Published:Updated:

நீ சிரித்தால் தீபாவளி..!

வே.கிருஷ்ணவேணி வே.கிருஷ்ணவேணி

நீ சிரித்தால் தீபாவளி..!

வே.கிருஷ்ணவேணி வே.கிருஷ்ணவேணி

Published:Updated:
நீ சிரித்தால் தீபாவளி..!

குழந்தைகள் என்றாலே அழகுதான். அவர்களுடைய குறும்பு, அழுகை, சிரிப்பு, கோபம் என்று ஒவ்வொன்றுமே அழகுதான்! அந்தப் பிஞ்சு மனிதர்களின் இயல்பானதொரு நொடியை ஃப்ரேமுக்குள் கொண்டு வந்துவிட்டால், வைத்து வைத்துப் பார்க்கலாம் அந்த அழகை... இதோ, இந்தப் பக்கங்களில் உள்ள படங்களைப்போல! படங்கள் பதிவான கேமராவுக்குச் சொந்தக்காரர்கள், பகத்குமார் மற்றும் சந்திரபிரகாஷ்!

''விளம்பரம், மாடலிங், திருமணப் புகைப்படங்கள் என அனைத்திலும் பிஸியாக இருந்தாலும், வாண்டூஸ்களை படம் பிடிப்பது, எனக்கு அவ்வளவு பிடிக்கும். குழந்தைகளைப் பார்த்துவிட்டால் என் கை அனிச்சையாக கேமராவை எடுத்துவிடும். அவர்களின் சிணுங்கல், சிரிப்பு, பயம், பாசம், அழுகை, கோபம் என்று ரசித்துக்கொண்டே க்ளிக்குவேன்!'' என்கிறார் 'மக்கா போட்டோகிராஃபி’ பகத்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கிட்ஸ் போட்டோகிராஃபி சுவாரஸ்யமானது மட்டுமல்ல, மிகக் கஷ்டமானதும்கூட!'' என்று சொல்லும் 'ஆக்டனிக்லைட் போட்டோகிராஃபி’ சந்திரபிரகாஷ், 11 வருடங்களாக விளம்பரம், கமர்ஷியல் புகைப்படங்கள் என்று சுழன்றுகொண்டிருப்பவர். ''குழந்தைகள் விஷயத்தில், இந்த நேரத்துக்குள் இந்த போட்டோவை எடுத்துவிட வேண்டும் என்று எந்தக் கால வரையறையும் வைத்துக்கொள்ள முடியாது. அவர்களுடைய 'மூட்’ மிக முக்கியம். புகைப்படக்காரரும், சூழலும் குழந்தைக்குப் பிடித்துவிட்டால்... அழகழகான படங்களுக்கு உத்திரவாதம் கிடைத்துவிடும்!'' என்கிறார் சந்திரபிரகாஷ்.

நீ சிரித்தால் தீபாவளி..!
நீ சிரித்தால் தீபாவளி..!
நீ சிரித்தால் தீபாவளி..!

இந்தக் குட்டீஸ்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்தானே..?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism