Published:Updated:

ஆஹா... அம்மா வீடு!

ரா.ஆனந்தி, அ.சியாமளா கௌரி  படங்கள்: தி.விஜய், எம்.விஜயகுமார், ஞா.சுதாகர்

ஆஹா... அம்மா வீடு!

ரா.ஆனந்தி, அ.சியாமளா கௌரி  படங்கள்: தி.விஜய், எம்.விஜயகுமார், ஞா.சுதாகர்

Published:Updated:

''இரண்டு நாட்கள் திருவிழாவை, ஒரு நாளா மாத்திட்டீங்களா?'' என்று செல்லமாகக் கோபித்தாலும், திருப்பூர் 'ஜாலி டே’வை கொண்டாடித் தீர்த்தனர் நம் வாசகிகள். அவள் விகடனுடன் 'சத்யா’ நிறு வனம்  இணைய, 'சூப்பர் வாஷிங் பவுடர்’ நிறுவனமும் கைகோக்க, திருப்பூர், லட்சுமி திருமண மண்டபத்தில் அக்டோபர் 4 அன்று நடந்த ஜாலி டே, ஒரு முன்னோட்ட தீபாவளியாக நடந்து முடிந்தது!

கோவை, உடுமலை, பல்லடம், கோபிசெட்டிபாளையம், சூலூர், பொள்ளாச்சி, தூத்துக்குடி, சேலம்... என எல்லா திசைகளில் இருந்தும் வந்து குவிந்தனர் பெண்கள். திருப்பூர் மாவட்டம், முருகம்பாளைய பள்ளியின் காது கேட்காத, வாய் பேசாத மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே ஆரம்பமானது. ஆசிரியர் சித்ராவின் சைகைகளை கவனித்தே அசத்தலாக நடனமாடிய அவர்களுக்கு அரங்கம் தந்தது ஆரவாரப் பாராட்டு.

நடனப் போட்டியில் இருந்து வினாடி வினா வரை அனைத்துப் போட்டிகளிலும் எல்லா வயதுப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஹா... அம்மா வீடு!

நிகழ்ச்சியின் ஹைலைட் கொண்டாட்டமான 'உல்டா புல்டா டான்ஸ்’ல் பலத்த கரகோஷம்... பாட்டி தங்கமணியின் நடனத்துக்கு! பழைய, புதிய பாடல்களின் மிக்ஸிங்குக்கு பொருத்தமான முகபாவனைகளும், காக்டெயில் நடனமுமாக டீன்களை மேடையில் ஓரங்கட்டினார் பாட்டி. இடையிடையே நடந்த பொது நடனத்தில் 'நாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, 'எப்ப மாமா மாமா ட்ரீட்டு’ என ஒவ்வொரு பாடலுக்கும் வாசகிகள் ஆடிய ஆட்டத்தில் அதிர்ந்தது அரங்கம்!

'டான்ஸ் மச்சி டான்ஸ்’ போட்டியில், பாகம்பிரியாள் பாட்டி மாடர்ன் உடையில் 'வாம்மா துரையம்மா’ பாடலுக்கும், அவர் பேத்தி நித்யாதேவி பாரம்பர்ய உடையில் எம்.ஜி.ஆர் பாடலுக்கும் ஆட, 'ஒன்ஸ் மோர்!’ சத்தம் காதைப் பிளந்தது. மேடைக்கு கீழேயும் வயதை மறந்து ஆன் த ஸ்பாட் ஜாலி டான்ஸ் ஆடி அதகளப்படுத்தினர் வாசகிகள். கூடவே திருப்பூர் சத்யா ஷோரூமில் ஒரு புதையல் பெட்டி வைக்கப்பட்டு அந்த பெட்டியின் பூட்டை சரியான சாவியின் மூலம் திறந்த 16 வாசகிகளுக்கு அயர்ன் பாக்ஸ், மிக்ஸி, குக்கர் உள்ளிட்ட பல பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

ஆஹா... அம்மா வீடு!

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சர்ப்ரைஸ் பம்பர் பரிசான வாஷிங் மெஷின் சுபாஷினிக்கு கிடைக்க, அதை சத்யா நிறுவன பொதுமேலாளர் காந்திநாதனிடமிருந்து பெற்றுக்கொண்டார் அவர். ''ரொம்ப சந்தோஷமா இருக்கு. காலையில இருந்த த்ரில்லும் உற்சாகமும் துளியும் குறையல. கலாட்டா, டான்ஸ்னு இது எங்களுக்கு இன்னொரு கல்லூரி விழா மாதிரி இருக்கு!'' என்றார் களிப்பில். 'சத்யா’வின் வீட்டு உபயோகப் பொருட்களில் பத்துக்கும் மேல் பட்டியலிட்டு, இன்டக்‌ஷன் ஸ்டவ்வை பரிசாகப் பெற்றார் ஒரு வாசகி.

சூப்பர் ஹேர்ஸ்டைல், மெஹந்தி, பாட்டுக்குப் பாட்டு, வினாடி வினா மற்றும் சூப்பர் வாஷிங் பவுடர் சார்பில் வார்த்தை விளையாட்டுப் போட்டி என அனைத்துப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. நாள் முழுவதும் ஓயாமல் ஒலித்த உற்சாகக் குரல்களும், விழாவின் நிறைவுத்துளி வரை தோழிகளின் கண்களில் மின்னிய சந்தோஷமும், கொண்டாட்டத்தை முழுமையாக அனுபவித்தனர் என்பதை உணர்த் தியது. இதை நிரூபிப்பது போல, 'ரொம்ப நாள் கழிச்சு அம்மா வீட்டுக்கு வந்துட்டுப் போற மாதிரி இருக்குல..?!'' என்று தங்களுக்குள் பேசியவாறே வாயிலை நோக்கி நடந்தனர் பெண்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism