும்ங்கிறதுதான் என் ஆசை. அப்பாவோட ஆசையும் இதுதான். ஆனா, பன்னிரண்டாம் வகுப்பு படிச்சுட்டு இருக்கும்போது, அப்பா தவறிட்டதால, அடுத்த ரெண்டு மாசத்துல வந்த தேர்வுல சரியா கவனம் செலுத்தல. 986 மார்க்தான் கிடைச்சுது. அப்பா இருந்திருந்தா... அதிக மார்க் வாங்கி, டாக்டராகும் ஆசையை நிறைவேத்தியிருப்பேன்'' என்று பெருமூச்சுவிட்ட இளையாள்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அக்கா நர்ஸா இருக்கிறதால, என்னையும் அதையே படிக்கச் சொன்னா. துளிகூட விருப்பமே இல்லாம படிச்சு முடிச்சேன். இடையில, 'அப்பா இல்லாத பொண்ணு... என்னத்த பெருசா சாதிச்சுட போறா?'ங்கிற மாதிரியான கமென்ட்ஸ், என்னை தற்கொலை வரைக்கும் துரத்துச்சு. ஆனா, 'எல்லாரும் திரும்பிப் பாக்குற மாதிரி ஏதாவது செய்யணும்'ங்கிற வெறி ஒரு கட்டத்துல வரவே, படிச்சு முடிச்சுட்டு திருவள்ளூர், அரசு மருத்துவமனையில நர்ஸ் வேலையில சேர்ந்தேன். வேலையைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். எத்தனை வேதனை இருந்தாலும், சிரிச்ச முகத்தோடவே எல்லாரையும் அணுகுவேன். இதுவரைக்கும் நூறுக்கும் மேல பிரசவங்கள் பாத்திருக்கேன். பிரசவ போராட்டத்துல ஒவ்வொரு குழந்தையையும் உயிரோட கையில எடுக்கிறப்போ... எனக்கே பெரிய பலம் கிடைக்கும்'' என்று சொல்லும் இளையாள், தற்போது எம்.பி.ஏ படிக்கிறார். பகலில் படிப்பு, இரவில் நர்ஸாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

''ஒரு முறை ஹெச்.ஐ.வி பாஸிட்டிவ் கர்ப்பிணியை கூட்டிட்டு வந்தாங்க. பிரசவ சமயத்துல குழந்தைக்கு மட்டுமில்ல, மருத்துவம் பாக்கிறவங்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கு. அதனால, அவங்களுக்கு பிரசவம் பார்க்கவே பலரும் பயந்தாங்க. நான் துணிச்சலோட பிரசவம் பார்த்தேன் தாய், சேய் ரெண்டு பேரும் நலம். அந்தக் கர்ப்பிணியோட அம்மா, என் கால்ல விழுந்து நன்றி சொன்னத இப்ப நெனச்சாக்கூட...'' - வார்த்தைகள் வரவில்லை இளைய சாதனையாளர் இளையாளுக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism