Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

குட்டீஸ் குறும்பு!

ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

 200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரண்டக்க... மாத்திரை!

ஊரிலிருந்து பிள்ளைகளுடன் வந்திருந்த என் மகளுக்கு லேசான வயிற்றுவலி. அதற்கு 'ரேன்டாக்’ எனப்படும் மாத்திரை ஒன்று விழுங்கினால் சரியாகும் என்பது அவள் அனுபவம். அவளின் எட்டு வயது மகனிடம், காசு கொடுத்து, அருகில் இருக்கும் மருந்துக் கடையில் அந்த மாத்திரையை வாங்கி வரச் சொன்னாள். மாத்திரை பெயரை வழியில் மறந்துவிடக் கூடாது என்பதற்காக 'ரேன்டாக்... ரேன்டாக்’ என்று உச்சரித்துக்கொண்டே செல்லும்படி கூறினாள். 'சரி’ என்று சொல்லி புறப்பட்டவன், சிறிது நேரத்தில் திரும்பி ''அந்த மாதிரி மாத்திரை இல்லைனு

குட்டீஸ் குறும்பு!

கடைக்காரர் சிரிக்கிறார்...'' என்றான். நான் குழப்பத்துடன் பேரனை அழைத்துச் சென்று, கடைக்காரரிடம் கேட்க... அவர், ''இப்போதாம்மா எனக்கு விளங்குது... 'ரேன்டாக்’னு சொல்லி அனுப்பினதை, உங்க பேரன் 'ரண்டக்க... ரண்டக்க...!''னு சினிமா பாட்டா மாத்தி, மாத்திரை கேட்டான்!'' என்றதும், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

- ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்

சுகர்ஃப்ரீ சிரிப்பு!

எங்கள் தாத்தா, ஒருநாள் சுகர்ஃப்ரீ ஸ்வீட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது என் அக்கா மகள் ஒருத்தி, ''தாத்தா, எனக்கும் இந்த ஸ்வீட் கொஞ்சம் தர்றீங்களா?'' என்று கேட்டாள். அதற்கு, ''இது சுகர்ஃப்ரீ ஸ்வீட்மா! தாத்தாவுக்கு சுகர் இருக்குறதுனால இந்த ஸ்வீட் சாப்பிடுகிறேன். நீ இதை சாப்பிட வேணாம்'' என்று சொன்னார் தாத்தா. உடனே, அந்தக் குட்டிப்பெண், ''அப்படினா, எனக்கு சுகர் வந்தவுடனே இதை சாப்பிடலாமா தாத்தா?'' என்று வெள்ளந்தியாகக் கேட்டதும், வீட்டில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது!

 - அ.நிலோபர் நிஷா, பள்ளப்பட்டி

'படையப்பா’ பன்ச்!

நவராத்திரிக்கு உறவுக்காரப் பெண் அழைக்கவே, அவள் வீட்டுக்குச் சென்றேன். அங்கு வேறு சிலரும் குடும்பத்தோடு வந்திருந்தனர். அவர்களில் ஒருவராக சோபாவில் உட்கார்ந்திருந்தான் சுமார் ஆறு வயது வாண்டு. அவன் பக்கத்தில் நியூஸ் பேப்பர் இருந்ததால், அவனைக் கூப்பிட்டு, ''பையா, அது இன்னி பேப்பர்தானே... அதை கொஞ்சம் எடுத்துக் கொடு'' என்றேன். அந்த வாண்டு பேப்பரை என் கையில் கொடுத்து, ''இது இன்னிக்கு பேப்பர்தான் மாமி. ஆனா, இதுல இருக்கிற நியூஸ் எல்லாம் நேத்திது’' என்று 'படையப்பா’ பட பாணியில் சொன்னதும், அங்கு இருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு!

- ஜெ.பிரேமா, கூந்தலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism