Published:Updated:

ஒரு நாள் ‘தொழிலதிபர்’!

கட்டுரை, படங்கள்: அ.ஜெஃப்ரி தேவ்

ஒரு நாள் ‘தொழிலதிபர்’!

கட்டுரை, படங்கள்: அ.ஜெஃப்ரி தேவ்

Published:Updated:

ம்மோட 'ஒரு நாள் தொழிலதிபர்’ பயிற்சிக்கு, இந்த முறை பெங்களூரு காலேஜ் கேர்ள்ஸ் முன் வந்தாங்க!

''வீட்டுல பூஜை இருக்கு. என்ன பண்ணணும் சீக்கிரம் சொல்லுங்க...''னு ரம்யா கேட்டதும், பொறிதட்டி அவங்கள நாம அழைச்சிட்டுப் போனது... சண்டே மார்க்கெட் மாலை கடைக்கு. அங்க குவிக்கப்பட்டிருந்த பூஜைக்கான பூக்களைப் பார்த்ததும் பூரிப்பாயிட்டாங்க ரம்யா. கடைக்காரர்கிட்ட பூ வகை விலையை விசாரிச்சவங்க ஸ்ட்ரெயிட்டா மூளையில குறிச்சிக்கிட்டு, ஆரம்பிச்சாங்க பிசினஸை.

''இருந்த இடத்துல நின்னுட்டே பிசினஸ் பண்ண நாம என்ன அம்பானியா..?''னு உள்ளங்கையில் பூவை அள்ளிக்கிட்டு வீதிக்கு வந்தவங்க, கடந்து போன யாரையும் விடல. 'இந்தப் பூவை இந்த சாமிக்குப் பயன்படுத்தினா இந்த பலன் கிடைக்கும்!’னு அவங்க திடீர் ஜோசியர் ஆனதைப் பார்த்து நாம திகைச்சு நிற்க, அங்கேயோ வியாபாரம் பரபர!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதோ... இதெல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செஞ்சது. உங்க வீட்டுல லாஃபிங் புத்தா இருக்காரா..? அட, இது அவருக்கு ரொம்பப் பிடிச்ச பூ... பிடிங்க!''னு கிட்டத்தட்ட எல்லார்கிட்டயும் வசூலைப் போட்ட அவங்க திறமையைப் பார்த்து வாயடைச்சுப் போயிட்டோம்.

ஒரு நாள் ‘தொழிலதிபர்’!

''வெள்ளிக்கிழமை வெண்ணிற பூவால் பூஜை செய்தா சிறப்பு...'', ''சாமிக்கு மஞ்சள் பூ மாலை போட்டா, அந்த வீட்டுப் பெண்ணுக்கு சீக்கிரமே மாங்கல்ய யோகம் கூடி வரும்!''னு அவங்க எடுத்துவிட்ட கதைகளில் நமக்கும் காது அடைத்துவிட, ''ஸ்டாப்..!''னு விசில் ஊதினோம். ''அண்ணே... பூவோட விலையை மட்டும் சொல்லாம இப்படி ஏதாச்சும் பிட்டை போடுங்க... அப்போதான் கல்லா நிறையும்!''னு கடைக்காரருக்கு டிப்ஸும் கொடுத்த ரம்யாவுக்கு... ஃபுல் மார்க்!

''நான் இதுவரை ரோட்டோரக் கடைகளில் சாப்பிட்டதில்ல. இன்னிக்கு வியாபாரமே பார்க்கப் போறேன். ஸோ த்ரில்லிங்!''னு பொரி விற்க ரெடி ஆனாங்க மோனிகா. ''ஆனா, ஒரு கண்டிஷன்... என்னோட முதல் போனி நீங்களா இருக்கணும். அந்தப் பொரியை வாங்கி எங்கிட்டயே கொடுக்கணும்!''னு சொன்ன அவங்களோட கண்டிஷனை ஏற்றோம்.

நாம வாங்கிக் கொடுத்த பொரியை ருசிச்சு சாப்பிட்டவங்க, ''இந்தப் பொரில என்னமோ ஒரு ஸ்பெஷல் டேஸ்ட் இருக்குப்பா. இன்னும் கொஞ்சம் கிடைக்குமா..?''னு கேட்க, ''எங்ககிட்டயேவா..? ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு வெவரம் ஆகாதும்மா!''னு நாம அலர்ட் ஆக, நிஜ(!) கஸ்டமர்களைத் தேட ஆரம்பிச்சாங்க மோனிகா. அந்த ஏரியாவில் கன்னடர்கள் அதிகம் என்பதால் சில பல கன்னட வார்த்தைகளைச் சொல்லிக் கூவ, மோனிகாவை வேடிக்கை பார்க்கவே பொரி வாங்க வந்தாங்க மக்கள். பொரியை நிறுக்க, பைகளில் அடைக்க, பணத்தை வாங்க, சில்லறை கொடுக்கனு அரை மணி நேரத்துக்கு அம்மணி செம பிஸி. சக்சஸ்ஃபுல்லா விற்பனையை முடிச்சு வந்த  மோனிகா, ''எதிர்காலத்துல என்னோட சுயசரிதையை எழுதும்போது, நான் பொரி விற்றதையும் மறக்காம எழுதுவேன். இன்ட்ரஸ்டிங்!''னு பரவசமானாங்க!

ஒரு நாள் ‘தொழிலதிபர்’!

''இங்கதான் டிரெயினிங்கா..?!''னு ’டேன்’ கேட்க, ''யெஸ்! இதுதான் ஸ்பாட்!''னு அவங்களை நிறுத்தினோம் ஒரு அகல்விளக்குக் கடையில். ''டெல் மீ... என்ன பண்ணணும்..?''னு டேன் ரெடியாக, ''தோ... இந்த விளக்கை எல்லாம் விற்கணும்... வேறென்ன!''னு சொன்னதும், விளக்கையும் கடையையும் அவங்க வெறிச்சு வெறிச்சுப் பார்க்க, கவுன்ட் டவுனை ஆரம்பிச்சோம்.

''ஹலோ... இதுக்குப் பெயர்தான் தொழிலதிபரா..?!''னு காண்டான பொண்ணுகிட்ட, ''எங்க தமிழ் சினிமாவுல எல்லாம் ஹீரோ பால் வித்துதான் பணக்காரர் ஆவாரு... பார்த்ததில்லையா? வேணும்னா 'நாளைய தொழிலதிபர்’னு வெச்சிக்கோங்க!''னு அந்தக் கன்னடக் கிளிக்கு நாம சமாதானம் சொல்ல, ''ச்ச்சீட்டிங்!''னு சிணுங்கினாலும் சேலஞ்சுக்கு ரெடியானாங்க டேன்.

கடைக்காரர்கிட்ட ஒவ்வொரு விளக்கோட பெயரையும் கேட்டு, நோட்ஸ் எழுதும்போதே, ஒரு அம்மணி கடைக்கு வந்துட்டாங்க. பதற்றத்தோட ஆங்கிலமும் கன்னடமும் கலந்து அவங்க மார்க்கெட்டிங் பண்ணின திறமையைப் பார்த்த அந்த அம்மா, தமிழில் ஏதோ டவுட் கேட்க, தனக்குத் தமிழ் தெரியாதுனு சொல்லி, விடாமல் சைகையிலேயே வியாபாரத்தை நடத்தினாங்க. இது ஏதோ விளையாடுறாங்க போலனு கஸ்டமர்கள் எல்லோரும் நகர, சீரியஸானவங்க... ஒரு ஐடியா கிடைக்க, கற்பனை வளத்தை எடுத்து விட்டாங்க. ''வழக்கமா 30 ரூபாய்க்கு 6 விளக்கு கொடுப்போம். இன்னிக்கு மட்டும் ஆஃபர்ல 30 ரூபாய்க்கு 12 விளக்கு கொடுக்கிறோம்... வாங்க வாங்க...''னு பொய் ஆஃபர் சொல்லி அழைக்க, விற்பனை ஜோர்! ''எப்பூடி..?! இதுதான் இலவசத்தோட மகிமை!''னு சொன்னவங்ககிட்ட,

''எதிர்காலத்துல இலவச கலர் டி.வி கொடுத்து ஆட்சியைப் பிடிக்கிறதுக்கான அம்சம் உங்க முகத்தில் தெரியுது!''னு சொல்ல, ''நோ பாலிடிக்ஸ்... எஸ்கேப்!''னு 'பை’ சொன்னாங்க 'டேன்’.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism