Published:Updated:

பொன்முடி... வைரமுத்து... ராமு... ஊரே பேசுதுல்ல!

சி.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

பொன்முடி... வைரமுத்து... ராமு... ஊரே பேசுதுல்ல!

சி.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:

தங்களின் வித்தியாசமான பெயர்களாலேயே கவனிக்கப்படுபவர்கள் பலர். இந்த வகையில், 'ஆண்களின் பெயர்கள்' என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களை, தம்முடையதாகக் கொண்ட சில பெண்களிடம் பேசுவோமா..!

பொன்முடி: திருச்சி காட்டூரைச் சேர்ந்தவர். தனியார் கல்லூரி விரிவுரையாளர். ''எங்கப்பா தமிழ் ஆர்வலர். பட்டிமன்றப் பேச்சாளரும்கூட. அக்காவுக்கு பாரதினும், எனக்குப் பொன்முடினும் பெயர் வெச்சார். இன்னிக்குவரை இந்தப் பெயர் என்னை ஆயிரத்தில் ஒருத்தியாதான் வெச்சிருக்கு. 'பொன்முடிங்கற பெயர்ல சங்க காலப் புலவர் இருந்தாராம், அவர் பெயரைதான் எங்கப்பா எனக்கு வெச்சிருக்கார்!’னு விளக்கம் சொல்லி ஓயல. ஸ்கூல்ல என் ஃப்ரெண்ட்ஸ் 'கோல்டன் ஹேர்’னு இங்கிலீஷில் மொழிபெயர்த்துக் கூப்பிட்டது, ஜாலி எபிசோடு!''

பொன்முடி... வைரமுத்து... ராமு... ஊரே பேசுதுல்ல!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைரமுத்து: புதுக்கோட்டை மாவட்டம், கோனாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். ''எங்க அப்பா, அம்மாவுக்கு கல்யாணமாகி 7 வருஷம் குழந்தையில்லாம இருக்க, குலதெய்வம் வைரவன்கிட்ட வேண்டிக்கிட்டதுல பொறந்தேனாம். அதனால, சாமி பேர், தாத்தா பேரை சேர்த்து வைரமுத்துனு வெச்சுட்டாங்க எங்கப்பா! எங்கயாச்சும் கூட்டத்துல நிக்கும்போது யாராச்சும் பெயர் கேட்டு நான் சொன்னா, 'உங்க பேரு வைரமுத்துவா!’னு ஆர்வமா கேட்பாங்க. அப்புறம்தான் தெரிஞ்சுது என் பேர்ல சினிமாவில் பாட்டெழுதுற கவிஞர் இருக்காருங்கிறது. ஆனா, க... வி... தை... இதுதான் எனக்கு எழுதத் தெரிஞ்ச கவிதை! என் பெயருக்கு இவ்வளவு ஈர்ப்பைக் கொடுத்த அவரை என்னிக்காச்சும் பார்க்கணும்!''

ராமஜெயம்: புதுக்கோட்டை மாவட்டம், தர்மராஜன் வயலைச் சேர்ந்த ராமஜெயம். ''எங்க தாத்தா ராமு ஞாபகமா எனக்கு ராமஜெயம்னு பேர் வெச்சாங்க. ஆனா, ராமுனு கூப்பிட்டு கூப்பிட்டு, பள்ளிக்கூட டி.சி-யிலகூட என் பெயர் ராமுனு ஆகிப்போச்சு. மாமாவை காதலிச்சு கல்யாணம் பண்ணினேன். கல்யாணப் பத்திரிகையில 'ராமு’ங்கிற பொண்ணு பெயரைப் பார்த்துட்டு பலரும் எங்க மாமாவைக் கிண்டல் பண்ணியிருக்காங்க.

இந்த சினிமா படத்துல இருந்து, நாய் வளர்க்கிறவங்க வரைக்கும் மிருகத்துக்கு வைக்கிற பெயர் ராமுதான். ரோட்டுல யாராச்சும் 'ராமு’னு கூப்பிட்டு திரும்பிப் பார்த்தா, அவங்க நாயைக் கூப்பிட்டிருப்பாங்க. வாக்காளர் அடையாள அட்டையில என் போட்டோ பக்கத்துல பெயர் 'ராமு’னு இருக்கு. ஆனா, பாலினம் 'ஆண்’னு போட்டிருக்காங்க.

இப்படி பல தடவை தர்மசங்கட மான சூழ்நிலையில நிறுத்தினாலும், என் மாமா 'ராமு’னு கூப்பிடும்போது அவ்வளவு அழகா இருக்கும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism